முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈஷா யோகா மையத்தில் இதுவரை ஆறு பணியாளர்கள் காணவில்லை என காவல் துறைத் தகவல்.

ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் இதுவரை ஆறு பணியாளர்கள் காணவில்லை என காவல் துறை நீதிமன்றத்தில் தகவல்.


சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், தென்காசி மாவட்டம் குலசேகரபட்டி விவசாயி திருமலை, காணாமல் போன தன்னுடைய சகோதரரை மீட்டு தரக் கோரி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளதில், ‘என் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 2007-ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராகய் பணியாற்றிய நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி, ஈஷா யோகா மையத்திலிருந்து என்னைத் தொலைப்பேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா?’ எனக் கேட்டனர். மேலும், 3 நாட்களாக ஈஷா யோகா மைத்துக்கும் அவர் வரவில்லை என்ற தகவலையும் தெரிவித்தனர்.

அது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதி ஈஷா யோகா மையத்தின் பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார்.


அந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்த ஆலந்துறை காவல் நிலையத்தில் ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடத்துகிறது. எனவே, காவல் துறை விசாரணையைத் துரிதப்படுத்தி, காணாமல் போன என் சகோதரர் கணேசனை மீட்டு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை அன்று விசாரணைக்கு வந்த போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், ‘கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில், இதுவரை 6 பேர் காணாமல் போயுள்ளனர். அதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது’ எனக் கூறினார்.

அதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக உரிய பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.  இந்த நிலையில் ஈஷா யோகா மையமும் உடைக்கப்படும் அதன் சிறகுகளும்

இதன் துவக்கப் புள்ளி எதுவென்று காண்போம்.


தன்னை சத்குரு என தானே முக்திக்கு வழிகாட்டி என சொல்லிக்கொள்ளுபவர் 1957 -ஆம் ஆண்டில் தெலுங்கு பேசும் சமூகம் ஒன்றில் மைசூரில் பிறந்தவர், அதை தனது மூன்றாவது பிறவியாகச் சொல்லிக்கொள்ளுபவர்,

தன் முதல் பிறவியில் பில்வாஸ் எனும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தேனென்றும்,

இரண்டாவது பிறவியில் சத்குரு ஸ்ரீப்ரமா என்ற பெயரில் தேனிக்கு அருகில் பிறந்து ஊட்டியில் வாழ்ந்து வெள்ளியங்கிரி மலையில் உயிர் விட்டதாகவும் சொல்கிறார்

தமது மூன்று பிறவிகளின்ன் நோக்கம் ஒன்றே, அது தியானலிங்கம் கோவில் கட்டுவதே என்றும், அது முடிந்தவுடன் உயிர் துறப்பதாபவும் உறுதி கொடுத்திருந்தார் (அப்பணி முடிந்து 15 ஆண்டுகள் தற்போது கடந்துள்ளது)

ஆன்மீகப் பாதைக்கு துறவற வாழ்க்கைதான் சிறந்தது, குடும்ப வாழ்க்கை ஒரு சுமையோடு மலை ஏறுவது போல கடினமானது, என உலக மக்களுக்கு போதனை செய்த ஜாலா ஜக்கி வாசுதேவ் கோயமுத்தூரில் சேவையைத் துவங்கும் முன்பாக, மைசூரில் ரிஷி பிரபாகர் என்ற யோகா குருவிடம், யோகா ஆசிரியராகப் பணியாற்றினார்

அங்கு அவர் விஜி என்ற பெண்ணை சந்திக்க நேர்ந்து, அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர், அவருடன் நெருங்கிப் பழகியதில் காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டார்

சில நாட்களுக்குப் பிறகு கோயம்புத்தூர் சுதர்சன் வரதராஜ் [இவர் பிரபல ELGI வரதராஜின் மகன்]  நட்புக் கிடைத்தது

ஜக்கி வாசுதேவ் பற்றி அறிந்தவர் தன் மனைவி பாரதி வரதராஜ் [இவர் ஆந்திர முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகள்] அவர்களை யோகா வகுப்பிற்கு அனுப்பி வைக்க, அங்கு இவருடன் நெருங்கிப் பழகிய பாரதி வரதராஜினால் பலமுறை விஜிக்கும் ஜக்கி வாசுதேவுக்கும் மனஷ்தாபங்கள் வந்ததாகவும்

