செங்கல்பட்டில் உடனே தடுப்பூசி உற்பத்தியைத் துவங்க தமிழக முதல்வர் நேரில் ஆய்வு

செங்கல்பட்டில் உடனே தடுப்பூசி உற்பத்தியைத் துவங்க நேரில் ஆய்வு

நடத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு HLL Biotech நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கிடும் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

 தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று (25 மே 2021) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் HLL Biotech நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை நேரில் ஆய்வு செய்தார்.

 கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தியை உடனடியாகத் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

​மேலும், மத்திய அரசின் நிறுவனமான HLL Biotech நிறுவனத்திற்கு உற்பத்தியை தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், HLL Biotech நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் விஜயன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

"தமிழ்நாட்டில் நன்மையின் ஒளியை தற்போது ஏற்றியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்" -தடுப்பூசி உற்பத்தியைத் தடை செய்து, சுகாதாரத்துறையை சூறையாடி, 

இன அழிப்புக்கு, முக்கியக் காரணமானவர் யார்.என்பதை நாம் அறிவோம் அதை

அம்பலப்படுத்திய, "பிசினஸ்  ஸ்டேண்டர்டு" ஆங்கில ஏடு.

இந்தக் கொரோனா காலத்தில், இத்தனை மரணங்கள். அதிலும் இளம் வயது மரணங்கள், பொதுவாக, மக்களை அதிகமாகவே பாதித்திருக்கிறது.

இன்று இத்தனை மரணங்களுக்கும், முக்கிய காரணமானவர், மருத்துவம் படித்த, முன்னால் மத்திய சுகாதார மந்திரி,  என்றால், அது உண்மை தானா.என்று பலருக்கு ஆச்சரியம் 

2004 முதல் 2009 வரை உள்ள ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்த கட்சி,, சுகாதாரத் துறையில், மந்திரியாக இருந்த போது, பில்கேட்ஸ்சை சந்தித்த பிறகு, அவரின் ஆலோசனையின் அடிப்படையில், , அழிக்கப்பட்டதாக மக்கள் பேசும் இமாச்சல் பிரதேசத்திலுள்ள "சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் குன்னூரில்‌ உள்ள பாஸ்டா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா", ஆகிய, பொதுத்துறை நிறுவனங்கள், இன்று, செயல்படாமல் போனதன் விளைவு தான், இவ்வளவு இறப்புகளுக்கும், பாதிப்புகளுக்கும், காரணம்.

கடந்த, மே மாதம் 8 ஆம் தேதி,மதுரை கிளை சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல  வழக்கு பதிய, "பெட்டிஷன்" போடப்பட்டது.

அதில், எப்படி பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களை அழித்தார்கள் என்றும், அதனால் இன்று மக்கள் படும் அவதிகளுக்கும்,

மரணங்களுக்கும் காரணம் என்று, எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

எப்படி, தனியார் நிறுவனங்கள், மத்திய அரசு சுகாதாத்துறையினுல், நுழைந்தது என்பதையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, மனுவில், தெளிவாக, குறிப்பட்டுள்ளதாம்.

 மூடப்பட்ட அல்லது முடக்கப்பட்ட,

பொதுத்துறை நிறுவனங்கள், 

பல கோடி குழந்தைகளை, பி.ஸி.ஜி தடுப்பூசியின் மூலம் காப்பாற்றி இருக்கிறது.

அதே போல "கிங் இன்ஸ்டியூட்", மற்றும் "பாஸ்டர்", நிறுவனங்களின் தடுப்பூசிகள், வெறிநாய் கடி நோயிலிருந்து, பல லட்சக்கணக்கானோர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது.

இந்த, மத்திய அரசின் தடுப்பூசி நிறுவனங்கள், தரமற்றவை என்று, தன் பதில் மனுவில் தெரிவித்துள்ள நிலையில்

சொந்த மக்களின் தேவைக்குதான், தடுப்பூசியே  தவிர, ஏற்றுமதி, இறக்குமதிக்கல்ல.

மேற்க் கண்ட, பொதுத்துறை நிறுவனங்களை செயல்படாமல் செய்துவிட்டு,  சுகாதாரத்துறையால், இறக்குமதி செய்த, பி.ஸி.ஜி தடுப்பூசியால், நூற்றுக்கணக்கான குழந்தைகள், பாதிக்கப்பட்டார்கள் என்பது மறைக்கப்பட்ட செய்தி.(அது வெளியே வராமல் அப்போது தடுக்கப்பட்டதாக பேச்சுண்டு)

2007 முதல் 2008 வரை "பாஸ்டர்" நிறுவனத்தை புதுப்பிக்க, 330 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில்,  அதை பெறவிடாமல் தடுத்து, அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்குச் சம்பளமே கிடைக்காமல், அப்போது வேலை நிறுத்தம் நடைபெற்று, 

அந்த நிறுவனம், முடக்கப்பட்டது அல்லது மூடப்பட்டது, யார் காலத்தில் என்பதை மக்கள் நன்கறிவார்கள்.

"ஆதார் பூனாவாலா" என்பவர், இந்தியாவின் மொத்த அரசியல்வாதிகளின் ஊழல் பணத்தை, நிர்வகிக்கும்,  ஒரு நபர்...?

