உச்சநீதிமன்றத்தில் சீமான் வழக்கில் பிரபல மூத்த வழக்கறிஞர் நிர்னிமேஷ் துபே'.ஆஜராகி இடைக்காலத் தடை பெற்றார்.
விஜயலட்சுமி சீமான் மீது தொடுத்த பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான நடிகர் சீமானுக்கு எதிரான பாலியல் புகார் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றி விட்டதாக, 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி, பிப்ரவரி மாதம்.17-ஆம் தேதி சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என அவரது மனு தள்ளுபடி ஆனது
மேலும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால், சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென வளசரவாக்கம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டு சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி பதிலளித்தார்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த மனு நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “மனுதாரரான சீமானுக்கு எதிராக கடந்த 2011-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட இந்த பாலியல் புகார் அரசியல் காரணங்களுக்காக மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளது. சீமானுக்கு எதிராக புகார் அளித்த அந்த நடிகையே மூன்று முறை வழக்கை திரும்பப் பெற்றுள்ளார்.
விஜயலட்சுமியுடன் பழக்கமிருந்து பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். சீமானுக்கு எதிரான புகாரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அவரே கடிதமும் கொடுத்துள்ளார். தற்போது சீமானை துன்புறுத்தும் நோக்கில் பழைய புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதனால் சீமானின் அரசியல் பொதுவாழ்வுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,” என்றார்.
குறுக்கிட்ட நீதிபதிகள், “புகார் அளித்த அந்தப் பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளார் தானே? அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்பட்டுள்ளதா?” என்றனர். அதற்கு சீமான் தரப்பில், “விஜயலட்சுமியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்,” என தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிபதிகள், சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை மே மாதத்துக்கு தள்ளி வைத்தார். மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக இருதரப்பிலும் சமரசமாக பேசி முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கில் மூத்த வழக்கறிஞர் நிர்னிமேஷ் துபே'.. இவர் RSS பின்புலம் கொண்ட வழக்கறிஞர் இவர் ஆஜரான ஆன வழக்குகள் அர்னாப் கோஸ்வாமி வழக்கு, ஒரு கிரிக்கெட் லீக் அணி ஒன்றின் வழக்கு, இன்னும் சில பாஜகவினர் தொடர்புடைய வழக்குகளாகும். அர்னாப் கோஸ்வாமிக்கு அவசரமாக ஜாமீன் வாங்கியது இந்த வழக்கறிஞர் தான். அதிக வழக்கு சம்பளம் வாங்கக் கூடிய பிரீமியர் வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வேடிக்கை விஜயலட்சுமியை தூண்டி விடுவதும் சீமானை காப்பாற்றுவதும் ஒரே அமைப்பு தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.நடிகர் சீமான் - நடிகை விஜயலஷ்மி வழக்கில் ஏற்கனவே சீமானை விசாரித்துவிட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை இல்லாமல் விட்டது அரசு தரப்பில் நடந்த நிலையில்!
நடிகை விஜயலஷ்மியும் நடிகர் சீமானின் அரசியல் செல்வாக்கின் முன்பு ஒன்றும் எடுபடவில்லை…என்று அழுதவாறு சொல்லிவிட்டு பெங்களுர் சென்றார்.
தற்போது உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் உண்மைத் தன்மையை உள்வாங்கி, இந்த வழக்கை 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை கொடுங்கள். விரைந்து முடிவுக்கு கொண்டு வரலாம் என்று சொன்னதால் தான் காவல்துறை சீமானை விசாரிக்கத் துணிந்தது!
ஆனால், சீமான், ’திமுக அரசு தன்னைப் பழி வாங்குவதாக’ பிரச்சாரம் செய்தார்
உச்ச நீதிமன்றத்தில் சீமான் தன்னை விசாரிக்கத் தடை கோரிய வழக்கில் இன்று அரசு தரப்பில் முன் கூட்டியே கேவியட் மனு போட்டு, இந்த வழக்கின் தன்மையைக் கூறி, ''உயர் நீதிமன்றம் விசாரிக்கக் கூறியதால் தான் நாங்கள் விசாரிக்கிறோம். இந்த வழக்கை நியாயப்படி விசாரித்து, சட்டப்படி தான் செயல்படுவோம். இதில் அரசியல் பழி வாங்கல் எதுவும் இல்லை'' எனச் சொல்லி இருக்க வேண்டும்.
மேலும், ''சீமான் தரப்பில் சமரசம் மேற்கொள்ளப்படுகிறது என்று சொல்வது அப்பட்டமான பொய்யா உண்மையா. தெரியவில்லை நேற்று கூட இவர் சம்பந்தப்பட்ட பெண்ணை பாலியல் குற்றவாளி என்று பேசினார்'' என்பதை விளக்கி இருந்தால், தற்போது சீமானுக்கு தடை கிடைத்திருக்காது.
சீமானைப் பற்றி பொதுவெளியில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிடுவதே போதுமானது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் செய்வது என்பது முக்கியமே இல்லை. அதில் நமக்கு லாபமில்லை என்று பார்ப்பது அரசியல் கணக்கு
இதை இன்னும் எத்தனை நாளுக்கு தான் பேசு பொருளாகவே வைத்து மக்களை திசை திருப்பும் அரசியல் நடக்கும் விடை தெரியவில்லை. உச்சநீதிமன்றம்
சீமான் தரப்பு வாதத்தை வைத்து இடைக்காலத் தடை விதித்தது
தமிழ் நாடு காவல் துறை மற்றும் எதிர் தரப்புக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ் நாடு அரசும் மற்றும் நடிகை விஜயலட்சுமியின் தரப்பும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்.
பின்னர் விரிவான விசாரணை நடக்கும். இதுவே உண்மை நிலை உயர் நீதிமன்றம் 12 வாரங்கள் விசாரணை அவகாசம் வழங்கியது அதை. உச்சநீதிமன்றம் 8 வாரங்களில் பேசி முடிவு செய்யக் கூறியுள்ள நிலையில் இதில் நிச்சயமாக 12 வாரத்தில் முடிவு எட்டப்படும்.இதில் பொது நீதி யாதெனில்:- "வெடி வெடித்து கொண்டாடும் நாம் தமிழர் கட்சியினர் அடுத்த தலைவரை திட்டுவதற்கோ நாங்கள் தான் ஜெயிச்சுட்டோம்னு இதில் மார்தட்டுவதற்கோ இதில் ஒன்றும் நடக்கவில்லை. புகார்தாரர் விஜயலெக்ஷ்மி விடம் இன்னமும் சமாதானமும் ஏற்படவில்லை மாறாக என்னை மிரட்டுகிறார்கள் என்று கூறி விஜயலெக்ஷ்மி ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து.
தமிழ்நாடு அரசு தரப்பில் வொகேட் ஸ்டே மனுவை தாக்கல் செய்து.
உச்சநீதிமன்றம் அதை அனுமதித்தால். மீண்டும் வழக்கு விசாரணைக்கு உடனேவந்துவிடும்.
குட்டி குலைத்து தாய் தலையில் வைத்த கதையாக நாம் தமிழர் தம்பிகள் மிதமிஞ்சி ஆட்டமாடி அவர்கள் அண்ணனை உள்ளே அனுப்பி விடுவார்களோ என்ற நிலையை அவர்கள் உணரவில்லை"
கருத்துகள்