தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் , ஜி-20 மாநாடு தொடர்பாக புதுதில்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,
நாட்டிலேயே முன்னோடியாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தமிழ்நாடு உருவாக்கியுள்ள 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' போன்ற முக்கியக் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினார்
தமிழகத்தில் ஜி20 நிகழ்ச்சிகள் சென்னை மற்றும் கோயமுத்தூரில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்ட நிலையில் கோயமுத்தூர் ஈஷா மையத்தில் ஜி-20 நிகழ்ச்சி நடத்த மத்திய அரசு பரிந்துரைத்திருந்ததற்கு
தமிழ்நாடு அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கோயமுத்தூர் நிகழ்ச்சிகள் தற்போது ரத்து செய்யப் பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜி-20 உச்சிமாநாடு தொடர்பாக நேற்று புதுதில்லியில் நடைபெறவுள்ள
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமானம் மூலம் புதுதில்லி புறப்பட்டுச் சென்ற நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றார்
ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்தாண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ததன் படி, ஜி-20 உச்சி மாநாடு தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மம்தா பானர்ஜி, ஏக்நாத் ஷிண்டே, சந்திரபாபு நாயுடு, உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் நடைபெறவுள்ள ஜி-20 துணை மாநாட்டின் சாராம்சங்கள் குறித்து அனைத்துக்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமிதஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பிரகாலத் தோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஜி-20 மாநாடு நடத்துவதற்கு முன்பு துணை மாநாடு நாடு முழுவதும் 200 நகரங்களில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 4 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு ஆதரவளித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்
இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு ஆதரவு அளித்ததற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“எனது அன்பு நண்பர் @EmmanuelMacron அவர்களுக்கு நன்றி! ஒட்டுமொத்த மனித குலத்தையும் பாதிக்கும் பிரச்சினைகளில் உலகின் கவனத்தை ஒருமுகப்படுத்த நாங்கள் பணியாற்றுவதால், இந்தியாவின் G20 தலைமையின் போது உங்களுடன் நெருக்கமாக ஆலோசனை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் வாழ்த்து ட்வீட்டிற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“உங்கள் ஒத்துழைப்பு முக்கியமானது. உலகளாவிய நல்வாழ்வுக்கு ஜப்பான் நிறைய பங்களித்துள்ளது மற்றும் பல்வேறு துறைகளில் ஜப்பான் கண்டுள்ள வெற்றிகளிலிருந்து உலகம் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். @kishida230.
இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் வாழ்த்திற்கு பதிலளித்த பிரதமர் மோடி, அவரது அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“உங்கள் கனிவான பணிகளுக்கு நன்றி @sanchezcastejon அவர்களே! வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த கிரகத்தை விட்டுச் செல்ல நிகழ்காலத்தின் சவால்களை எதிர்கொள்ள கூட்டாகச் செயல்படுவது குறித்த உங்கள் கருத்துக்களை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்”
ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேலின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திரு. மோடி தனது பதில் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“நன்றி @CharlesMichel அவர்களே!. உலகளாவிய நன்மதிப்பை மேம்படுத்துவதற்காக நாங்கள் கூட்டாகச் செயல்படும்போது உங்களின் தீவிரப் பங்கேற்பை எதிர்நோக்குகிறோம்.”
இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் ஆதரவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர், தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“நன்றி @POTUS அவர்களே. உங்கள் மதிப்புமிக்க ஆதரவு இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு மேலும் பலம் அளிக்கும். ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்.”இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு ஆதரவளித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்
இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு ஆதரவு அளித்ததற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“எனது அன்பு நண்பர் @EmmanuelMacron அவர்களுக்கு நன்றி! ஒட்டுமொத்த மனித குலத்தையும் பாதிக்கும் பிரச்சினைகளில் உலகின் கவனத்தை ஒருமுகப்படுத்த நாங்கள் பணியாற்றுவதால், இந்தியாவின் G20 தலைமையின் போது உங்களுடன் நெருக்கமாக ஆலோசனை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் வாழ்த்து ட்வீட்டிற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“உங்கள் ஒத்துழைப்பு முக்கியமானது. உலகளாவிய நல்வாழ்வுக்கு ஜப்பான் நிறைய பங்களித்துள்ளது மற்றும் பல்வேறு துறைகளில் ஜப்பான் கண்டுள்ள வெற்றிகளிலிருந்து உலகம் தொடர்ந்து கற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். @kishida230.
இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் வாழ்த்திற்கு பதிலளித்த பிரதமர் மோடி, அவரது அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“உங்கள் கனிவான பணிகளுக்கு நன்றி @sanchezcastejon அவர்களே! வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த கிரகத்தை விட்டுச் செல்ல நிகழ்காலத்தின் சவால்களை எதிர்கொள்ள கூட்டாகச் செயல்படுவது குறித்த உங்கள் கருத்துக்களை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்”
ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேலின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திரு. மோடி தனது பதில் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“நன்றி @CharlesMichel அவர்களே!. உலகளாவிய நன்மதிப்பை மேம்படுத்துவதற்காக நாங்கள் கூட்டாகச் செயல்படும்போது உங்களின் தீவிரப் பங்கேற்பை எதிர்நோக்குகிறோம்.”
இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் ஆதரவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர், தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“நன்றி @POTUS அவர்களே. உங்கள் மதிப்புமிக்க ஆதரவு இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு மேலும் பலம் அளிக்கும். ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்.
கருத்துகள்