முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுக் கூட்டம்

முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுக் கூட்டம்,


அனைத்து ஜி 20 நாடுகளும் மூன்று முன்னுரிமைப் பகுதிகளின் குறிக்கோளை நோக்கி ஆக்கப்பூர்வமாக செயல்படும் அர்ப்பணிப்புடன் பெங்களூருவில் நிறைவடைந்தது




நிலச் சீர்கேட்டைத் தடுத்தல், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் செழுமைப்படுத்துதல் ஆகிய மூன்று முன்னுரிமைப் பகுதிகளை நோக்கி ஆக்கப்பூர்வமாகச் செயல்பட ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை அனைத்து ஜி20 நாடுகளும் வெளிப்படுத்திய ஆக்கப்பூர்வமான அணுகுமுறையுடன் முதலாவது ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுக் கூட்டம் இன்று பெங்களூரில் நிறைவடைந்தது. பல்லுயிர் பெருக்கம், நீலப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல் போன்ற பல அம்சங்கள் இதில் விவாதிக்கப்பட்டன.





சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மைப் பணிக்குழுவின் முதல் கூட்டம், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தில் 2023 பிப்ரவரி 9 முதல் 11 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

காட்டுத் தீ தடுப்பு மற்றும் சுரங்கப் பகுதிகளின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு நிகழ்வுடன் முதல் நாள் கூட்டம் தொடங்கியது.





மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி-யின் தொடக்க உரையுடன்  இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியது. அதன்பின், சுற்றுச் சூழல் அமைச்சகச் செயலாளர் திருமதி லீனா நந்தன் உரையாற்றினார். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கல்களை ஒருமித்த அணுகுமுறை மூலம் இந்தியா தீர்க்க விரும்புகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

மூன்றாவது மற்றும் நிறைவு நாள், கூட்டம் ‘நிலையான மற்றும் பருவநிலைக்கு ஏற்ற நீலப் பொருளாதாரம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட அமர்வுடன் தொடங்கியது. புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம் ரவிச்சந்திரன் தொடக்கவுரையாற்றினார். பெருங்கடல்கள், நீலப் பொருளாதாரம், கடல் குப்பைகள், கடலோர சூழல் அமைப்புகளைப் பாதுகாத்து மேம்படுத்துதல், கடல் சார்ந்த திட்டமிடல்கள் போன்றவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. கடலில் பிளாஸ்டிக் குப்பை தொடர்பான பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இந்த விவாதங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

கடல் வளங்களின் நிலையான பயன்பாடு, மாசுபாட்டைத் தவிர்த்தல், கடல் குப்பைகளைத் தடுப்பது, பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர்.

நீலப் பொருளாதாரம் பற்றிய முக்கிய அம்சங்களில் விரிவான விவாதத்தை மேற்கொள்வதற்காக, ஓஷன் 20 என்ற பெருங்கடல் 20  கூட்டத்தை நடத்த இந்தியாவின் ஜி20 தலைமை திட்டமிட்டுள்ளது. கடல் குப்பைகளை அகற்றுவதில் சமூகப் பங்கேற்பு மீதான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மே 21, 2023 அன்று கடற்கரையை சுத்தம் செய்யும் ஒருங்கிணைந்த நிகழ்வை இந்தியா நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

சுற்றுச் சூழல் மற்றும் புவி அறிவியல் அமைச்சகங்களின் செயலாளர்கள் இந்த விவாதங்கள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கினர்.

இந்த முதலாவது பணிக்குழுக் கூட்டத்தின் முடிவுகளை செயல்படுத்துவது குறித்தும் மேலும் பல பணிகளுக்காகவும் இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைத்து செயல்பட பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.





இந்த முதலாவது பணிக்குழுக் கூட்டத்தின்போது நடந்த விவாதங்களை மேலும் முன்னெடுத்துச்  செல்வது குறித்து 2023 மார்ச் 27 முதல் 29 வரை காந்திநகரில் நடைபெறும் 2வது பணிக்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...