பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் குறைதீர்ப்பு முகாம்
பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கான குறைதீர்ப்பு மற்றும் திறந்தவெளி அமர்வு வட்டார பொது மேலாளர்கள் தலைமையில் ஜனவரி 19-ம் தேதி அன்று கீழே குறிப்பிட்ட நேரங்களில் தரைவழி தொலைபேசி / அகண்ட அலைவரிசை / எஃப்டிடிஎச் / செல்பேசி / குத்தகைக்கு விடப்பட்ட இணைப்புப் பிரிவுகள் ஆகியவற்றில் நீண்ட நாள் நிலுவையிலுள்ள குறைகளுக்கு தீர்வு காணப்படும் என பி.எஸ்.என்.எல் சென்னை தொலைபேசியின் தலைமை பொது மேலாளர் டாக்டர் வி.கே. சஞ்சீவி, அறிவித்துள்ளார்.
கொவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த முகாம் தொலைபேசி வாயிலாக நடைபெறும். தங்கள் பகுதிகளுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லது எஸ்எம்எஸ் / வாட்ஸ்அப் செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தங்களின் குறைகளைப் பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணவும், புகார்கள் குறித்து தேவைப்படும் விரிவான ஆய்வு செய்து வாடிக்கையாளர்ள் திருப்தி அடையும் வகையில் 7 நாட்களில் வகைப்படுத்தப்பட்டு தீர்வு காணவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
புகார்களை பெறுவதற்கு பகுதி வாரியான தரைவழி தொலைபேசி எண் / செல்பேசி எண் / மின்னஞ்சல் முகவரி ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன.
மத்திய மண்டலத்தைச் சேர்ந்த, மாம்பலம், சென்ட்ரல், அடையாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் 044- 28552216 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445084760 என்ற கைபேசி எண்ணிலோ, adalatcentral@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ பிற்பகல் 2.30 முதல் 5.30 மணி வரை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.
வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த துறைமுகம், கல்மண்டபம், கெல்லிஸ், மாதவரம், அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 044- 25395858 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445083639 என்ற கைபேசி எண்ணிலோ, bsnlchnpgnorth@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ பிற்பகல் 2.30 முதல் 5.30 மணி வரை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.
தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த செயின்ட் தாமஸ் மவுண்ட், குரோம்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் 044- 22501122 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445084018 என்ற கைபேசி எண்ணிலோ, bsnlchnpgsouth@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ பிற்பகல் 2.30 முதல் 5.30 மணி வரை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.
மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த கோடம்பாக்கம், கே.கே.நகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் 044- 23728877 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445084745 என்ற கைபேசி எண்ணிலோ, bsnlchnwestpg@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ காலை 10.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என பி.எஸ்.என்.எல் சென்னை தொலைபேசி வெளியிட்டுள்ள செயதிக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்