மதம் மாறிய பின்னர் ஜாதிச்சலுகை பெற்ற பேருராட்சித் தலைவர் பதவி பறிப்பு செல்லும் உயர் நீதிமன்றம் அமர்வில் தீர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் சுசீந்திரம் அருகிலுள்ள
தேரூர் பேரூராட்சி மன்றம்
சுமார்.9.64 ச.கி.மீ. பரப்பளவும், 15 வார்டுகளையும், 35 தெருக்களையும் கொண்டது கன்னியாகுமரி சட்டமன்றபேரவைத் தொகுதி க்கும், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 2,148 வீடுகளும், 7,615 மக்கள்தொகையும் கொண்டது. இந்த பேரூராட்சிக்கு கடந்த முறை நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கைப்பற்றிய நிலையில் அதன் தலைவரான இரண்டாம் வார்டு (தனி) போட்டியிட்டு அமுதாரானி பிறப்பால் பட்டியல் ஜாதி சார்ந்த நபர் வெற்றி பெற்றார் மதம் மாறிய நிலையில் பட்டியல் ஜாதி என மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மதம் மாறிய பின்னர் பட்டியல் சார்ந்த ஜாதிச் சான்றிதழை ஏற்று பதவி ஏற்ற நிலையில் அது சட்ட ரீதியாக செல்லாது என்பதால்
தேரூர் பேரூராட்சி மன்றத் தலைவியை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
2022-ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி வார்டு எண் 2 -ல் (பட்டியல் ஜாதி தனி) அ.தி.மு.க. சார்பில் அமுதா ராணி போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் அவர், தான் ஒரு பட்டியல் சார்ந்த ஜாதிச் சான்றிதழ் வழங்கி பேரூராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏற்றார்.
2005-ஆம் ஆண்டில் கிறிஸ்தவராக மதம் மாறியுள்ளார் கிறிஸ்தவ மத முறைப்படி திருமணம் செய்தார். எனவே அவர் பட்டியல் சமுதாயத்தவருக் கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது. அமுதா ராணியை தேரூர் பேரூராட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட வேண்டும் என எட்டாவது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற அய்யப்பன் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந் தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, ஒரே நேரத்தில் இரு வேறு சலுகை களை அனுபவிப் பது அரசியலமைப்புச் சட்டத்தை ஏமாற்றும் செயல். எனவே தேரூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து அமுதா ராணியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் அமுதாராணி, மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநா தன், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது இதை சுயாதீன வழக்காக மாற்றி. SUO MOTU TR(MD)1501/2025 ஆக விசாரணை நடத்தி முடிவில் நீதிபதிகள்
அமுதா ராணி கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டு ஞானஸ்தானம் பெற்று உள்ளார். ஒருவர் தனது மதத்திலிருந்து வேறொரு மதத்துக்கு மாறுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது. அதே நேரம் அவர் சலுகைகளை அனுபவிப்பதற் காக பட்டியல் ஜாதியைச் சேர்ந்தவர் என சான்றிதழ் வழங்கியது ஏற்புடைய தல்ல. செல்லத்தக்கதல்ல
இந்த விவகாரத்தைப் பொறுத்த வரை தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்பட்டு இந்த மேல்முறையீட்டு மனு தள்ளு படி செய்யப்படுவதாக
நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதம் மாறிய பின்னர் பட்டியலினப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுப் பலனைப் பெற முடியாது இந்த நிலையில், கிறிஸ்தவரான அமுதாராணி, தான் ஹிந்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என கூறி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இது சட்டவிரோதமானது. எனவே, தேரூர் பேரூராட்சித் தலைவராக உள்ள அமுதாராணியின் பட்டியலின சாதிச் சான்றிதழை ரத்து செய்து, அவரைத் தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும். என அய்யப்பன் மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை தனி நீதிபதி விக்டோரியா கௌரி விசாரித்து, “இந்து பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ மதம் மாறி, கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதற்கு அனைத்து ஆவணங்களும் உள்ள நிலையில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி வேட்பு
மனுத் தாக்கல் செய்தபோதே, அவரது வேட்புமனுவை தேர்தல் அலுவலர் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஒருவர் ஒரே நேரத்தில் இரு சலுகைகளை அனுபவிக்கக் கூடாது. இது அரசியலமைப்புச் சட்டத்தை ஏமாற்றும் செயலாகும். எனவே, அமுதாராணியின் தலைவர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அமுதாராணி மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் மர்வில்
இந்த வழக்கின் உண்மையான பிரச்சினை அமுதாராணி கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொள்கிறாரா, அவர் ஞானஸ்நானம் பெற்றாரா என்பது தான். மனுதாரர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டது உறுதிப்படுத்தப்படுகிறது. ஒருவர் ஒரு மதத்திலிருந்து மற்ற மதத்துக்கு மாறுவது என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையாகும்.
