தமிழ்நாடு நீர் பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் சகோதரரின் மகள், இரயில் முன் பாய்ந்து தற்கொலை.
திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாநில நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர், துரைமகாலிங்கம்2021 ஆம் ஆண்டில் இறந்து விட்டார்.அவரது மகள் பாரதி, வயது 55, கணவர் இராஜ்குமார், இரண்டு மகள்கள், மகனுடன், வேலுார் மாவட்டம், காட்பாடியில் வசித்து வந்தார்.காட்பாடி அருகே லத்தேரியில், இரயில் தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில், பெண் உடல் ஒன்று, நேற்று முன்தினம் கிடந்தது. ஜோலார்பேட்டை இரயில்வே காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரித்ததில். இறந்து கிடந்தது பாரதி என்பதும், இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. குடும்பப் பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரெனக் கூறப்படுகிறது.
கருத்துகள்