நடிகவேல் எம் ஆர். ராதாவின் 6 வது மனைவியும் நடிகை ராதிகா மற்றும் நிரோஜா தாயாருமான கீதா காலமானார்.
நடிகை ராதிகாவின் அம்மா கீதா ராதா இலங்கையைச் சேர்த்தவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (21.09.2025) இரவு 9.20 மணிக்கு காலமானார்.இறுதி சடங்குகள் சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் அபார்ட்மெண்டில் தொடங்கி பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு சரஸ்வதி, தனலட்சுமி, பிரேமாவதி, ஜெயம்மாள்,பேபிராதா, கீதா என 6 மனைவிகள் மொத்தம் 12 குழந்தைகள் அதில் நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு, நடிகர் ராதாரவி, நடிகை ராதிகா, மற்றும் நடிகை நிரோஷா ஆகியோர் பிரபலமாக அறியப்பட்டவர்கள் குழந்தைகள்:
எம்.ஆர்.ஆர்.வாசு, ராதா ரவி, ராதிகா, நிரோஷா, ராணி, ராஜூ, மோகன், தமிழரசு, ராசியா,ஜெயவள்ளி, ரதிகலா, உள்ளிட்ட பிள்ளைகள் உண்டு,
எம்.ஆர்.ராதாவின் குடும்பம் பெரிய கலை சார்ந்த குடும்பம்,பலரும் தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தவர்கள். எம். ஆர். ராதா 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று சென்னையில் பிறந்தார். மதராஸ் ராஜகோபாலன் நாயுடு ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம். ஆர். ராதா. இவர் ராஜகோபாலன் நாயுடு - ராஜம்மாளுக்கு 2ஆவது மகனாகப் பிறந்தாா். ராஜகோபாலன் ரஷ்யாவில் ராணுவவீரராகப் பணிபுரிந்த போது ரஷ்யாவின் எல்லையான பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் வீர மரணமடைந்தார். ராதாவிற்கு ஜே. ஆர். நாயுடு என்னும் ஜானகிராமன் என்ற அண்ணனும் பாப்பா எனும் தம்பியும் இருந்தனர்.
1967 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 12 ஆம் தேதி எம். ஜி. ஆரை அவரது இராமவரம் வீட்டில் எம். ஆர். இராதா சுட்டார். அந்தக் கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற இராதா 1967 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி முதல் 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி வரை சிறையிலிருந்தார். அப்பொழுது இராதாவின் மகளான ராணி (என்ற) ரஷ்யாவுக்கு திருமணம் நடந்தது. இராதாவால் கலந்துகொள்ள முடியவில்லை. கு. காமராஜரின் தூண்டுதலின் பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, உறவினர் என்பதால் ஈ.வெ.இராமசாமி தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.இராதாவிற்கு சரஸ்வதி, தனலட்சுமி, பிரேமாவதி, ஜெயமால், பேபி அம்மாள் ஆகிய மனைவிகளுக்கு பிறகு இலங்கைக்கு சென்று ஆறாவதாக கீதா என்பவரைத் திருமணம் செய்தார் இவர்களுக்குப் பிறந்தவர் தான் நடிகை ராதிகா மற்றும் நடிகை இவரது தற்போதய கணவர் நடிகர் சரத்குமார், நடிகை நிரோஜா இவருடைய கணவர் நடிகர் ராம்கி ஆவார்.
நடிகவேல் எம்.ஆர்.ராதா பேரனும் நடிகருமான வாசு விக்ரம் சென்னையில் 20 ஆண்டுக்கு முன்பிருந்தே நம்முடைய நண்பர் ஒரு கருத்தைக் கூறுவார். அது ஆச்சரியமல்ல. உண்மை
, "என் தாத்தாவுக்கு 8 மனைவிகள். எல்லாரும் 2 கட்டிக்கிட்டே திண்டாடுறாங்க. அதுவும் ஒரே வீட்ல வச்சிப் பார்த்துக்கிட்டாரு. 20 பசங்கள பெத்து ஒரே வீட்டுல வச்சி சமாளிச்சார் 100 பேருக்கு சர்கஸ் கூடாரம் போல தினமும் சமையல் நடக்கும். 6 கார், 2 வேன் இருந்தது. தாத்தா பிள்ளைகளுக்கு சொத்தை சரி சமமாகப் பிரித்துக் கொடுத்தார்.
திருச்சிராப்பள்ளியில் 43 வீடுகளை ஒரே இடத்தில் கட்டினார். அவற்றை எல்லாம் பராமரிக்க முடியாததால விற்றுவிட்டோம். சித்தப்பா ராதாரவி வீடு தான் எங்களுக்கு தலைமையிடம். தாத்தா இறந்த 5 வருஷத்துல அப்பாவும் இறந்துட்டாரு. தாத்தா பற்றி எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வந்த அப்புறம் தான் தெரிஞ்சிக்கிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.மறைந்த நடிகர் எம் ஆர் ராதா அவர்களின் ஆறாவது துணைவியார் கீதா இலங்கை பரதவர் (srilanka bharatha) சமூகத்தைச் சேர்ந்தவர். ராதிகாவின் சகோதரர் ராஜு. இவர் இலங்கையின் வெண்ணப்புவா(Wennappuwa,) பகுதியைச் சார்ந்தவர் .
நடிகை ஜோஸ்னா பெர்னாண்டோ வின் தந்தை, ஸ்டான்லி பெர்னாண்டோ, எம். ஆர். ராதாவின் மனைவியின் சகோதரர்( ராதிகாவின் தாய் மாமன் மகள்), எனவே ஜோஷ்னா ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோரின் உறவினர்.
ராதிகாவின் டெலி திரைப்படமான சிறகுகள் (1999) படத்தில் ஜோஷ்னா தனது நான்கு வயதில் அறிமுகமானார்.
கே.பாலசந்தரின் மரோ சரித்ரா (1978) மற்றும் வாலியின் வடமலை (1982) ஆகியவற்றில் தோன்றிய முன்னாள் நடிகை சரோஜா இவரது தாய்
இலங்கை பரதா சமூகமும் தமிழகத்தில் உள்ள பரதவர் சமூகமும் ஒரே இனக்குழு என்று 1947 ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை எண்ணிக்கை பதிவு உறுதி செய்கிறது! இலங்கை சிங்களத் திரைப்படத்தில் ஆரம்ப காலத்தை வண்ணமயமாக்கிய நடிகை தான் ரீட்டா டோரின் பெர்னாண்டோ எனும் கீதா,
1953 ஆம் ஆண்டு "புதும லெலி" எனும்
சிங்களத் திரைப்படத்தில் அறிமுகமான ரீட்டா டோரின் பெர்னாண்டோ எனும் கீதா "எகமத் எக ரடக" படத்தில் முக்கிய கதாநாயகி வேடத்தில் நடித்தார் மற்றும் "தஸ்கோன், சன்சாரே என்ற திரை படங்களில் நடித்தார்.
ரீட்டா டோரின் பெர்னாண்டோ தென்னிந்திய சினிமாவின் சிறந்த நடிகரான எம்.ஆர். ராதாவை மணந்தார். ரீட்டா டோரின் பெர்னாண்டோ ஒரு இலங்கைத் தமிழ் பெண்.
ரீட்டா டோரின் பெர்னாண்டோ எனும் கீதா
இலங்கை சினிமாவின் ஆரம்ப காலத்தை வண்ணமயமாக்கிய திரைப்பட நட்சத்திரம்





.jpg)

.jpg)







கருத்துகள்