முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் 2-A தேர்விற்கான அறிவிப்பு வெளியானது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 2 மற்றும் 2-A தேர்விற்கான அறிவிப்பு வெளியானது.


குரூப் 2 ஏ-வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார். அறிவிப்பாணை வெளியான பிறகும் கூட இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


டிஎன்பிஎஸ்சி குரூப் -2 கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளின் கீழ் தேர்வு செய்யப்படுகின்றனர்.சார் பதிவாளர், வருவாய் உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி, உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் போன்ற பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?



விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான http://www.tnpsc.gov.in/  http://www.tnpscexams.net/ http://www.tnpscexams.in இணையதளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

டிஎன்பிஎஸ்சி அமைப்பு நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் எனப்படும் ஒருமுறைப்பதிவு கட்டாயமாகும். தேர்விற்கு விண்ணப்பிக்கும் முன், அதில்பதிவு செய்வது அவசியம். இதனை, வேலைவாய்ப்புக்கான விண்ணப்பமாகக் கருதமுடியாது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக தேர்வு நடைபெறாததால் அரசு அறிவித்துள்ள படி பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


TNPSC குரூப் 2, மற்றும் குரூப் 2A தேர்வு நடைபெறும் தேதி, வினாத்தாள் அமைப்பு விபரம் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னையிலுள்ள டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் தலைவர் பாலச்சந்திரன், குரூப் 2, மற்றும் குரூப் 2A தேர்வு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது-

பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி முதல்- மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும். மே மாதம் 21 ஆம் தேதி குரூப் 2, மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும்.நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வுகள் அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களில் குருப் 2, குரூப் 2A பதவிகள் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் மொழிப்பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதன் பின்னர் ரோஸ்டர் முறையில் தேர்வு செய்து நேர்முகத் தேர்வு நடைபெறும்  இதுவரை காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வுகள், இனி மேல் காலை 9.30 மணிக்குத் தொடங்கும். அதன்படி காலை வேலையில் 9.30 முதல் 12.30 வரை, பிற்பகல் வேலையில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடத்தத் திட்டம். நேர்முக தேர்வு அல்லாத பதவிக்கான கலந்தாய்வு டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடைபெறும்.



கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக தேர்வு நடைபெறாததால் அரசு அறிவித்துள்ள படி பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 17 சப் ரிஜிஸ்டர் பதவிகளும், தொழிலாளர் நலத்துறையில் 19 இடங்களும், 58 காலிப்பணியிடங்கள் Assitant Special Branch-ல் ( சிறப்பு கிளை உதவியாளர்) முதல் முறையாக காவல் துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளது. 115 மையங்களில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம்  முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும். இனி அரசு நிறுவனத்தின் கழகங்கள் மற்றும் வாரியத்திற்கான பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் டி.என்.எஸ்.பி.எஸ்.சி நடத்தும். பணி விவரங்களை வகைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் 3 ஆம் தேதி இது குறித்த விவரங்கள் வெளியிடப்படும். தமிழ் வழி வினாத்தாளில் ஏற்படும் பிழைகளைச் சரி செய்வதற்கு நிபுணர்கள் கருத்து கேட்கப்பட்டுள்ளது, பிழைகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.



இந்த தேர்வுக்கு 9 லட்சம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட இதர வாரிய பணியிடங்களை குரூப் 2, குரூப் 2ஏ உள்ளிட்ட தேர்வுகளில் வகைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மார்ச் மாதம் 3 ஆம் தேதி அதற்கான விரிவான அறிக்கை வெளியிடப்படும்.

இவ்வாறு தலைவர்  தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...