குடியரசுத் தலைவர் செயலகம் சார்பில் பத்திரிகைகளுக்கான அறிவிப்பில் ஜூன் 09, 2024 அன்று மாலை 07:15 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மற்றும் கூட்டணி மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைப்பார்.
என்பதாகும். நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது தங்களை ஈன்றெடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்கிய தங்கள் தாய் தந்தை செய்த புண்ணியம் அது.
21 வயதில் எங்கோ அலைந்து திரிந்து ஏதோ மூலையிலிருந்த தங்களை அன்புடன் அரவணைத்து அன்னமிட்டு ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஓர் ஆளாக்கிய தங்களது முதல் குரு லக்ஷ்மண் ராவ் மாதவ் ராவ் இனாம்தார் அவர்கள் செய்த புண்ணியம்.
ஒரு சமயத்தில் குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சிப் பூசல் காரணமாக தங்களை குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி இருக்க வேண்டுமென்ற கட்டளைக்கு ஆட்பட்டு டில்லியில் தங்கி வாழ வேண்டியிருந்த நேரத்தில் தங்களுக்கு உண்ண உணவும், உறங்க உறைவிடமுமளித்து தாய்க்கு தாயாகக் காத்து குருவுக்கு குருவாக இருந்து அரசியல் அறிவூட்டி தங்களை தன் பிரதான சிஷ்யனாக ஆளாக்கி ஆதரித்து யாரும் எதிர்பாராத வகையில் கட்சி மரபுகளையும் மற்றும் விதிகளையும் மீறி அப்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளராக இருந்த தங்களை குஜராத் மாநிலத்தில் முதல்வராக்கி அழகு பார்த்த பாரதிய ஜனதா கட்சியின் பிதாமகன் லால் கிருஷ்ண அத்வானி செய்த புண்ணியம்.
கால நேரம் கனிந்து ஆர்எஸ்எஸ் பாஜக பேராதரவால் 2014 ஆம் ஆண்டில் தாங்கள் முதன் முறையாக பிரதமரானது பாரதிய ஜனதா கட்சியினர் செய்த புண்ணியம்.
மீண்டும் இரண்டாவது முறை பிரதமரானது இந்திய மக்கள் செய்த புண்ணியம்.
தற்போது இறைவன் அருளால் இந்தியத் திருநாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவி ஏற்பது யார் செய்த புண்ணியமோ?
நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கியவனுக்கு தண்ணீர் எப்படித் தப்பிக்க மூன்று வாய்ப்புகள் வழங்குமோ அது போல இறைவன் தங்களுக்கு மூன்றாவது வாய்ப்பை அளித்துள்ளார் என்பதை நினைவிலேந்தி ஏழைத்தாயின் மகனாக பிறந்த தாங்கள் இம்முறையாவது ஏழை எளிய வறிய நடுத்தர வர்க்க மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே பாரத மக்களின் மிகுந்த பேரவாவையும் பூர்த்தி செய்வார் என நம்பலாம்.ஜவகர்லால் நேருவுக்குப் பின் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்ற ஒருவர் நரேந்திரமோடி என்றே பல ஊடகங்கள் தகவல் தருகிறார்கள்.
இந்திராகாந்தி 1966, 1967, 1971 மற்றும் 1980 -ஆம் ஆண்டு என 4 முறை பிரதமராக இருந்தார்.
அடல் பிகாரி வாஜ்பேய் 1996, 1998, 1999 - என மூன்றுமுறை பிரதமராக இருந்தார்.
ஜவகர்லால் நேருவைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியேற்கும் ஒரே மனிதர் என் நரேந்திர மோடியை மீடியாக்கள் சொல்கின்றன. அதற்கு காரணம் வரலாறு அறியாமல் வந்த செய்தி ஆசிரியர்களில் பலர்
வழக்கம் போல நடிகர் ரஜினிகாந்த் இதைச் சொல்வது குறித்து சொல்லவேண்டுமானால் அவர் அடுத்தவர் எழுதிய வசனம் தான் இதுவரை பேசி நடித்தார் அதுவே இதிலும் நமக்கேதும் கருத்தில்லை.
கருத்துகள்