முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டில் புதிய தற்காலிக டிஜிபி யாக வெங்கட்ராமனுக்கு வாய்ப்பு

 தமிழ்நாட்டில் காவல்துறையில் சட்​டம்​-ஒழுங்கு தலைமை இயக்குனர் சங்​கர் ஜிவால்


நாளை​ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.    மற்​றொரு  இயக்குனராக உள்ள, தமிழ்​நாடு காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தின் தலை​வ​ரான சைலேஷ் குமார் யாத​வும் நாளை​ பணி ஓய்வு பெறுகிறார்.


இரு​வருக்​கும் பணிநிறைவுப் பாராட்டு விழா மற்றும் பிரிவு உபச்​சார விழாவாக  சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. காவல்துறை உயர் பொறுப்பினர் மற்​றும் ஓய்​வு​ பெற்ற உயர் காவல்துறை அலுவலர்கள்     பங்​கேற்றுப் பாராட்டினர்.       இரு​வரும் காவலர்களின் அணிவகுப்பு மரி​யாதை நடை​பெற்​றதை ஏற்​றுக் கொண்​ட பின்னர் சங்​கர் ஜிவால்  நன்றி தெரிவிததுப் பேசினார்.     


நிகழ்ச்​சி​யில் காவல்துறை இயக்குனர்கள், பிரமோத்​கு​மார், சீமா அகர்​வால், சந்​தீப்​ராய் ரத்​தோர், அபய்​கு​மார் சிங், வன்னியப் பெரு​மாள், வெங்​கட​ராமன், சட்​டம் ஒழுங்கு கூடு​தல் காவல்துறை இயக்குநர் டேவிட்​சன் தேவாசீர்​வாதம், சென்னை மாநகரக் காவல் துறை ஆணை​யர் அருண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்​டனர். ஓய்வு பெறும் தலைமைக் காவல்துறை இயக்குநர்   சங்​கர் ஜிவால் உத்​தர​காண்ட் மாநிலம், அல்​மோரா மாவட்​டத்​தைச் சேர்ந்தவர், பொறி​யியல் படிப்பை முடித்​தவர் 1990 ஆம் ஆண்டு பட்டியலில் உள்ள ஐபிஎஸ் ஆவார்.


முதலில் மன்​னார்​குடி உதவிக் காவல் கண்காணிப்பாளர் சேலம், மற்றும் மதுரை மாவட்டக் கண்காணிப்பாளர், திருச்சிராப்பள்ளி மாநகரில் காவல் ஆணை​யர், மத்​திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்​குநர், உளவுப்​பிரிவு இயக்குனர், காவல்துறை த்தலைவர், சிறப்பு அதிரடிப்​படை கூடு​தல் இயக்குனர் என காவல்துறை​யில் பல விதமான பொறுப்புக்களை வகித்​தவர். அயல் பணி​யாக மத்​திய அரசிலும் 8 ஆண்​டு​கள் பணியாற்றினர் .சென்​னை​யில் 108-வது காவல் துறை ஆணை​ய​ராக இரண்டு ஆண்​டு​கள் பணி​யாற்றி சிறந்த பணிக்​காக இரு முறை குடியரசுத் தலை​வர் பதக்​கம் பெற்​றவர்.



இந்​த நிலை​யில் 2 ஆண்​டு​கள் இரண்டு முறை காவல்துறை இயக்குநர் பொறுப்பு வகித்த சங்​கர் ஜிவால் நாளை​யுடன் பணிஓய்வு பெறும் நிலையில் தீ மற்​றும் உயிர் மீட்பு பணி​களில் புதிய தொழில் நுட்ப நுணுக்​கங்​களை செயல்​படுத்​தும் நோக்​கமாக  தீ பரவல் தடுப்பு ஆணை​யம் ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்​துள்​ளது. அதற்கு தலை​வ​ராக சங்​கர் ஜிவாலை நியமித்து அரசு உத்​தரவு வந்துள்ளது.

