கர்நாடகா மாநில முதல்வராக இரண்டாவது முறை சித்தராமையா இன்று பதவி ஏற்றார்.
அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதல்வராக டிகே சிவகுமாரும் பதவி ஏற்றார்.
கர்நாடகாவின் முதல்வர், துணை முதல்வருடன் எட்டு அமைச்சர்களும் பெங்களூருவில் கண்டீரவா மைதானத்தில் பதவிஏற்பு விழா நடைபெற்றதில் 12.30 மணிக்கு கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையா பதவி ஏற்றார். அவருக்கு மாநில ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சித்தராமையா கடவுளின் பெயரால் ஆணையிட்டு உறுதி கூறி பதவி ஏற்றார். அதன் பின்னர் அவருக்கு ஆளுநர் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துக் கூறினார் தொடர்ந்து துணை முதல்வராக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், டிகே சிவகுமார் பதவி ஏற்றார்.
அவர்களுக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தொடர்ந்து மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி.பரமேஸ்வரா அமைச்சராக அரசியலமைப்பு சட்டத்தின் பெயரால் பதவி ஏற்றார். கர்நாடகாவின் முதல்வர் பதவிக்கான போட்டியில் பரமேஸ்வராவும் இருந்த. நிலையில் சித்தராமையாவின் அமைச்சரவையில் அவர் அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். தொடர்ந்து மூத்த தலைவரான கே.ஹெச்.முனியப்பா அமைச்சராகப் பதவி ஏற்றார்.
கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, பி.இசட்.ஜமீர் அகமது கான் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவி ஏற்பு விழாவில்,
காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தொல்.திருமாவளவன், நடிகர் கமல்ஹாசன், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், ஹிமாச்சலப்பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத்,
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் ஷோரன், கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தவிழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் கேசந்திரசேகரராவ் கலந்து கொள்ளவில்லை.
கருத்துகள்