கொரனோ தொற்று அதிகரிக்கும் நிலையில், மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 10 மணி முதல் 15 நிமிடங்கள் வரை தமிழக அரசுக்கு எதிராக வீட்டு வாயிலில் போராடி மக்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்ய வீடியோ வழியாக கேட்டுக்கொண்டதுடன் தமிழகத்திற்கு நிதி தராத மத்திய அரசைக் கண்டிக்க வேண்டுமென வலியுறுத்தினார். வாயிலில் 5 பேருக்கு மிகாமல் நின்று போராட வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தன் வீட்டு வாயிலில் கருப்பு உடையணிந்து, கருப்புக் கொடியேந்தி மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார். அவருடன் திமுக இளைஞரணிச் செயலாளரும் அவரது மகனுமான உதயநிதி,மனைவி துர்கா ஆகியோர் பங்கேற்றனர். தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்திருந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் அவரவர் இல்லங்களிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இவர்கள் போராட்டம் மக்களைச் சென்று சேராத நிலை இவர்கள் ஒருபக்கம் போராட அவர்கள் கட்சியின் தொண்டர்கள் கருப்புச்சட்டையுடன் மது வாங்கிச் சென்ற நிகழ்வுகளும் உண்டு.அதோடு மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). கட்டிடத் தொழிலாளி. மனைவி பரமேசுவரி(வயது35), மகள் அர்ச்சனா(வயது17). கல்லூரியில் படிக்கிறார். ஊரடங்கு காரணமாக சிவக்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
டாஸ்மாக் கடை இன்று திறந்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து சிவக்குமார் மதுகுடித்துவிட்டு. குடிபோதையில் மதியம் வீட்டுக்கு வரவே கணவன், மனைவிக்குள் தகராறில். மனைவியைத் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. மனமுடைந்த மகள் அர்ச்சனா வீட்டிலேயே தீக்குளித்தார். அதிர்ச்சியான பரமேசுவரி மகளைக் காப்பாற்ற முயன்றார்.அவருக்கும் தீக்காயம் ஏற்பட. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் புகாரின்பேரில், அலங்காநல்லூர் போலீஸார் சிவக் குமாரை விசாரிக்கின்றனர்.
டாஸ்மாக் கடை திறந்த முதல் நாளிலேயே குடிவிட்டு தகராறு செய்த கணவரால் மனைவி, மகள் தீயில் கருகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .மேலும் ஊரடங்குக்குப் பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்ட முதல்நாளான இன்று சிவகங்கையில் குடிபோதையுடன் இருந்த ஒருவர் தன் தம்பியையும் தம்பி மனைவியையும் அரிவாளால் வெட்டியுள்ளார். இப்படி பல சம்பவம்.மதுவால் 80 சதவீதம் மக்கள் மடைதிறந்த வெள்ளம் போல வெளிவந்த சம்பவம் தி மு க ஆட்சியில் துவங்கி வைத்த மது விற்பனை தற்போது கலைகட்டி நிற்கும் நிலையில் இவர்கள் நடத்திய போராட்டம் பார்த்து பலர் சிரித்துச் சென்றதே நிகழ்வு. மக்கள் விரும்புவது பூரனமான மதுவிலக்குத்தான் அது நடக்குமா என்பது தெரியாது. தி மு க இப்படி போராட்டம் நடத்துவதை விடுத்து அடுத்து ஆட்சிக்கு வந்தால் பூரணமாக மதுவிலக்கு வரும் என அறிவித்தால் மக்கள் நம்பிக்கையைப் பெறலாம் இல்லை இதுவும் ஒரு அரசியல் நாடகமே.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்