அவர் வகித்த டிஜிபி பணிக்காலம் இந்த மாதம் 31-ஆம் தேதி​யுடன் நிறைவடை​யும் நிலை​யில் நிர்​வாகப் பிரிவு டிஜிபி​யான வெங்​கட​ராமன், நாளை முதல் சட்​டம்-ஒழுங்கு பொறுப்​பை​யும் கூடு​தலாகக் கவனிக்க உள்​ள​தாக​வும் அதற்​கான அறி​விப்​பு விரைவில் வெளி​யாக உள்​ள​தாக​வும்​ உயர் அலுவலர்கள்  தெரி​வித்​துள்​ளனர்​.                 


       HOPF சங்கர் ஜிவால் திடீரென வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு பணி முடித்து விட்டு போகவில்லை. அவர் ஆகஸ்ட் மாத இறுதியில் ஓய்வு பெற போவது முன்பே தெரியும். உச்ச நீதிமன்றம் பிரகாஷ் சிங் வழக்கில் சொன்ன வழிகாட்டுதல் படி புதிய HOPF தேர்வுக்கான அங்கிகரிக்கப்பட்டவர்களின் பட்டியலை 3 மாதம் முன்னரே UPSC க்கு அனுப்பி வைத்திருக்கவேண்டும். 

ஆனால் மாநில அரசு இதுவரை அனுப்பாமல் இப்போது தான் பட்டியலை அனுப்ப போகிற நிலையில். அது நிறைவடைய ஒரு மாத காலமாகும் அதுவரை பொறுப்பு HOPF ஐ நியமிக்க உள்ளதாகவும் 

1990 ஆம் ஆண்டு பட்டியலில் உள்ள சீமா அகர்வால், 

1992 ஆம் ஆண்டு பட்டியலில் உள்ள ரத்தோர், ராஜிவ்குமார், வன்னிய பெருமாள்,

 1994 ஆம் ஆண்டு பட்டியலில் உள்ள மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகியோர் உள்ளனர்.

இந்த 8 பேர் வரிசைப் பட்டியலைத்தான்  அனுப்ப வேண்டும் சங்கர் ஜிவால் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது புது HOPF நியமித்தே ஆகவேண்டும் என்கிற நடைமுறை செயல்பாட்டுக்கு வரவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்த போது ப்ராசஸ் ஆன் கோயிங் என சொல்லிய  அரசு.

ஆனால் வெங்கட்ராமன் தான் பொறுப்பு டிஜிபின்னு ஒரு மாதம் முன்னரே செய்தி ஊடகங்களில் தகவல் கிளப்பி விடப்பட்டு அதற்கு ஊடகங்கள் தயாராகிறார்கள். எங்கள் இதழ் தான் முதலில் செய்தி வெளியிடப் பட்டது எனச் சொல்கிறார்கள். அதில்தான் பெருமையே. ஆனால் ஊடகங்கள் யாரும் இந்த நடைமுறை மீறல் குறித்து வாய்த்திறக்கவே இல்லையே ஏன்? நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் முதலமைச்சருடன் டிஜிபி சங்கர் ஜிவால் சந்திப்பு நடந்தது இதையடுத்து புதிய பதவி வழங்கப்பட்டது. அடுத்த காவல்துறை இயக்குநர் யார் என்பது குறித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக யூகத்தின் அடிப்படையில் தற்போது டிஜிபிக்களில் சீனியர்களாக உள்ள சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ்குமார், அபய் குமார் சிங் உள்ளிட்டோர்களில் ஒருவர் டிஜிபியாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறி வந்தனர்.

வழக்கமாக டிஜிபியை நியமிக்க வேண்டும் என்றால் 3 மாதத்திற்கு முன்பு, தகுதியான 10 பேரின் பட்டியலை ஒன்றிய உள்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஐபிஎஸ் உயர் அலுவலர்களாக உள்ளவர்களின் பட்டியல் அனுப்பி வைக்கப்படும். பின்னர் உள்துறைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், தற்போதைய டிஜிபி ஆகியோர் கலந்து கொள்வார்கள். அந்தக் கூட்டத்தில் தகுதி வாய்ந்த 3 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு அரசு அந்த 3 பேரில் இருந்து ஒருவரை தேர்வு செய்யும்.

