முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகை ஸ்ரீ தேவி சொத்து அபகரிக்க போலி வாரிசு சான்றிதழ் போனி கபூர் வழக்கில் தாசில்தாருக்கு உத்தரவு

பிரபலமான திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர், 


மனைவியும்  காலஞ்சென்ற பிரபல மூத்த நடிகைமான சிவகாசி ஏ. ஸ்ரீ தேவி 1988 ஆம் ஆண்டு சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) வாங்கிய நிலத்தின் மீது சம்மந்தமே இல்லாமல் மூன்று நபர்கள் சட்டவிரோதமாக உரிமை கோருவதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் திங்கட்கிழமை ஆகஸ்ட் 25, 2025 மூன்று பேருக்கும் ஆதரவாக  மோசடியாக பெறப்பட்ட  சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழை ரத்து செய்ய திரைப்படத் தயாரிப்பாளர் சோனிக் கபூர் தாக்கல் செய்த மனு மீது நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு போலியாக  சான்றிதழ் வழங்கிய தாம்பரம்  வருவாய் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழை ரத்து செய்யக் கோரி, ஏப்ரல் மாதம் 22,  ஆம் தேதி 2025  அன்று தாம் அளித்த மனுவைத் தீர்த்து வைக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தாம்பரம் வருவாய் வட்டாட்சியர் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர்  சோனிக் கபூர் தாக்கல் செய்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்யும் போது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.வழக்கின் பின்னணியை  செய்தியாளர்களிடம் விளக்கிய  போனி கபூர் நீதிமன்றத்தில், அவரது மனைவி  ஸ்ரீ தேவி ஏப்ரல் மாதம் 19, ஆம் தேதி 1988 ஆம் ஆண்டு அன்று அந்த சொத்தை வாங்கியதாகவும், அதன் பின்னர், அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தற்போது பண்ணை வீடாகப் பயன்படுத்தப்படும் சொத்தை முழுமையாகக் கையகப்படுத்தி அனுபவித்து வருவதாகவும் கூறினார்.

இந்த நிலம் முதலில் எம்.சி. சம்பந்த முதலியார் என்ற நபருக்குச் சொந்தமானதென்றும், அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருந்ததாகவும் மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். குடும்ப உறுப்பினர்கள் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, 1960 ஆம் ஆண்டு அன்று சொத்தைப் பிரிப்பது தொடர்பாக ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் ஸ்ரீதேவி சொத்தை வாங்கி விற்பனைப் பத்திரத்தை முறையாகப் பதிவு செய்தார். இருப்பினும், திடீரென்று, மூன்று நபர்கள்,  முதலியாரின் மூன்று மகன்களில் ஒருவரின் இரண்டாவது மனைவி என்றும் இரண்டு குழந்தைகள் என்றும் கூறி, சொத்தில் தங்களுக்கும் பிரிக்கப்படாத பங்கு இருப்பதாக வாதிடத் தொடங்கினர். 2005 ஆம் ஆண்டு தாம்பரம் தாசில்தாரிடமிருந்து உரிமை கோருபவர்கள் சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழைப் பெற்றதாகக் கூறி, அசல் நில உரிமையாளரின் குடும்பத்தினர் தாம்பரத்தில் இல்லாமல் மைலாப்பூரில் வசிக்கும் போது, ​​அத்தகைய சான்றிதழை வழங்க வருவாய் அலுவலரின் அதிகார வரம்பைக் கேள்வி எழுப்பினார்.

மேலும், இரண்டாவது மனைவி பிப்ரவரி மாதம் 5, ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு அன்று திருமணம் செய்து கொண்டதாகக் கூறுவதை சுட்டிக்காட்டிய மனுதாரர், முதல் மனைவி ஜூன் மாதம் 24, ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு அன்று இறந்துவிட்டதால், அதை சட்டப்பூர்வத் திருமணமாகக் கருத முடியாது என்று கூறினார். எனவே, மூன்று நபர்களையும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் வகுப்பு-1 அல்லது வகுப்பு-2 சட்டப்பூர்வ வாரிசுகளாக வகைப்படுத்த முடியாது என்று அவர் கூறினார். சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழின் மோசடி அடிப்படையில் சொத்துக்கு உரிமை கோருவதற்காக, பல சிவில் வழக்குகளைத் தொடுத்து, வருவாய் அலுவலர்களை அணுகி, மூவரும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வருவதாக புகார் அளித்த போனி கபூர், அந்தச் சான்றிதழை விரைவில் ரத்து செய்யுமாறு அலுவலர்களை வலியுறுத்தினார்.        மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988 ஆம் ஆண்டில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள சொத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கினார். கடந்த, 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, மகன் மற்றும் மகள் என மூன்று பேர், மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது என்று கூறி வருகின்றனர். முதல் மனைவி உயிரோடு இருந்த போது, தன்னை திருமணம் செய்து கொண்டதாக, சந்திரசேகரின் இரண்டாவது மனைவி கூறியுள்ளார். இதனால், மூவரையும் சட்டப்பூர்வ வாரிசுகளாகக் கூற முடியாது. முதல் மனைவி உயிருடன் உள்ள போது இரண்டாம் மனைவி திருமணம்  செல்லாது எனவே,       சிவகாமி, நடராஜன், 

சந்திரா பானு, ஆகிய மூவரும் மோசடியாகப் பெற்ற வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், தாம்பரம் வருவாய் தாசில்தார் ஆகியோரிடம் அளித்த விண்ணப்பத்தை, பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். என கூறப்பட்டுள்ளது.இந்த மனு, WP/32169/2025  நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, போனி கபூரின் விண்ணப்பத்தின் மீது, நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தாம்பரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டு, மனுவை, நீதிபதி முடித்து வைத்தார் போலி ஆவணங்கள் மூலம் போனி கபூர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்துள்ளார்" - என சிவகாமி என்பவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் சிவகாமி என்பவர் அளித்துள்ள பேட்டியில், காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவி வாங்கிய நிலத்தை விற்க போனி கபூருக்கு தடை விதிக்க வேண்டும் என் தாத்தாவின் 5 வாரிசுகளில் ஒருவரான ராணியம்மாளின் வாரிசுகள், பிற வாரிசுகளுக்குத் தெரிபடுத்தாமல், சென்னை இ.சி.ஆரில் உள்ள 1.34 ஏக்கர் நிலத்தை 1988-ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவிக்கு விற்றுள்ளனர். இதில் முறையாக ஆவணங்கள் இல்லாததால் ஸ்ரீதேவியால் 35 ஆண்டுகளாக பட்டா மாற்ற முடியவில்லை.

ஸ்ரீதேவி காலமான பின் போலி ஆவணங்களை பயன்படுத்தி போனி கபூர் பட்டா மாற்றியுள்ளார் என அவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த சிவகாமி என்பவர், செய்தியாளர்களிடம் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...