பிரதமர் வேட்பாளராக யாரும் அறிவிக்காத நிலையில் கோயமுத்தூரில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்வதற்கு முன் கடைக்குச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கும் காணொளிக் காட்சியை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்காக கடைக்குச் சென்று இனிப்பு வாங்கிய ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக ராகுல் காந்தி கோயமுத்தூரில் நேற்று பிரச்சாரம் செய்தார். கோயம்புத்தூர் செட்டிப்பாளையம் பகுதியில் நடந்த இந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்
இந்தியா கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக ஒரு கடையில் இனிப்பு வாங்கும் காணோளிக் காட்சியை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததில் சிங்காநல்லூர் பகுதியில், சாலை தடுப்புச் சுவரைத் தாண்டிக் குதித்து ஒரு இனிப்புகள் விற்பனைகா கடைக்குள் நுழைகிறார் ராகுல் காந்தி. அங்குள்ள ஊழியர்கள், கடையின் உரிமையாளர் ஆகியோர் அவரை வரவேற்று அவருடன் கைகுலுக்கி மகிழ்கின்றனர்.
அருகிலிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கடை ஊழியரிடம் மைசூர் பாக் கொடுங்கள் எனக் கேட்கிறார். “யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீகள் சார்?” என்று கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் கேட்கவே, அவரிடம் “என் சகோதரர் ஸ்டாலினுக்காக
” என்று பதிலளிக்கிறார் ராகுல்கடையின் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றுக் கொண்ட ராகுல் காந்தி, கோயம்புத்தூர் பொதுக்கூட்டத்தில் தான் வாங்கி வந்த இனிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதை இன்முகத்துடன் பெற்றுக் கொண்டார்.
இந்தக் காட்சிக் காணோளி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “தமிழ்நாட்டில் தொடர் பிரச்சாரத்துக்கு கொஞ்சம் இனிமையை சேர்க்கிறேன் - என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக சிறிது மைசூர் பாக் வாங்கினேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
கருத்துகள்