கவின் கொலை வழக்கு காவல் உதவி ஆய்வாளர் கைது மாற்று ஜாதி பெண்ணை விரும்பியதால், ஐ.டி நிறுவனத்தில் பணி செய்த ஊழியர் கவின் கொலை
கொலையாளியின் தந்தை காவல்துறை உதவி ஆய்வாளர் சரவணன் கைது. கொலையாளியான சுர்ஜித் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர பட்டதாரி இளைஞர் கவின்குமார், பிற்படுத்தப்பட்ட மாற்று ஜாதிப் பெண்ணை விரும்பிய நிலையில் அந்தப் பெண்ணின் சகோதரனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு சமூகம் சார்ந்த மக்கள் திரண்டு தூத்துக்குடி சாலையில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் அதன் பின்னர் காவல் துறையில் பணியாற்றி வந்த கொலை செய்த நபரின் தந்தை கைது செய்யப்பட்டார்.
மகன் செய்த தவறுக்கு தாய். தந்தை மட்டும் பொறுப்பா? இல்லை தாய் தந்தையைப் பெற்றெடுத்த தாத்தா பாட்டியும் பொறுப்பா?
குற்றவாளியைக் கைது செய்வது நியாயம் அதற்காக குடும்பத்தையே கைது செய்யக் கோரிக்கை வைப்பது எந்த வகையான நியாயம் ? அது நீதிமன்றத்தில் நிற்குமா... என்பது இங்கு பலரும் அறியவில்லை. ஏறத்தாழ சம வயதுள்ள இளைஞரை, மற்றொரு இளைஞர் வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு இந்த சமூகத்தில் ஜாதியப் பிரச்சினை தொடர்வதற்கு அரசியல் கட்சிகள் தான் காரணம் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெற்றோர்களின் அதிகாரம் கொடுக்கும் துணிச்சலோ அல்லது, சமூகம் கொடுத்த முட்டாள்தனமான தைரியமோ, எதுவாக இருந்தாலும், இன்னொரு உயிரை எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இது போன்ற கொலைகள் தொடர்வது, தமிழ்ச் சமூகத்தைப் பிற்போக்குப் பாதையில் தான் கொண்டு செல்லும் தவிர, யாருக்கும் எந்த நலனும் கிடைக்கப்போவதில்லை. என்ற பாஜகவின் அண்ணாமலை கருத்து தான் அனைவரது கருத்தாகும். ஆனால் மன்னர் காலத்தில் இருந்து இன்று வரை இந்த நிலை தொடர்கிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் உவச்சர் குலம் மன்னர் மகளான அமராவதியை விருப்பவே கம்பர் மகன் அம்பிகாபதி சிரச்சேதம் செய்த பிறகு கம்பர் சோழ நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்ட பழைய வரலாறு தான் இங்கு இன்று வரை பேசப்படுகிறது அதில் அம்பிகாபதி கொலையான இறப்பு தெரிந்து அமராவதிம் மாண்டது தான் வரலாறு இன்னும் பேசும் நிலை உள்ளது. அது சரித்திரம். அதுபோல பாரதிராஜா திரைப்படம் துவங்கி இன்று வரும் திரைப்படங்கள் வரை மக்கள் காதலை ஆதரிக்கிறது கைதட்டி வரவேற்கும் நிலையில். ஆனால் சம்பவங்கள் உண்மையில் ஜாதி விட்டு ஜாதி காதலித்து வெற்றி பெற்ற சிலரைத் தவிர பலரது வாழ்க்கை கேள்விக்குறி தான் இந்த நிலையில் நன்கு வாழ வேண்டிய இளைஞரின் வாழ்க்கை, ஜாதியின் பெயரால் பறிக்கப்பட்டிருப்பதற்கு காரணமாக ஜாதிய ஏற்றத்தாழ்வு நிலை எங்கும் நிலவுகிறது. நாட்டில் குடியரசுத் தலைவராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வந்த நிலையில் இன்னும் கிராமங்களில் மாறாமல் இருக்கும் காரணம் குறித்து யாருக்கும் தெளிவான பார்வை இல்லை போலியாக கட்டமைக்கப்பட்ட
சமத்துவபுரங்களால் ஜாதிகள் ஒழிந்துவிடும் என்பது தான் இப்போது நடக்கும் விவாதம், 1965 , ஆம் ஆண்டு வரை எந்த ஜாதிச் சண்டைகள் மற்றும் மதச் சண்டைகள் நிகழவில்லை அதன் பின்னர் நடப்பதன் காரணம் அரசியல் வி(வா)யாதிகள் மற்றும் அரசியல் வியாபாரிகள் தான்.
பல தலைமுறைகள் கடந்தும், ஜாதியப் படிநிலைகள் இன்னும் சமூகத்தில் புரையோடியிருப்பதைப் பார்க்கும்போது, பண்பட்ட சமூகம், உலகின் தொன்மையான குடி என்றெல்லாம் பெருமை பேசிக் கொள்ளும் தகுதி நமக்கு இல்லை காரணம் சலுகைகள் பெறும் ஜாதி சலுகைகள் இல்லாத ஜாதி இதுவே அடிப்படையில் மாறாத போது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்க அரசியல் கட்டமைப்பு யாருமே இத்தனை ஆண்டு காலம் உருவாக்க வில்லை அதற்கு முயற்சிக்காமல் துவேசம் உருவாக்கும் ஜாதியத்தில் உருவான தலைவர்கள் மற்றும் ஜாதிக்கு ஒரு தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் ஆகியவை தமிழகத்தின் சாபக்கேடு.நடந்த கொலை அதிகாரக்கொலையோ அல்லது ஆணவக் கொலையோ அல்லது கௌரவக் கொலையோ ஏதோ ஒன்று நடந்துள்ளது இதில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட போர் அல்லது முற்பட்டார்கள் என்பதல்ல சுதந்திர இந்தியாவில் அணைவரும் ஒரே சுவாசக் காற்றையும், நீரையும், விளையும் உணவையும் உரிமை கொண்டாடும் போது காதலும் சுதந்திரமாக வருகிறது. ஆனால் வாழ்வியல் முறைகள் மட்டுமே மாறுபடுகிறது.. புலால் உண்பவர்கள் புலால் உண்ணாதீர்கள். கடவுள் வழிபாடு கொண்ட நபர்கள் கடவுள் இல்லை என்று கூறுபவர்கள். எப்படி ஒரே படிநிலை வராதோ அதுபோலவே அரசியல் ரீதியாக ஆயிரம் சமத்துவ புரம் இருந்தாலும் அக்கிரஹாரமும் குடியானவன் தெருவும் ஒரு பக்கம் பிரித்தாலும் சூழ்நிலையில் கடந்த 15 ஆண்டு காலமாக புழக்கத்தில் உள்ள தலித் என்ற வார்த்தை அடைமோழி வருகிறது இதை துவங்கி வைத்தவர் பழைய பாமக பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எழில் மலை ஆனால் ஏதோ ஒரு வார்த்தை தான் இருவருக்கும் இருக்கும் வேற்றுமை அது இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி பகுதியில் அதிகம் இதில் நடந்த நிகழ்வு குறித்து ஒரு பார்வை:கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் தேதி ஜூலை மாதம் 2025 தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் 27 வயது ஆதிதிராவிடர் சமூக இளைஞரான கவின் செல்வ கணேஷ் என்பவரை மாற்று பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞர் சூர்ஜித் (வயது 23) என்ற நபரால் படுகொலை செய்யப்பட்டார், அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள நிலையில் நேற்று காலை ஜூலை 30, ஆம் தேதி 2025 ல் குண்டர் சட்டத்தில் சேர்க்கப்பட்டார். கவின் செல்வ கணேஷின் கொலைக்குப் பிறகு, காவல்துறை சூர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் அவரது தாயார் கிருஷ்ணகுமாரி (உதவி காவல் ஆய்வாளர்) ஆகியோரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த கவின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். மேலும், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற ஜாதியினரால் தாக்கப்படும் அல்லது கொலை செய்யப்படும் சம்பவங்களில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையையும் பெற மறுத்துவிட்டனர். கொலை செய்தவனின் தந்தை
சரவணன் மற்றும் தாயார் கைது செய்யப்பட்ட பின்னரே பிரேதத்தைப் பெற்றுக்கொள்வோம் என கவின் குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இந்த மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர் சந்தோஷ் ஹதிமணி ஆகியோர் நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் குற்றம் இளைத்த நபரின் தந்தை சரவணன் என்பவரைக் கைது செய்ய உத்தரவிட்டார் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சரவணன் கைது செய்யப்பட்டதையடுத்து, கவின் குடும்பத்தினரிடம் இன்று வியாழக்கிழமை (ஜூலை 31, 2025) பிரேதம் பரிசோதனை முடித்து பெற்றுக்கொள்வார்கள் எனத் தெரிகிறது, இந்த வழக்கின் விசாரணையை குற்றப்பிரிவு-குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CB-CID) மாற்றியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த காலங்களில் சில நிகழ்வுகள் தொகுப்பு காதல் பஞ்சாயத்து கொலைகளாக ஆய்வு செய்து பார்த்தால் சில உண்மைகள் புரியும்;-