பின் விஜி தனது “அணாகத்தா” சக்ராவில் இருந்து தனது உயிரை விட்டதாக ஜக்கி வாசுதேவ் கூறுகிறார்

ஆனால், தனது மகளை ஜக்கி வாசுதேவ் கொன்று விட்டதாகவும், ஆசிரமத்தில் வேறு பெண்ணுடன் தொடர்பாக இருந்ததாகவும் விஜியின் தந்தை காங்கன்னா காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்

அதன்பின் பாரதி வரதராஜ் தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு ஜக்கி வாசுதேவுடன் ஆன்மீகப் பணியாற்ற வந்துவிட்டார்.

விஜிக்கும் ஜக்கி வாசுதேவ்க்கும் பிறந்த குழந்தை தான் ராதே,

முக்திக்கு வழிகாட்டி என்று பிறர் வீட்டு பிள்ளைகளை மொட்டையடித்து, சாமியாராக்கும் ஜக்கி வாசுதேவின்  மகளை, டீசர்ட் போட்டுக்கொண்டும் சார்ட்ஸ் போட்டுக்கொண்டும் பப், குடி, கொண்டாட்டம் என வளர்ந்த நவீன காலத்து மங்கை

ஒருவேளை “நீங்கள் என்றும் பக்கத்து வீட்டு விவேகானந்தாவையே விரும்புவீர்கள்  உங்கள் வீட்டில் உருவாக விடமாட்டீர்கள் “என்று ஜக்கி வாசுதேவ் கூறியது உபதேசம் பிறருக்கு மட்டும்தான் போலிருக்கிறது,

உபதேசம் என்பதெல்லாம் ஊருக்கு மட்டுமே என்பதற்கு சிறந்த உதாரணம் ஜக்கி வாசுதேவ் மட்டுமே

ஈஷாவில் சந்நியாசம் எடுக்கிறவர்கள் முதலில் குடும்பத்தில் தொடர்பை முழுமையாக நிறுத்திக்கொள்ள வேண்டும் . அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் முதற்கொண்டு அனைத்து ஆவணங்களும் ஈஷா யோகா மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் போய்விடும். சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் இருக்கும் சொத்து, நகை, பணம் போன்றவை கூட ஈஷாவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் தான் என்னவென்பது தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அரை போதையில்தான் அவர்கள் இருப்பார்கள்

18 வயதான பிள்ளைகள் தன் வாழ்க்கையை தானே அமைத்துக்கொள்ளும் உரிமையை கொடுக்கும் அதே சட்டம்தான் வயதான பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின் மேல் நடவடிக்கையும் எடுக்க முடியும் என்று முதியோர் நலச்சட்டத்தின் மூலம் சொல்கிறது

பாவம், பெற்றமனம் புகார் கொடுக்கவா முற்படும்? புரண்டு அழ மட்டுமே தெரியும் அதற்கு

18 வயதான பிள்ளைகள் தான் சந்நியாசம் போக வேண்டுமா? இல்லை 10 வயதானாலும் போதும், என்னிடம் அனுப்பி வையுங்கள் என்கிறார் ஜக்கி வாசுதேவ்

இவரால் 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கா உருவாக்கப் பட்டது சம்ஸ்கிருதி எனும் குருகுலப் பள்ளி

அதில் குழந்தைகளை சேர்க்க கட்டணம் 7 லட்சம்,

இங்கு அதிகாலை 5மணிக்கு எழுந்து, தீர்த்த குண்டம் எனும் குளத்தில் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை குளிர்ந்த நீரில் குளியல், பின்பு யோகா, களரிப் பயிற்சி, பின் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் நடைப் பயிற்சி, பின் மீண்டும் குளியல், அதன்பின் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உணவு, பின் மீண்டும் இரவு 7 மணிக்கே அடுத்த வேளை உணவு, இடையில் ஒன்றும் கிடையாது

பிடிக்காமலும், உடல் நலம் குன்றியும் விலகினால் வாங்கிய பணத்தில் பத்து பைசாவைக் கூட திரும்ப கொடுக்கப்பட மாட்டாது,

பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது

 அந்த வயதில் அந்த பிள்ளைகள் அனுபவிக்க வேண்டிய தண்டனையா இது? இதுதான் குருகுலக் கல்வியா? இதுதான் சந்நியாசமா?

“குழந்தைகள் உங்கள் மூலம் இந்த உலகிற்கு வந்த ஒரு உயிர் மட்டுமே, அவர்களின் மேல் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, நீங்கள் எதையும் கற்றுத்தர முயற்சிக்காதீர் “- ஜாவா ஜக்கி வாசுதேவ்

அப்படியானால் தாங்கள் செய்து கொண்டிருப்பது என்ன? அவர்களின் மேல் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது இப்படிக் கொடுமை செய்வதற்கு?

உங்கள் சுயலாபத்திற்காக பிஞ்சுகளை வதைப்பதேன்?

இந்தக் குருகுலம் கற்பிக்கும் பாட்டும், ஆட்டமும், களரியும் வைத்துக் கொண்டு அவர்கள் வாழ்வில் என்ன சாதித்துவிடப் போகிறார்கள்? நல்ல கல்வி முறை என்பது வாழ்வை வளர்பதாக இருக்க வேண்டுமே தவிர, வாழ்வைக் கெடுப்பதாக இருக்கலாமா என்ற கேள்வியை மக்களாகிய உங்களிடமே விட்டுவிடுகிறோம்

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, இந்தியாவில் கர்நாடக இசைப் பாடகராக இருக்கும் சந்தீப் நாராயணுடன் ராதேக்கு காதல் மலர,

சந்நியாசம் மட்டுமே முக்திக்கு வழி, என்னுடன் வந்து விடுங்கள் என்று அனைவரையும் அன்போடு அழைத்து மொட்டை போடும் ஜாவா ஜக்கி வாசுதேவ் தன் மகளான ராதேக்கு அவள் காதலிக்கும் காதலனையே திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, திருமணமும் முடிக்கிறார்,

அதுமட்டுமல்லாது, சன்னியாசிகள் அனைவரும் முக்தியடைய இந்த திருமண முகூர்த்தம் மற்றும் சாந்தி முகூர்த்தம் போன்ற நிகழ்ச்சிக்காக 24 மணி நேரம் உழைத்தால் போதும், முக்தி உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்

அத்தனைக்கும் ஆசைப்படு என இவர் சொல்வது இவரின் திருப்புதல்விக்கும், இவருக்கும் மட்டும் தான் போலிருக்கிறது,

ஈஷா யோகா மையத்தில்  சந்நியாசியாகப் போனவர்களில் 80 சதவீதம் பேர், படித்தவர்கள் மட்டுமே, இப்படி படித்தும் முட்டாள்களாக இருப்பது நம் தவறா? இல்லை மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என படித்தும் படித்ததை தேர்வில் கக்கவும் செய்யும் பள்ளிகளின் தவறா?

இல்லை அனைத்தும் அறிந்தும் கண்டுகொள்ளாத அரசியல்வாதிகளின் தவறா?

யார் மீது தவறாக இருந்தாலும் சரி, நம்மை நாமே மாற்றிக்கொள்ள முற்படுவோம், இறை பக்தி வேறு, மூட நம்பிக்கை வேறு, முக்தி என்பது இருக்கிறதோ இல்லையோ தெரியாது, ஆனால் எனக்கான வாழ்க்கை ஒன்று இருக்கிறது, நமக்கான குடும்பம் ஒன்று இருக்கிற, அதை தொலைத்துவிட வேண்டாம்

உன்னில் நீ மலர பிறர் தேவையில்லை, சூரியன் உதிக்காதாம்..பூமி நகராதாம்

ஐயோ. நாம்தான் எவ்வளவு பெரிய அபாயத்தில் இருக்கிறோம். ரமண மஹரிஷி, யோகி ராம் சுரத்குமாரும், புரவிப்பாளையம் மஹான் கோடிச் சாமியும் வழங்கிய ஆசிகள் நமக்கு உண்டு, ஆகவே இந்த போலிகளை அம்பலப்படுத்துவது நம் சமூகக் கடமை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த