அந்த நபரால் தான், ஓரு ரூபாய் கூட தாயாரிப்புக்கு செலவாகாத, சரியாக நிரூபிக்கப்படாத, தடுப்பூசி, இன்று, "ஆயிரம்" ரூபாய்க்கு, விற்க்கப்படுவது குறித்து விவாதம் நடந்தது* 

அப்படிப்பட்டவர்களுக்காகத்தான்,  மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அன்று முடக்கப்பட்டு, அல்லது மூடப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு, வரவேற்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இன்று, நாட்டின், இத்தனையாயிரம் மரண ஓலங்களுக்கும்,  நாட்டின் இன அழிப்புக்கும், முக்கிய, காரணகர்த்தா, சமூக நீதி காவலர் என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக்கொண்டவரின்  வாரிசு தான், என்பது, தெளிவாகிறது.      சென்னை கிண்டியிலுள்ள பி.சி.ஜி லேபராட்டரியானது குழந்தைகளுக்கான டி.பி எனப்படும் காச நோய்க் கிருமியால் ஏற்படும் முளைக்காய்ச்சல் நோயை தடுக்க பி.சி.ஜி என்ற தடுப்பு மருந்தை தயாரிக்கும் இந்தியாவின் ஒரே ஏகபோக நிறுவனமாக திகழ்ந்த பெருமைக்குரியது. அதுவும் ஆண்டுக்கு 80 மில்லியன் டோசஸ் தயாரிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த நிறுவனமாக திகழ்ந்தது! மேலும் சிறுநீரகப்பை புற்று நோய்க்கு மருந்தாக பயன்படும் வீரியமிக்க பி.சி.ஜி மருந்தும் இங்கு தயாரானது நீலகிரி மாவட்டத்தில்

குன்னூரில் இயங்கிய பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ‘டெட்னஸ் டாக்சிட்’ என்ற மிக அவசியமான மருந்தை ஆண்டுக்கு 180 மில்லியன் டோசஸ் தயாரித்து வந்தது. பாஸ்டர் இன்ஸ்டிடிய்யூட்டும் போல ஹிமாச்சலில் உள்ள சி.ஆர்.ஐயும் இந்தியாவின் பெரும்பானமை மக்களுக்கான பல மில்லியன் டோசஸ் DPT என்ற முத்தடுப்பு மருந்துகளை தயாரித்து வந்தன! தென் கிழக்கு ஆசியாவிலேயே மஞ்சள் காமாலைக்கு சிறப்பு மருந்து தயாரித்ததும் இந்த நிறுவனம் தான்!

மொத்தத்தில் diphtheria, pertussis, tatanas, poliomyelitis, typhoid மற்றும் குழந்தைகளுக்கு வரும் காச நோய்க்கான மருந்து, நாய்க்கடிகான ஆண்டி ராபிஸ் வாசின், பாம்புக்கடிக்கான மருந்து.. இப்படி நிறைய அத்தியாவசியமானவற்றை தயாரித்து மக்களுக்கு மிகக் குறைந்த விலைக்கும் ,இலவசமாகவும் தந்த நிறுவனங்களே இந்த மூன்றும்! குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் புதிதாக இந்தியாவில் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் நலனுக்கு மட்டுமல்ல, குழந்தை பிறப்புக்கு முன்பு அவற்றின் கர்பிணித் தாய்மார்களுக்கும் இந்த நிறுவனங்களே ஆபத்பாந்தனாக அன்று திகழ்ந்தன.

இத்தகைய அரிய சேவைகளை செய்யும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்து அவற்றை வளர்த்தெடுக்கும் பொறுப்புக்கானது தான் சுகாதார அமைச்சர் பதவி என்ற தார்மீக உணர்வு அவருக்கு சிறிதளவாவது இருந்திருந்தால் 2004 ஆம் ஆண்டிலிருந்தே அவற்றுக்கு போதுமான நிதியை ஒதுக்கி வசதிகளை மேம்படுத்தி இருக்க வேண்டும். அல்லது அவற்றை வேறொரு இடத்தில்  நவீன வசதிகளுடன் செயல்படத்தக்க வகையில் புதிய கட்டுமானத்தை உருவாக்கிவிட்டு, அவற்றை இடமாற்றம் செய்திருக்க வேண்டும். அது வரையிலும் அவற்றை தடையின்றி செயல்பட அனுமதித்திருக்க வேண்டும். அவ்விதமாகச் செய்யாமல், அதன் உரிமங்களை ரத்து செய்தது பஞ்சமா பாதகம்! அப்படி உரிமத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என அப்போதே இந்தியாவின் புகழ்பெற்ற அறிவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்துக் கூறியுள்ளனர். முடக்கப்பட்ட இந்தப் பொதுத் துறை நிறுவனங்கள் மிக லாபகரமாகவும் இயங்கியவையாகும்..

இது குறித்து அப்போதே ‘பிரண்ட் லைன்’ ஆங்கில ஏடு 11 ஏப்ரல் 2008 ல்  சிறப்பான கட்டுரை எழுதியது.அத்துடன் இப்படி இந்த மூன்று நிறுவனங்கள் முடக்கப்பட்டதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நாட்டில் தரமான தடுப்பூசிகளின்றி பற்றாகுறைகளும்,பச்சிளங் குழந்தைகள் மரணங்களும் நிகழ்ந்தன. இப்படி தடை செய்யப்பட்ட ஆண்டே திருவள்ளூர் அருகே தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட மூன்று குழந்தைகள் மரணித்தன. கடந்த 13 ஆண்டுகளாக இப்படி கணக்கில்லாமல் உயிரிழந்த குழந்தைகள் எத்தனை எத்தனையோ…? தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட கர்ப்பிணிகள் எத்தனையோ…? தனியார் துறையில் அனைத்தையும் கொள்முதல் செய்வதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் எவ்வளவோ…? தற்போது தமிழக முதல்வர் மூலம் ஒரு விடியல் செங்கற்பட்டில் திருக்கழுக்குன்றத்திலிருந்து துவங்கி இருக்கும் நிலையில் நாம் வரவேற்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா