முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக ஒரு பிரிவு விலகல்

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக ஒரு பிரிவு விலகுவதாக அறிவிப்பு குறித்து பண்ருட்டி இராமச்சந்திரன் தகவல் கூட்டணியில் இருந்து விலகினார் ஓ.பன்னீர் செல்வம் தற்போதைக்கு கூட்டணியில்லை 


தற்போதைக்கு கூட்டணி குறித்து எந்த முடிவுமில்லை; தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார்  என பண்ருட்டி ராமச்சந்திரன தகவல் 

தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவை முறித்துக் கொள்கிறோம்  

இனி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம் 




இன்றைய சூழலில் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை 

சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு தகவல்

சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் 3 முக்கிய முடிவு எடுத்துள்ளோம் 

அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவது முதல் முடிவு 



தொண்டர்களைச் சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது அடுத்த முடிவு  

தற்போதைய சூழலில் எந்தக் கூட்டணியிலும் நாங்கள் இல்லை என்பது மூன்றாவது முடிவு - இதில் ஒரு அரசியல் பார்வை ;-நேற்று ஒ.பன்னீர் செல்வத்துக்கு ஊடகங்கள் தந்த அதி முக்கியத்துவம் பலரது சிரிப்பை வரவழைத்தது.

அவர் நேற்று முக்கிய அரசியல் முடிவு எடுக்கப் போகிறார். என 

மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவரைப் போலவும், இவர் எடுக்கும் முடிவால் தமிழ்நாடு அரசியலே தலைகீழாக மாறி விடும் என்பது போலவும் முக்கியத்துவம் தரப்பட்ட நிலையில் 

முதலில் ஒ.பன்னீர் செல்வம் ஒரு அரசியல் ரீதியாக தலைவரே அல்ல.

சந்தர்ப்ப வசத்தால் சூழ்நிலையில் தான் மூன்று முறை முதல்வராகும் வாய்ப்புப் பெற்றார். தான் சார்ந்த ஜாதி பலமும் இல்லை இவர் திறமைசாலி என்பதாலோ, அறிவாளி என்பதாலோ, மக்கள் செல்வாக்குப் பெற்றவர் என்பதாலோ முதலமைச்சராக ஆக்கப்படவில்லை. அது டி.டி.வி.தினகரன் சிபாரிசு காரணமாக ஒரு டீக்கடை முதலாளி. தன் விசுவாசி என்பதால் நடந்த விபத்து. உண்மையில் இது போன்ற தகுதிகள் எதுவும் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நபர் வெறும் களிமண் என்பதாலேயே ஜெ.ஜெயலலிதாவால் இரு இக்கட்டான சூழல்களில்  முதல்வராக்கப்பட்டார்.

மூன்றாவது முறை முதல்வராகும் வாய்ப்பு அவருக்கு பாஜக தந்த நெருக்கடியால் தரப்பட்டது. இவர் எப்போதும் எடுப்பார் கைபிள்ளை. தான் தற்போது இவரை பாஜக கையில் எடுத்துக் கொண்டது என சுதாரித்துக் கொண்டு தான் சசிகலா நடராஜன் அரசியல் அறிந்த எடப்பாடி கே.பழனிச்சாமியை முதலமைச்சராக்கி விட்டு  சிறை சென்றார்.

தான் உருவாகிய இடத்திற்கே துரோகம் செய்து, தன்னுடைய நலத்திற்கு மட்டுமே ஒ.பன்னீர் செல்வம் முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால், அப்போதே அதிமுகவில் உள்ள முக்கியத்துவம் இழந்து விட்டார்.

மைலாப்பூர் ஆடிட்டர் 

குருமூர்த்தி சொல்லைக் கேட்டு, முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா சமாதி முன்பு தர்மயுத்தம் என்ற பெயரில் போய் உட்கார்ந்த போதும், இவர் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்திற்கு நியாயம் கேட்ட போதும் பாஜக பின்புலத்தில் இருந்து மிகப்  பெரிய மீடியா கவரேஜ் தரப்பட்டு, மக்கள் ஆதரவு அலைகடலென திரண்டது. தன்னை உருவாக்கிய சசிகலா நடராஜன் மீதே புழுதி வாறித் தூற்றி அவதூறு செய்ய வைத்த எடுப்பார் கைப்பிள்ளை இவர் 

அப்போது சுதாரித்துக் கொண்டு இருந்தால் கூட, இவர் அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்து இருப்பார். 

ஆனால், ஒரு கட்சியில் தலைவராக இருப்பதற்கு அயராத உழைப்பைத் தர வேண்டும். சுற்றிச் சுழன்று  மாவட்டம் தோறும் பயணம் செய்ய வேண்டும். நிர்வாக ரீதியினான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும், எல்லாவற்றுக்கும் மேல் சம்பாதித்த பணத்தை கட்சி வளர்ச்சிக்கு கொஞ்சமேனும் செலவழிக்க வேண்டும்..!

