முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் உயர் அலுவலர்களை  பணியிடமாற்றம் செய்து அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவு. தமிழ்நாடு அரசுப் பணியில்  மூன்றாண்டுகள் ஒரே பணியிடத்தில் பணியாற்றிய நபர்களை இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறை தான் அதேபோல் சட்ட மன்றப் பேரவை, நாடாளுமன்றத் தேர்தல் நேரங்களில் அனைத்து நிலைகளிலும் இடமாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில் கடந்த  மூன்று மாதங்களாக ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் தொடர்ச்சியாக இடமாற்றம் செய்யப்படுகின்றனர். ஜூன் மாதத்தில் மட்டும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 55 ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் ஒரே நேரத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் பின் ஜூலை மாதம் துவக்கத்தில் 9 ஐஏஎஸ் உயர் அலுவலர்களைப் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலையில் மீண்டும் ஜூலை மாதத்தின் கடைசி நாளில் மீண்டும் 11 ஐஏஎஸ் உயர் அலுவலர்களை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளதில்   நிதித்துறை செலவினச் செயலாளராக பிரசாந்த் மு வடநெரே, நிதித்துறை இணைச் செயலராக ராஜகோபால் சுன்கரா, நில அளவைத்துறை இயக்குநராக தீபக் ஜேக்கப், போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு ஆணையராக கஜலட்சுமி,...

காலங்கள் கடந்தும் நடைமுறையில் வராமல் கிடப்பிலுள்ள மோகன் கமிஷன் அறிக்கை

காலங்கள் கடந்து போன நிலையில் அறிவிக்கப்படாத கமிஷன் முடிவுகள். தமிழ்நாட்டில்       தென் மாவட்டங்களில் நடைபெற்ற ஜாதிய மோதல்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி காலஞ்சென்ற மோகன் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்தக் கமிஷன் மதுரையில் செயல்பட்டு விசாரணை நடத்தி முடித்து ஒரு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. அந்த அறிக்கை, கலவரங்களின் பின்னணியில் உள்ள காரணங்கள், மோதல்களுக்கு யார் காரணம், மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற மோதல்களைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கியது.  ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் கமிஷன் அறிக்கை: ஜாதிய ரீதியான பாகுபாடு, நிலப்பிரச்சினைகள், அரசியல் காரணிகள் மற்றும் சமூக பொருளாதார வேறுபாடுகள் போன்ற காரணங்களால் கலவரங்கள் ஏற்பட்டதாகக் கூறியது. கலவரங்களைத் தூண்டிய மற்றும் அதில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தது. ஜாதிய மோதல்களைத் தடுக்க, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட, அனைவருக்கும் உயர்வு தாழ்வு இல்லாமல் சம வாய...

39 ஆண்டு காலப் பணி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி ஓய்வு

39 ஆண்டுகால முன்மாதிரியான சேவைக்குப் பிறகு ராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி ஓய்வு பெறுகிறார். லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி இன்று ஓய்வு பெற்றார், இது முப்பத்தொன்பது ஆண்டுகால புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் முடிவைக் குறிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், அவர் இராணுவத் தளபதியின் துணைத் தலைவர் (VCOAS) நியமனத்தையும் துறந்தார். சீருடையில் பொது அதிகாரியின் புகழ்பெற்ற பயணம் தேசிய பாதுகாப்பு அகாடமியில் தொடங்கி டிசம்பர் 1985 இல் தி கர்வால் ரைபிள்ஸில் நியமிக்கப்பட்டார். விதிவிலக்கான கல்வித் திறன் கொண்ட அதிகாரியான இவர், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் கலை முதுகலைப் பட்டமும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் படிப்பில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ளார். தனது பணிக்காலம் முழுவதும், லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரமணி பல்வேறு செயல்பாட்டு மற்றும் நிலப்பரப்பு சுயவிவரங்களில் பரந்த அளவிலான கட்டளை, பணியாளர்கள் மற்றும் அறிவுறுத்தல் நியமனங்களை வகித்துள்ளார். குறிப்பாக மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் மூலோபாய மற்றும் தந்திரோபாய இயக்கவியல் பற்றிய அவரது ஆழமான புரிதல், செயல்பாட...

