மே 13 ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த சதாசிவம் மகன் குமார் (வயது46). இவர் திருச்சி மாவட்டம் சிறுகமணி கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றினார். ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகர் அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சேதுராப்பட்டி உள்ள அரசு பொறியியல் கல்லூரி கொரானோ தடுப்புப் பணிக்கான சிறப்பு முகாமில் பொறுப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே, கடந்த புதன்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.
மன்னார்புரம் மின் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது மருங்காபுரியிலிருந்து பின்னால் வந்துகொண்டிருந்த சரக்கு வேன் மோதி குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொரானோ பணியின்போது கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்துள்ளதால் கிராம நிர்வாக அலுவலர் குமார் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்த அலுவலரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்ப்டும் என அறிவித்துள்ளார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்