தற்போது டிஜிபி அலுவலகத்தில் இருந்து சீனியாரிட்டியில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார், வன்னியபெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் தேவ் வாங்கடே, சஞ்சய்குமார் மாத்தூர், டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகிய 10 பேரின் பட்டியல் தமிழ்நாடு உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்துறையில் விளக்கம் தேவைப்படுவதால் நிறுத்தி வைக்கப்பட்டது 

இதனால் சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை மத்திய அரசு தேர்வு செய்ய வாய்ப்புகள் இருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசு பட்டியல் மத்திய உள்துறைக்கு அனுப்பாததால், அவர்கள் தேர்வு செய்யப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், சீமா அகர்வால் நேர்மையானவர். ஆனால் சட்டம் ஒழுங்கு பதவியில் நீண்ட நாட்கள் இல்லாதவர். ஆனால் ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் சட்டம் ஒழுங்கை சரியாக கையாளாமல் சரிய விட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. இதனால், நிரந்தர டிஜிபிக்கள் நியமிக்கப்படாமல், தற்காலிக டிஜிபியாக ஒரு நேர்மையான, நிர்வாகத்தில் திறமை வாய்ந்த ஒருவரை தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய முடிவு செய்தது.

அதன்படி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி பதவிக்கு வருவது யார் என்பது குறித்து வெளியான அனைத்து யூகங்களையும் பொய்யாக்கும் வகையில், தற்போது தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு டிஜிபியாக பணியாற்றி வரும் வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பூர்வீகமானவர்வெங்கட்ராமன். 8.5.1968 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தார். பிஏ (பொருளாதாரம்), எம்ஏ (பொது நிர்வாகம்) முடித்துள்ளார். பின்னர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு கேடரில் 1994 ஆம் ஆண்டு ஐபிஎஸ் உயர் அலுவலராகத் தேர்வானார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழி சரளமாகப் பேச மற்றும் எழுதக்கூடியவர்.

வெங்கட்ராமன், காவல் துறையில் சிறந்த அனுபவத்தைக் கொண்டவர். சைபர் குற்றம், கண்காணிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்புக் கொள்கைகளில் உறுதியாக இருப்பவர் என அறியப்படுகிறது. நாளையே புதிதாக தற்காலிக டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின்றன. மேலும் முதல்வர் 30 ஆம் தேதி இன்று வெளிநாடு செல்கிறார். இதனால் அதற்கு முன்னதாக அதாவது 29 ஆம் தேதி புதிய டிஜிபி பதவி ஏற்பார் எனத் தெரிகிறது. தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வரும் 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில், புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு  இன்று வெளியாகும் எனத் தெரிகிறது. 


. அதேநேரம், தற்போது டிஜிபிக்களாக உள்ளவர்களில் அபய்குமார் சிங் வருகிற ஜனவரி மாதம் ஓய்வு பெறுகிறார்.31.08.2023 ஆம் ஆண்டிலேயே சிபிசிஐடி தலைவராக ஜி வெங்கட்ராமன் ஐபிஎஸ் பொறுப்பில் இருந்தார். சட்டவிரோத மெத்தனால் கடத்தலின் ஆபத்துகள் குறித்து அவர் எச்சரிக்கை விடுத்தார். கள்ளக்குறிச்சியில் நடந்த சட்டவிரோத மதுபானக் கடத்தல் சம்பவத்திற்குப் பிறகு, ஜூலை 2024 ல் வெங்கட்ராமன்


சிபிசிஐடியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.“ தமிழ்நாட்டில் டிஜிபி பொறுப்பேற்று பார்த்திருப்பீங்க.. பொறுப்பு டிஜிபி பொறுப்பேற்று பார்த்திருக்கீங்களா..? ” சீனியாரிட்டியில் 9-வதாக உள்ள ஒருவருக்கு எப்படி இந்த பதவி வழங்க முடியும்..? அவருக்கு முன்னாடி உள்ள 8 போலீஸ் அதிகாரிகளும் அந்த பதவி ஏற்பு விழாவுக்கு போகவில்லை.. இப்படி இருந்தால் காவல்துறை எப்படி விளங்கும்..? என பாஜக தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...