முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக கேரள முதல்வர்களுடன் பிரதமர் புயல் பாதிப்புத் தடுப்பு நடவடிக்கை குறித்துப் பேச்சு

பிரதமர் அலுவலகம் புரெவி புயலால் நிலவும் சூழல் குறித்து தமிழக முதல்வருடன் பிரதமர் தொலைபேசி உரையாடல் புரெவி புயல் காரணமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் சூழல் குறித்து தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடினார். "தமிழக முதல்வர் திரு @EPSTamilNadu அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். புரெவி புயலின் காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவி வரும் சூழ்நிலைகளை பற்றி நாங்கள் ஆலோசித்தோம். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன்," என்று டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும்‌ புரெவி புயலால் நிலவும் சூழல் குறித்து கேரள முதல்வருடன் பிரதமர் தொலைபேசி உரையாடல் புரெவி புயல் காரணமாக கேரளாவில் நிலவி வரும் சூழல் குறித்து கேரள முதல்வர் திரு பினராயி விஜயனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடினார். "கேரள முதல்வர் திரு @vijayanpinarayi அவர்களுடன் புரெவி புயல் சின்னத்தால் அந்த மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்துப் பேசினேன். கேரளாவிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தேன். புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிப்போரின் பாதுகாப்பு மற்றும் நலனிற்காகப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்," என்று டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் . வங்காள விரிகுடாவின் தென்மேற்கில் `புரெவி' புயல் சின்னம் (தெற்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை) மேற்கு - வடமேற்காக புயல் நகர்ந்து டிசம்பர் 2 ஆம் தேதி மாலை/இரவில் மணிக்கு 80-90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் திரிகோணமலைக்கு வடக்கே இலங்கை கடலோரப் பகுதியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது தென் தமிழகத்தில் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்) 2020 டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் ஆங்காங்கே மிக கனமழை பெய்யக் கூடும்; டிசம்பர் 3 ஆம் தேதி தெற்கு கேரளாவில் (திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா பகுதிகளில்) கனமழை பெய்யும். டிசம்பர் 2 மற்றும் 4 ஆம் தேதிகளில் தென் தமிழகத்திலும், 3 மற்றும் 4 தேதிகளில் தெற்கு கேரளாவிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் வங்காள விரிகுடாவின் தென்மேற்கிலும் இலங்கை கடலோரத்தில் கிழக்குப் பகுதியிலும் ராட்சத அலைகள் எழும் 2 முதல் 5 ஆம் தேதி வரை அந்தப் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் புயல் எச்சரிக்கைப் பிரிவு கீழ்க்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது: வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் `புரெவி' புயல் சின்னம் கடந்த ஆறு மணி நேரத்தில், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு - வடமேற்காக நகர்ந்து சென்று இன்றைக்கு - டிசம்பர் 2 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வங்காள விரிகுடாவின் தென்மேற்கில் மையம் கொண்டிருந்தது. இலங்கையில் திரிகோணமலைக்கு கிழக்கு - தென் கிழக்கில் 240 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்தியாவில் பாம்பனுக்கு கிழக்கு - தென் கிழக்காக 470 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 650 கிழக்கு - வடகிழக்காக 650 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டிருந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் இது மேலும் தீவிரம் அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது மேற்கு - வடமேற்காக நகர்ந்து டிசம்பர் 2 ஆம் தேதி மாலை / இரவில் புயலாக மாறி திரிகோணமலைக்கு வடக்கே இலங்கை கடலோரத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 80 - 90 கிலோ மீட்டர் முதல், 100 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதன் பிறகு மேற்கு - வடமேற்காக நகர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி காலையில் கோமோரின் பகுதியை ஒட்டி மன்னார் வளைகுடா மற்றும் குமரிமுனை பகுதிக்குச் செல்லும் என எதிர்பார்க்கப் படுகிறது. டிசம்பர் 3 ஆம் தேதி மதியம் பாம்பனுக்கு மிக அருகாமையில் மணிக்கு 70- 