முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்(வயது87) திடீர் நெஞ்சுவலியால் இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் . இதய நோய்ப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை சீராக இருந்தாலும், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனையில் தெரிவிக்கின்றனர். மன்மோகன் சிங்கிற்கு இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து இரவு 8.45 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங் உடல்நிலையை இதயநோய் பிரிவு சிறப்பு நிபுணர் பேராசிரியர் நிதிஷ் நாயக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மன்மோகன் சிங் உடல்நிலை சீராக இருந்தாலும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் எனத் தெரிவித்தனர்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மன்மோகன் சிங் தற்போது ராஜஸ்தான் மாநிலம் சார்பாக மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். 87 வயதிலும், கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் காணொலிக் கூட்டத்தில் கூட பங்கெடுத்துக்கொண்டார்
இரண்டு முறை பிரதமராகவும், நரசிம்மராவ் ஆட்சியில் நிதியமைச்சராகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்த மன்மோகன் சிங் 2009 ஆம் ஆண்டு எயம்ஸ் மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.
மன்மோகன் சிங் உடல்நலத்தால் பாதிக்கப்பட்டார் எனத் தகவல் வெளியானவுடன் பல்வேறு தலைவர்கள் அவர் விரைவாக உடல்நலம் தேற வாழ்த்துத் தெரிவித்தனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்,
டெல்லி முதல்வர் அரவிந்த் ஹெஜ்ரிவால் ஆகியோர் நலம் பெற கருத்து தெரிவித்துள்ளனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்