மதுக்கடைகள் திறக்கத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில் கடை திறக்க அரசின் சார்பில் அறிவிப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில் கடை திறக்க அரசின் சார்பில் அறிவிப்பு வந்துள்ளது. இந்தியாவில் மதுவிலக்கு (Alcohol prohibition in India) என்பது பீகார், குஜராத், மிசோரம், நாகாலாந்து மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் தான் இல்லை.
மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 47 ன் கீழ் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மதுபானம் மற்றும் போதை பொருட்களைத் தடைசெய்ய வேண்டுமா என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம். ஆனால் சில குறிப்பிட்ட மதுபானங்களை மருத்துவ ரீதியாக மட்டுமே பயன்படுத்த லாம்.ஒருவேளை உச்சநீதிமன்றம் தமிழக உயர்நீதிமன்ற தீர்ப்பை ஒட்டி தமிழ்நாட்டில் டாஸ்மாக்கிற்கு தடைவிதித்திருக்குமேயானால் மற்ற மாநிலங்களில் உள்ள மது விற்பனைக்கும் அந்தந்த மாநிலங்களில் உள்ளவர்கள் தடை கேட்பார்கள். காரணம் உச்சநீதி மன்றம் ஒரு மாநிலத்திற்கு வழங்குகின்ற தீர்ப்பானது மற்ற மாநிலங்களையும் கட்டுப்படுத்தும்.
எனவே தமிழக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருப்பது ஆச்சரிய மில்லை. தவிர மதுவிலக்கு குறித்து அந்தந்த மாநில அரசுதான் முடிவெடுக்க முடியுமே தவிர உயர்நீதிமன்றங்கள் முடிவெடுக்க முடியாது.கொள்கை முடிவு எனவே டாஸ்மாக் திறப்பில் மாநில அரசின் முடிவே தீர்வானது .
கருத்துகள்