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பிறகு அது மேற்கு - தென்மேற்காக நகர்ந்து, தமிழக தென் கடலோரத்தில் கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையில் டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலையில் புயலாகக் கடக்கும். அப்போது மணிக்கு 70- 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எச்சரிக்கைகள்: (i) மழைப்பொழிவு தென் தமிழகத்தில் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்) சில இடங்களில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் கனமானது முதல் மிக கனமானது வரையிலும், சில இடங்களில் மழை பெய்யக் கூடும்; டிசம்பர் 3 ஆம் தேதி தெற்கு கேரளாவில் (திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா பகுதிகளில்) இதே அளவு மழை பெய்யக் கூடும். தென் தமிழகத்தில் 2 மற்றும் 4 ஆம் தேதிகளிலும், தென் கேரளாவில் 3 மற்றும் 4 தேதிகளிலும் கனமானது முதல் மிக கனமானது வரையில் ஆங்காங்கே மழை பெய்யக் கூடும். வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, மாஹே & காரைக்கால், வடக்கு கேரளாவில் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் கனமானது முதல் மிக கனமானது வரையில் ஆங்காங்கே மழை பெய்யலாம். டிசம்பர் 4 ஆம் தேதி ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திராவில் ஆங்காங்கே கனமழை பெய்யலாம். 3 மற்றும் 4 தேதிகளில் லட்சத்தீவு பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். (ii) காற்று குறித்த முன்னெச்சரிக்கை வங்காள விரிகுடாவில் தென்மேற்கிலும், இலங்கை கடலோரத்திலும் மணிக்கு 70 - 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும். பிற்பகலில் இருந்து இது அடுத்த 12 மணி நேரத்திற்கு 80- 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வரையிலான வேகமாக அதிகரிக்கலாம். அதன்பிறகு வேகம் படிப்படியாகக் குறையும். திடீரென உருவாகும் காற்று மணிக்கு 45 - 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் குமரிமுனை பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரத்தில் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில்) வீசும். தெற்கு கேரளாவில் டிசம்பர் 2 மாலையில் இருந்து 55- 65 கி.மீ. முதல் 75 கிமீ வரையிலான வேகத்தில் காற்று வீசும். டிசம்பர் 3 ஆம் தேதி காலையில் தொடங்கி அடுத்த 24 மணி நேரத்துக்கு 70 - 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசும் காற்று, பிறகு படிப்படியாக குறையும். டிசம்பர் 3 ஆம் தேதி காலையில் இருந்து அடுத்த 48 மணி நேரத்திற்கு லட்சத்தீவுகள் - மாலத்தீவு பகுதியிலும், தென்கிழக்கு அரபி கடல் பகுதியிலும் மணிக்கு 45 - 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசும்.   (iii) கடல் பகுதி நிலவரம் வங்காள விரிகுடா மற்றும் இலங்கையின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் தென்மேற்குப் பகுதியில் கடும் சீற்றத்துடன், ராட்சத அலைகள் எழும். 3 ஆம் தேதி இரவு வரையில் அதே நிலை தொடர்ந்து, பிறகு படிப்படியாக சீராகும். இன்று குமரிமுனைப் பகுதி, மன்னார் வளைகுடா பகுதி, தமிழகம் - கேரளத்தின் தென்பகுதி, இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதியில் கடும் சீற்றம் இருக்கும். 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கடும் சீற்றத்துடன் ராட்சத அலைகள் வீசும். லட்சத்தீவுகள் - மாலத்தீவு பகுதியிலும் அரபி கடலின் தென்கிழக்குப் பகுதியிலும் 3 முதல் 5 ஆம் தேதி வரையில் கடலில் கடும் சீற்றம் காணப்படும். (iv) மீனவர்களுக்கான எச்சரிக்கை இன்று முதல் 5 ஆம் தேதி வரையில் கீழே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் மீன்பிடிக்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. இன்றும், நாளையும் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதி, இலங்கை கடலோரத்தில் கிழக்குப் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறது. இன்று முதல் 4 ஆம் தேதி வரையில் குமரிமுனை பகுதி, மன்னார் வளைகுடா, தமிழகம் - கேரள தெற்குப் பகுதி, இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாளை முதல் 5 ஆம் தேதி வரையில் லட்சத்தீவுகள் - மாலத்தீவு பகுதி மற்றும் அரபி கடலின் தென்கிழக்குப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. புயல் நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்புடைய மாநில அரசுகளுக்கு இதுகுறித்து அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...