செய்தியாளர் கீரவாணி அழகு இளையராஜா புதுக்கோட்டை மாவட்டம்
பொன்னமராவதி வட்டம் பகவாண்டிப்பட்டி ஊராட்சி காயாம்புஞ்சை பகுதியில் சாலை விபத்து சரக்கு வேன் கவிழ்ந்து ஒருவர் பலி.பாண்டிமான் கோவில் தெருவைச் சேர்ந்த பெசலான் மகன் சுப்பிரமணியன் வயது 44. லோடுமேனாக உள்ளார் மே 14 ஆம் தேதி மதியம் 3 மணியளவில் பொன்னமராவதியிலிருந்து நெற்குப்பைக்கு காயாம்புஞ்சை வழியாக கம்பிகளை ஏற்றிக்கொண்டு டிரைவர் அடைக்கன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அருகில் லோடுமேன் அப்துல்கரீம் என்பவரும் பின்புறம் லோடுமேன் சுப்பிரமணியன் உடன் சென்றுகொண்டிருந்த போது காயாம்புஞ்சை சாலையை கடந்து செல்லும் வளைவில் திரும்பியதில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து 5 அடி பள்ளத்தில் சரிந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பின்புறம் இருந்த லோடுமேன் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி இறந்துள்ளார். அவரை மீட்டு வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்