கர்நாடகாவில் பல நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் பேருந்து நிறுத்தங்கள் அமைக்க முடிவு. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் இப் பேருந்து நிறுத்தத்தில் அமைகிறது.
பெருங்களூரு நகரத்தில் ஆனைக்கல் தாலுக்காவில் எலெக்ட்ரானிக் சிட்டி நகரத்தில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் கிளைகள் உள்ளதன் காரணமாக இந்த நகரத்தை மேம்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரானிக் சிட்டி தொழில் நகர குழுமம் நவீன பேருந்து நிறுத்தங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
நியோ மெட்ரோ ரயில் திட்டத்துடன் இணைந்து இந்த அதி நவீன பேருந்து நிறுத்தங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டள்ளது. முதல் கட்டமாக மூன்று இடங்களில் இப் பேருந்து நிறுத்தங்கள் அமைக்க டெண்டர் கோரப்பட்டு மாதிரிப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
அதிநவீன பேருந்து நிறுத்தத்தின் உள் பகுதியில் ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் எந்திரம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, எடை பார்க்கும் எந்திரம், செல் போன் சார்ஜிங் பாயின்ட், டிஜிட்டல் தகவல் பலகை உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. பேருந்து நிறுத்தத்தின் இரண்டு புறங்களிலும் அவசர கால எஸ்ஓஎஸ் பட்டன்கள், குடிநீர் வசதி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்பகுதியின் ஒரு புறத்தில் சைக்கிள் நிறுத்தம், மறுபுறம் குப்பைத் தொட்டிக்கள் இடம்பெற்றுள்ளன. சைக்கிள் நிறுத்தம் இடத்தில் செங்குத்து தோட்டம் அமையும்.
பேருந்து நிறுத்தத்தின் மேல்புறத்தில் சிசிடிசி கேமரா, பொது அறிவிப்பு வசதி, வானிலை மற்றும் காற்றின் தரம் குறித்த அறிக்கை, சூரிய ஒளி மின் தகடுகள், ஏர் ப்யுரிபயர் இடம்பெறும். 2 கட்டமாக மொத்தம் 15 பேருந்து நிலையங்களை அமைக்க எலக்ட்ரானிக் சிட்டி தொழில் நகரக் குழுமம் திட்டமிட்டள்ளது. நவீன, பாதுகாப்பான, அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்களாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்