தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இன்று மே 10 ஆம் தேதி வெளி மாநிலங்களிலிருந்து தேனி மற்றும் பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கென ஆண்டிபட்டியில் அமைக்கப்பட்டுள் ள சோதனை சாவடியில் நேரடி யாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது,அலுவலகர்களிடம் அவர் பேசும்போது, கொடைக்கானல் செல்லும் வெளி மாநில நபர்கள் குறித்த விபரங்கள் உடனடியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத் திற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினார்.தொடர்ந்து பாரத் நிகேதன் கல்லூரியில், மகாராஷ்டிர மாநிலம், சாங்கிலி மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காக சென்று, சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு, திரும்பி பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ள இளைஞர் களிடம் நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர் அவர்களின் கோரிக்கை களை கேட்டு,பின்னர் பேசும் போது,பரிசோதனை முடிவுகள் வரும் வரை,உங்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட, அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.உரிய பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, நீங்கள் வீட்டுக்கு சென்று 28 தினங்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.தொடர்ந்து அங்குள்ள அலுவலர்களிடம், தங்கியுள்ள நபர்களுக்கு தினசரி செய்திதாள்கள் வழங்கிட கூறினார்.மேலும் தினசரி பதிவுகளை உடனுக்குடனே பதிவேடுகளில் பதிவு செய்திட உத்தரவிட்டார்.இந் நிகழ்வுக ளின் போது,பெரியகுளம் சார் ஆட்சியர் செல்வி சினேகா இ.ஆ.ப., ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திரசேகர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்