நாளை முதல் பதிவுத் தபால் சேவையை நிறுத்துகிறது அஞ்சல் துறை

தபால் துறையில் நவீனமாக்கலின் ஒரு பகுதியாக செப்டம்பர் மாதம்., முதல், பதிவுத் தபால் ஒப்புதல் அட்டை சேவை ரத்து செய்யப்படுகிறது. இதற்கு, தபால் ஊழியர்கள் சங்கங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனதபால் துறையில் சாதாரண தபால் அனுப்பும் போது அது போய் சேர்ந்ததா, இல்லையா என உறுதிசெய்ய முடியாது. அதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுத் தபால் முறை நல்ல வரவேற்பை பெற்றது.இந்த முறையின்படி, தபால் உரியவரிடம் சேர்ந்ததும், அவர் கையெழுத்துடன் ஒப்புகைச் சீட்டு நம் கைக்கு வந்துவிடும். தபாலின் எடையைக் கணக்கிட்டு பதிவுத் தபாலுக்கு கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இதன் தொடர்ச்சியாக, உடனடியாக 'டெலிவரி' என்ற அடிப்படையில் ஸ்பீடு போஸ்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும், பதிவு தபால் போன்றது என்றாலும், கி.மீ., அடிப்படையில் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.பதிவுத் தபாலை விட ஸ்பீடு போஸ்ட் முறைக்கு தான் தற்போது வரவேற்பு அதிகம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாதம் முதல் பதிவு தபால் சேவை ரத்து செய்யப்படுவதாக தபால் துறை அறிவித்துள்ளது. அதுபோல் ரயில் மெயில் சேவையும் ரத்தாகிறது. இனி, இந்தியாவிற்குள் தர...

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக ஒரு பிரிவு விலகல்

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக ஒரு பிரிவு விலகுவதாக அறிவிப்பு குறித்து பண்ருட்டி இராமச்சந்திரன் தகவல் கூட்டணியில் இருந்து விலகினார் ஓ.பன்னீர் செல்வம் தற்போதைக்கு கூட்டணியில்லை  தற்போதைக்கு கூட்டணி குறித்து எந்த முடிவுமில்லை; தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார்  என பண்ருட்டி ராமச்சந்திரன தகவல்  தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவை முறித்துக் கொள்கிறோம்   இனி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம்  இன்றைய சூழலில் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை  சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு தகவல் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் 3 முக்கிய முடிவு எடுத்துள்ளோம்  அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவது முதல் முடிவு  தொண்டர்களைச் சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது அடுத்த முடிவு   தற்போதைய சூழலில் எந்தக் கூட்டணியிலும் நாங்கள் இல்லை என்பது மூன்றாவது முடிவு - இதில் ஒரு அரசியல் பார்வை ;- நேற்று ஒ.பன்னீர் செல்வத்துக்க...

கவின் கொலையில் கொலையாளியின் தந்தை கைது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.

கவின் கொலை வழக்கு  காவல் உதவி ஆய்வாளர் கைது மாற்று ஜாதி பெண்ணை விரும்பியதால், ஐ.டி நிறுவனத்தில் பணி செய்த ஊழியர் கவின் கொலை  கொலையாளியின் தந்தை காவல்துறை உதவி ஆய்வாளர் சரவணன் கைது.  கொலையாளியான சுர்ஜித் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர பட்டதாரி இளைஞர் கவின்குமார், பிற்படுத்தப்பட்ட மாற்று ஜாதிப் பெண்ணை விரும்பிய நிலையில் அந்தப் பெண்ணின் சகோதரனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு சமூகம் சார்ந்த மக்கள் திரண்டு தூத்துக்குடி சாலையில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் அதன் பின்னர் காவல் துறையில் பணியாற்றி வந்த கொலை செய்த நபரின் தந்தை கைது செய்யப்பட்டார். மகன் செய்த தவறுக்கு தாய். தந்தை மட்டும் பொறுப்பா?  இல்லை தாய் தந்தையைப் பெற்றெடுத்த தாத்தா பாட்டியும் பொறுப்பா? குற்றவாளியைக் கைது செய்வது நியாயம் அதற்காக குடும்பத்தையே கைது செய்யக் கோரிக்கை வைப்பது எந்த வகையான நியாயம் ?  அது நீதிமன்றத்தில் நிற்குமா... என்பது இங்கு பலரும் அறியவில்லை.              ...

வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட நிசார்

வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட நிசார்..  பூமிப்பரப்பில் நிகழ்வு மாற்றங்களை விரிவாக ஆய்வு செய்ய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான (நாசா) இணைந்து உருவாக்கிய 'நிசார்' (NISAR - NASA-ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளானது12 நாட்களில் முழுமையாக பூமியை ஸ்கேன் செய்யக்கூடிய திறனுள்ளது என்பதால், உலகளாவிய புவி அறிவியல் ஆய்வுகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் எனலாம். நிசார் என்பது பூமியின் தரைப் பகுதி மற்றும் பனிக்கட்டிகளின் மேற்பரப்பில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறியக்கூடிய, அதிநவீன ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் . இது L-பேண்ட் மற்றும் S-பேண்ட் ஆகிய இரண்டு வெவ்வேறு அதிர்வெண் ரேடார்களைப் பயன்படுத்துவதனால், புவி மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை மிகவும் துல்லியமாக அளவிட முடியும்.சிந்தெடிக் அபெர்ச்சர் ரேடார் (SAR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிசார் செயற்கைக்கோள், பெரிய ஆண்டெனாவைப் பயன்படுத்தாமலேயே, அதிக தெளிவுத்திறன் கொண்ட படங்களை எடுக்க அனுமதிக்கிறது. ரே...

பாரத் சிஐஎஸ்ஓவின் மாநாடு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடக்க கண்காட்சி பாரத் என்சிஎக்ஸ் 2025

தேசிய பாதுகாப்பு கௌன்சில் செயலகம் பாரத் சிஐஎஸ்ஓவின் மாநாடு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடக்க கண்காட்சி பாரத் என்சிஎக்ஸ் 2025 இன் கீழ் தொடங்கப்பட்டது. பாரத் தேசிய சைபர் பாதுகாப்பு பயிற்சி (பாரத் NCX) 2025 இன் ஒருங்கிணைந்த கூறுகளான பாரத் CISOவின் மாநாடு மற்றும் பாரத் சைபர் பாதுகாப்பு தொடக்க கண்காட்சி இன்று புதுதில்லியில் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டன. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS) ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்துடன் (RRU) இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுகள், சைபர் பாதுகாப்பு மீள்தன்மையை மேம்படுத்துதல், புதுமைகளை வளர்ப்பது மற்றும் நமது சைபர் இடத்தைப் பாதுகாக்க பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. CISOவின் மாநாடு, நாட்டின் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் மூலோபாய விவாதங்கள் மற்றும் அறிவு பரிமாற்றத்தை எளிதாக்கியது. முக்கிய அமர்வுகளில், "புவிசார் அரசியல் பதட்டங்களின் யுகத்தில் சைபர் பாதுகாப்பு", வளர்ந்து வரும் உலகளாவிய இயக்கவியலின் மத்தியில் வளர்ந்து வரும் சவால்களை நிவர்த்தி செ...

இந்திய ரயில்வே 6 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் கவாச் 4.0 ஐ இயக்கும்

டெல்லி-மும்பை வழித்தடத்தில் மதுரா-கோட்டா பிரிவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கவாச் 4.0 இயக்கப்பட்டது. பரபரப்பான டெல்லி-மும்பை வழித்தடத்தின் மதுரா-கோட்டா பிரிவில் கவாச் 4.0 ஐ சாதனை நேரத்தில் இயக்கியது ஒரு பெரிய சாதனை: ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ் கவாச், பயனுள்ள பிரேக் பயன்பாடு மூலம் லோகோ பைலட்டுகளுக்கு வேகக் கட்டுப்பாட்டை செயல்படுத்துகிறார்; லோகோ பைலட்டுகள் மூடுபனியிலும் கூட வண்டியின் உள்ளே சிக்னல் தகவலைப் பெறுவார்கள் இந்திய ரயில்வே 6 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் கவாச் 4.0 ஐ இயக்கும்; பல வளர்ந்த நாடுகள் ரயில் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்த 20-30 ஆண்டுகள் எடுத்துக் கொண்டன ரயில்வே பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பு: கவாச் பல பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆண்டுக்கு ₹1 லட்சம் கோடி முதலீட்டின் ஆதரவுடன் அதிக அடர்த்தி கொண்ட டெல்லி-மும்பை வழித்தடத்தின் மதுரா-கோட்டா பிரிவில், இந்திய ரயில்வே, உள்நாட்டு ரயில்வே பாதுகாப்பு அமைப்பான கவாச் 4.0 ஐ இயக்கியுள்ளது. இது நாட்டில் ரயில்வே பாதுகாப்பு அமைப்புகளை நவீனமயமாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “மாண...