நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் சிவகங்கை நடராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த வழக்கில் தொடர்புடைய பாலசுப்பிரமணியன், முத்துக்குமார், ரம்யா, சசிகலா, கார்த்திகேயன், இளையராஜா, சார்லஸ், நடேஷ்பாபு உள்ளிட்டோர் மோசடி செய்த பணத்தில் அதிக அளவில் சொத்துக்கள் வாங்கிக் குவித்துள்ளனர்.
இந்தச் சொத்துக்களின் பட்டியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுசொத்துக்களை முடக்கவும், ஜப்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அதனடிப்படையில் இவர்களின் சொத்துக்கள் மற்றும் இவர்களது பினாமிகளான உறவினர்களின் சொத்துக்களை முடக்கி ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,” எனக் கூறப்பட்டிருந்தது.
அது போலவே கும்பகோணம் கௌதமி தாக்கல் செய்த மனுவில், “நியோமேக்ஸ் நிறுவனத்தில் ரூபாய்.10 லட்சம் முதலீடு செய்துள்ளேன். நியோமேக்ஸ் இயக்குநர்களின் பேச்சை நம்பி உறவினர்களிடம் பேசி ரூபாய். ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வைத்தேன். இது தொடர்பாக நியோமேக்ஸ் இயக்குனர்களிடம் கேட்டதற்கு அவர்கள் என்னை தாக்க முயன்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,” எனக் கூறியிருந்தார். இந்த மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்த போது, போதுமான பணியாளர்கள் இல்லை என்று கூறி வழக்கு விசாரணைக்கு சிபிஐ மறுப்பு தெரிவிக்கும். இந்த வழக்கை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில் அதன் தற்போதைய நிலை என்ன?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது? எவ்வளவு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதா? அதன் விபரம் என்ன? என்பது தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறை விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்தி. வைத்தார். ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களில் பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் இதுவரை புகார் அளிக்கவில்லை எனத் தெரிகிறது அவர்கள் ஜூலை மாதம் 5 ஆம் தேதிக்கு முன் புகார் தரவில்லை எனில் முதலீடு செய்த பணம் அவர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என் தகவல் வருகிறது.
கருத்துகள்