இவை எதற்குமே எப்போதும் தயாரில்லாதவர் தான் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம். எந்த முயற்சியும் இல்லாமல் மூன்று முறை முதல்வரானது போல, பதவிக்கு ஆசைப்பட்டாரே அன்றி, அதற்காக தன்னை தகுதிப்படுத்திக் கொண்டு பாடுபட கடுகளவும் முன்வரவில்லை.  அதனால் தான் இவரை ஆதரித்து பின் சென்றவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் சுதாரித்து பின் வாங்கிவிட்டனர். இவர் இரட்டை இலை இல்லாமல் பலாப்பழம் சின்னம் வாங்கி தேர்தலில் நின்று தோற்ற போதே இவருக்கு அரசியல் அஸ்தமனம் ஆரம்ப நிலை இன்று போக்கிடம் இல்லாத சிலரே இவரைச்  சூழ்ந்து கொண்டுள்ளனர்.

சொந்த மாவட்டத்திலேயே சுத்தமாக செல்வாக்கு இல்லாதவர் இவர் ஆனால் இவர் வசிக்கும் பகுதியில் ஒரு வார்டு கவுன்சிலராகக் கூட இவரது ஆதரவாளர் யாரும் வர முடியாது என்பதல்ல, டெபாசிட் கூட பெற முடியாது.  அந்த அளவுக்கு தனது உச்சபட்ச சுயநலத்தால் சொந்த ஊரிலேயே அந்நியப்பட்டுக் கிடப்பவர்.

சேர்த்து வைத்துள்ள சொத்து கொஞ்சம் நஞ்சமல்ல. மிகுந்த சொகுசு வாழ்க்கைக்கு பழகிவிட்டார். இவர் ஒரு அரசியல் அனாதை என்பதால் தான் பாஜக இவரை பகடைக் காயாகப் பயன்படுத்தி தூர எறிந்துள்ளது. இவரை வைத்து தான் அதிமுகவுக்கு இன்று வரை இரட்டை இலை சின்னம் கிடைக்காமல், பாஜக கேம் விளையாடியது. 

ஆனால், தற்போது இவர் பாஜக எதிர்ப்பு அரசியல் செய்வதை யாரும் நம்பப் போவதில்லை. எப்போது வேண்டுமானாலும் நிலை மாறக் கூடியவர்.

இன்று இவர் அரசியல் அனாதையாகப் போனதற்கு அவர் மட்டுமே காரணம். தூர தூக்கி எறிந்துவிட்டு,  மறந்து போய்விட வேண்டிய மனிதரே இவர என அரசியல் ரீதியாக பலரும் பேசும் நிலையில் 

நமத்துப் போன பட்டாஸான இவரை காட்டி, ஏதோ அரசியல் சரவெடி வெடிக்க உள்ளது என ஊடக நபர்கள் மீடியாக்கள் மக்களை முட்டாளாக்குவதிலும் அதிலும் ஒரு அரசியல் சூழ்ச்சி உள்ளது. 

மக்களின் உண்மையான பிரச்சினைகளை பின் தள்ளி, இது போன்ற வெத்து வேட்டு நபர்களைப் பற்றிய பிம்மங்களை காலந்தோறும் கற்பித்து மக்களை மாயையிலேயே வைத்திருப்பது தான் அதிகார மையங்களின் அடியாளாக  பழக்கப்பட்ட  சில ஊடக அரசியலாகும்.

பாஜக உடைத்த அதிமுக என்று கண்ணாடியை அவர்கள் ஒட்ட முயற்சி செய்த நிலையில் உடைந்த கண்ணாடி ஒட்டவில்லை. என்பதே உண்மை.  





அரசின் அரசியல் களம் டிடிவி தினகரனின் அமமுகவில், ஓபசெ- மற்றும் சசிகலா இல்லை.

ஜெயா டிவி ஜெயா பிளஸ்சைப் பொறுத்தவரை அங்கே ஓப செவும் இல்லை; டிடிவி தினகரனும் இல்லை. முன்னாள் முதல்வர் 

செல்வி ஜெ. ஜெயலலிதா  மறைவிற்கு பின்னால் திருமதி சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர். 



ஊடகங்களுக்கான கடிதத் தொடர்பிலும், ஜெயா மற்றும் ஜெயா பிளஸ் தினசரி செய்திகளிலும் சசிகலாவே அதிமுகவின் பொதுச் செயலாளர்.

அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்று தினமும் அறிவிக்கும் சசிகலாவை எதிர்த்தோ மறுத்தோ யாரும் பேசாததால் அவரே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோடு டிடிவி தினகரன் இணக்கமாக இருக்கிறார். 

ஓ.பசெ மற்றும் சசிகலாவும் எடப்பாடி கே பழனிச்சாமியோடு இணக்கமாக இல்லை.

ஓ.ப செ-சசிகலா நடராஜன் இணக்கத்தில் வெளிப்படைத் தன்மைஇல்லை - ஆகவே  'சற்றுமுன்' அப்டேட் தெரிய வில்லை.

 ஓ ப செ டிடிவி தினகரன் ஒருவருக்கொருவர் எதிரிகள் இல்லை. இணக்கமாகத்தான் இருக்கிறார்களா என்பதும், வெளியில் தெரியாது.

அதிகாரப்பூர்வமான  புதிய நண்பர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்-தமிழ்நாடு.

ஓ ப செ வின். ஒரே எதிரி எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சரின் புதிய நண்பர்கள் பிரேமலதா விஜயகாந்த் ஓ.பன்னீர் செல்வம் 

எதிர்பார்த்ததை விட 2025- ன் மையம் சிறப்பாகவே, தேர்தல் கலை கட்டுகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...