முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெலுங்கானா ஆளுநர் தென்மாவட்டங்களில் பயணம் புதுச்சேரியில் பார்த்த திரைப்படம்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி , மற்றும் கேபினட் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காஷ்மீரின் திரைப்பட சிறப்புத் திரையிடலை பிராவிடன்ஸ் மாலில் உள்ள சினிமா ஹாலில் கண்டார்


புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அது குறித்து  தனது பதிவில் எங்களுடன் சேருங்கள், இப்போது பார்க்கிறேன். கனத்த இதயத்துடன் காஷ்மீர் கோப்புகளைப் பார்த்தோம் - என பதிவிட்டு நிலையில்  பண்டிட்டுகள் தங்கள் சொந்த நிலத்தில் படும் உண்மையான துன்பங்கள்.

கடினமான உண்மைகளின் அடிப்படையில் உண்மையை வெளிப்படுத்தும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட படம்.

திரைப்படத்தை உருவாக்கிய விவேக் அக்னிஹோத்ரி குழுவினருக்கு பாராட்டுக்கள், தேசபக்தர்களின் வரலாற்றுக் காப்பகத்தை வெளிப்படுத்தியது.





உண்மை வெளிப்பட்டதென்று பலர் தெரிவித்த நிலையில். மாறாக    காஷ்மீர் பைல்ஸ் பலரது பார்வையில் அரைகுறை உண்மைகளும், ஒரு சார்பு கண்ணோட்டமும் மிக ஆபத்தானது இந்தப் படம் என சிலர் கூறினாலும் இன்றைக்கு இந்தியாவில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் இந்து-முஸ்லீம் இணக்கத்தையும் அடியோடு கெடுகாக்கப் பார்க்கிறது எனக் கூறுவோரும் உண்டு. 

இந்தப் படம் பார்க்கின்ற - உண்மையான வரலாறு தெரியாத எந்த ஒரு மனிதனுக்குமே இஸ்லமியர் மீது ஆழ்ந்த வெறுப்பு மேலோங்கும் என்பதில் சந்தேகமில்லை என சிலர் கூறினாலும் அதனால் தான் இந்த படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் வரிவிலக்கு கொடுத்துள்ளனவா என்ற வினா எழாமல் இல்லை.





பிரதமர் தொடங்கி அனைத்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் படத்தை ஆஹா வென்று புகழ்கின்றனர். மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் அரசு ஒருபடி மேலே சென்று இந்தப் படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்க விரும்பும் காவல்துறையினர் குடும்பங்களுக்கு ஒரு நாள் விடுமுறையாக அறிவித்துள்ளது.

எந்த ஒரு கலைப் படைப்பின் வெற்றியும் அது அன்பையும், மனவிசாலத்தையும், அரவணைத்து வாழும் பண்பையும் உருவாக்குவதில் தான் உள்ளது. இந்தப்படமோ இதற்கு நேர் எதிராக உள்ளது. என்று விமர்சனம் வந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றி என்பது, இந்திய சமூகத்தின் அமைதிக்கான தோல்வியாக வாய்ப்புள்ளது என்பதை ஆழ்ந்த வேதனையுடன் பதிவு செய்த பலரைக் காணும் நிலை.

காஷ்மீர் மண்ணில் இந்து பண்டிட்களின் கண்ணீரும், ரத்தமும் மட்டுமா உறைந்திருக்கிறது! அதே அளவுக்கு இஸ்லாமியர்களின் இழப்புகளும் உண்டே! இந்த இருதரப்புக்குமான இணக்கத்தை சீர்குலைத்து விடும் என்று கடுமையாக விமர்சனம் வந்த போதும் இந்தப் படத்தையும் எடுத்த அரைகுறை உண்மைகளை பேசுவதாக பல்வேறு இடங்களில் கூறிய நிலையில்

அரைகுறை உண்மைகளையும் , ஆதாரமற்ற புனைவுகளையும் ஒருதலைபட்சமான காட்சி படிமங்களாக்கி ’முஸ்லீம் வெறுப்பு’ என்ற  நோக்கத்திற்காக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம் காஷ்மீர் பைல்ஸ்! அதில் வெற்றியும் பெற்றுள்ளது. கலைத் திறமையும்,  நவீன சினிமா தொழில் நுட்பங்களும் கைகோர்த்து இந்துத்துவ நோக்கத்தை நிறைவு செய்கின்றன என்று விமர்சனம் வரவே நாம் பார்த்த பிறகு முழுமையாக விமர்சனம் முன் வைக்கலாம்.

காஷ்மீர் பண்டிட்  சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வு வேண்டும். அந்த ஈனச் செயல்களில் ஈடுபட்டோரை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். புலம் பெயர்ந்த பண்டிட் சமூக மக்களை மீண்டும் அவர்களது வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும். யுகம் யகமாக ஒன்றாக பின்னிப்பிணைந்து வாழ்ந்த காஷ்மீர் முஸ்லீம்களும், காஷ்மீர் பண்டிட்களும் ‘காஷ்மீரியத்’ என்று போற்றப்படும் காஷ்மீரத்துக்கே உரித்தான மத நல்லிணக்கத்தை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பது நாமனைவரின் விருப்பமாகும் ! ஆனால், இந்தப் படம் இந்த நோக்கத்திற்கு எதிரானதா ஆதரவானதா என்பது அவரவர் பார்வையில் பப்ளிக் ஜஸ்டிஸ்

ஆர்.எஸ்.எஸின் வீரியமான கலை வடிவமே காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மேலும்  மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஆளுநர் சுற்றுப்பயணம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்திற்கு வருகை தந்த தெலுங்கானா ஆளுநரும், பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநருமான மேதகு தமிழிசை சவுந்தராஜனுடன்  சிவகங்கை மாவட்டஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில் குமார் வருகை புரிந்தனர். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காரைக்குடி கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக  வருகை தந்த காரணமாக குன்றக்குடி திருவண்ணாமலை ஆதின மடத்திற்கு விஜயம் செய்தார்.

காரைக்குடி  அழகப்பா பல்கலை கழகத்திற்கு வருகை தந்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி , மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். அருகில் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர்  செந்தில்குமார் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...