நீரிழிவு அதாவது சர்க்கரை அளவு பிரச்சனையால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேமுதிகவின் தலைவரான நடிகர் விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:-
நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவுப் பிரச்னையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலிலுள்ள விரல் பகுதியில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டதாகவும்.
மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடனிருக்கிறார். மேலும், மருத்துவர்களின் ஆலோனைப்படி தொடர்ந்து நடிகர் விஜயகாந்துக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் நடிகர் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும், அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாமென அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்