கடந்த மாதம் சிதம்பரத்தில் விஸ்வகர்மா எனும் ஆச்சாரி சமூக இளைஞனை காதலித்ததற்காக ஒரு ஆதிதிராவிடத் தந்தையே தன் பெண்ணை கழுத்தறுத்து கௌரவக்கொலை செய்தான்,
அதேபோல் கடந்த வருடம் தஞ்சாவூரில் ஒரு ஆதிதிராவிடர் இளைஞன் தன் தங்கையை திருமணம் செய்த அகமுடையார் சமூகத்தின் இளைஞனை ஆணவக்கொலை செய்தான். அதேபோல்
ஏழெட்டு வருடங்களுக்கு முன் விழுப்புரத்தில் ஒரு ஆதிதிராவிடர் சமூகப் பெண்ணை ஆதிதிராவிடரில் மற்றொரு பிரிவான அருந்ததியர் சமூக இளைஞன் கலப்புத் திருமணம் செய்தான் என அந்தப் பெண்ணை கூட்டி வந்து கொரவக்கொலை செய்தது அந்த ஆதிதிராவிடர் குடும்பம். அதேபோல்
ஆறு மாதம் முன்பு, இராணிப்பேட்டையில் கிரிக்கெட் பிரச்சனை என யாதவர் அல்லது கோனார் சமூக இளைஞர்கள் இருவரை பெட்ரோல் ஊ.ற்றி தீ
வைத்துக் கொளுத்தி அதில் ஒரு இளைஞனைக் கொலை செய்த ஆதிதிராவிடர் அதுபோல
பத்து வருடங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நாற்பது வயதான குடிகார மாற்றுத் திறனாளி ஆதிதிராவிடர் இளைஞன் தன்னைக் காதலிக்க வலியுறுத்தி வெறும் 16 வயதான நவீனா என்ற சிறுமியை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி கொலை செய்தானே? அதுபோல
ஏழாண்டுகளுக்கு முன்பு விருத்தாசலத்தில் திலகவதி என்ற வன்னியர் பெண் தன்னை காதலிக்கவில்லை எனக் கூறி ஒரு ஆதிதிராவிடர் இளைஞன் ஒருவன் வீடுபுகுந்து வெ.ட்டிப் படுகொலை செய்த நிகழ்வு மற்றும்
கடந்த மாதம் கன்னியாகுமரியில் இஸ்லாமியப் பெண்ணை காதலித்ததற்காக ஒரு ஹிந்து ஆதிதிராவிடர் இளைஞன் அந்த இஸ்லாமிய பெண் வீட்டிலேயே ஆணவக் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டான் அதேபோல்
கடந்த மாதம் பூந்தமல்லி மைனர் கடத்தல் பேர்வழிகள் குறித்து பேசாமல்
இப்படிக் குற்றவாளி ஒரு ஆதிதிராவிடராக இருந்தாலும் சரி, அதில் பிற சமூகம் பாதிக்கப்பட்டாலும் சரி, பொதுப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, எங்கேயாவது ஒரு ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமையைச் சீர் குலைந்து நடந்த ஆ(ஈ)ணவகொலையையோ, கௌரவக்கொலையையோ இங்கு யாரும் ஆதரிக்கவில்லை. ஆனால் அரசியல் வியாபாரிகள் நடத்தும் பச்சோந்திதனத்தைத் தான் கேள்வியாக கேட்டு பொதுசமுகம் காரி உமிழ்கிறது. திருந்துங்கள் போலி ஜாதி ஒழிப்புப் கோமாளிகளே! என் கவின் கொலைக்கு கண்டனம் எழுப்பியவர் எல்லாம் சென்ற வருடம் ஆதிதிராவிட வீட்டுப் பெண்ணை காதலிச்சான்னு சொல்லி மாற்று சமூக நபரை கடையில் புகுந்து வெட்டிக் கொன்றது எந்த வகை ஆணவக் கொலையில் சேரும்? இன்று ஒலிக்கும் சத்தம் மிகுந்த கண்டனக் குரல்கள் அன்று ஒலிக்கவில்லையே! காதலிக்க மறுக்கும் பெண்களைப் பின்தொடர்ந்து சென்று தொல்லை தந்து அந்தப் பெண்ணை கொலை செய்யும் போது பெண் மற்றும் ஆணின் ஜாதியைப் பொறுத்துத் தான் கண்டனம் தெரிவிப்பார்கள். இங்கு கவி என்பவர் பழகிய மற்ற பெண்கள் குறித்து சமூக வலைதளங்களில் காணும் படங்கள் இப்போது பேசு பொருளாக வருகிறது. ஜாதி அரசியல் மாறாத வரை இந்தக் கொடுமைகள் தொடர் கதையாக வருகிறது.
கருத்துகள்