ஆனால், ஞானஸ்தானத்துக்குப் பிறகு புதிய அடையாளத்தை மறைத்து, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அனுபவிக்கும் நோக்கத்துக்காக, பட்டியல் இன சமூக நிலையில் தொடரும் போது சிக்கல் ஏற்படுகிறது.
இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுதாரர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியுள்ளார் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்பட்டு, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவில் தெரிவித்துள்ளனர்.ஆனால் தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரம் பேர் அமுதாராணி போல போலி சான்றிதழ் பெற்று பணியில் இருக்கும் நிலையில் இந்த உத்தரவு அணைவருக்கும் பொருந்துமா என ற நிலை வந்தால் தான் இதுபோன்ற தவறுகள் தொடராது.மதம் மாறிய பின்னர் எந்தவொரு உண்மையான நம்பிக்கையும் இல்லாமல், பெரும்பாலும் இடஒதுக்கீட்டுப் பலன்களை மட்டுமே பெறுவதற்காக பொய் கூறி இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சமூக நெறிமுறைகளைத் தோற்கடிப்பதாகவும்,
அரசியலமைப்பை ஏமாற்றுவதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச கிறிஸ்துவப் பெண்மணி, தான் ஹிந்து மதத்தைத் தழுவியதாகக் கூறி, பட்டியல் ஜாதிச் சான்றிதழை வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பட்டியல் ஜாதி ஒதுக்கீட்டில் அரசு வேலை பெறுவதற்கான ஒரு மறைமுக நோக்கத்தால், ஹிந்து மதத்திற்கான அவரது கூற்று தூண்டப்பட்டதென்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. இருப்பினும், நீதிமன்றம் ஒரு கள ஆய்வு சரிபார்ப்பை நம்பியிருந்தது, அது மேல்முறையீட்டாளரின் பெற்றோரின் திருமணப் பதிவு 1872 ஆம் ஆண்டு இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின் கீழ் தெளிவாகவே வெளிப்படுத்தியது. அவர் கிறித்தவ ஞானஸ்நானம் பெற்று தொடர்ந்து தேவாலயத்திற்குச் சென்று வந்தார்.
ஹிந்து மதத்தைப் பின்பற்றுவதாக அவர் கூறுவது அதிகபட்சமாக "சாந்தமானது" என்று நீதிமன்றம் கூறியது. அவர் ஹிந்துவாக மாறியதாகக் கூறுவதை நிரூபிக்க, ஆர்ய சமாஜம் மூலம் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி மதமாற்றம் செய்வது உள்ளிட்ட, ஒரு நேர்மறையான செயல் கூட இல்லை. வாய்மொழி அல்லது ஆவண ஆதாரங்கள் அவளை ஆதரிக்கவில்லை.
"இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதன் படி, ஒவ்வொரு குடிமகனும் தனக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றவும், அதை அறிவிக்கவும் உரிமை உண்டு. ஒருவர் வேறு மதத்திற்கு மாறுகிறார், அதன் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் ஆன்மீக எண்ணங்களால் அவர்கள் உண்மையிலேயே ஈர்க்கப்பட்டால். இருப்பினும், மதமாற்றத்தின் நோக்கம் பெரும்பாலும் இடஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவதாக இருந்தால், ஆனால் மற்ற மதத்தின் மீது உண்மையான நம்பிக்கையுடன் இல்லாவிட்டால், அதை அனுமதிக்க முடியாது, ஏனெனில் அத்தகைய மறைமுக நோக்கத்தைக் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன்களை நீட்டிப்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சமூக நெறிமுறைகளை மட்டுமே தோற்கடிக்கும்," என்று நீதிபதி பங்கஜ் மித்தல் தலைமையிலான அமர்வு கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது நீதிபதி ஆர். மகாதேவன்.கடந்த காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட எந்தவொரு பட்டியல் ஜாதிச் சான்றிதழையும் ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோருவதற்காக மதமாற்றம் செய்வதும் சமூகத்தின் மீது செய்யப்படும் மோசடி தான் எனக் கூறியது.
கேரளா உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் குறிப்பிட்டு, நீதிபதி மகாதேவன், ஒரு நீதிமன்றத்தால் மத நம்பிக்கையின் நேர்மையை சோதிக்கவோ அல்லது அளவிடவோ முடியாது அல்லது ஒரு நபரின் நம்பிக்கையின் ஆழத்தை அளவிடவோ முடியாது அல்லது அது ஒரு அறிவார்ந்த நம்பிக்கையா அல்லது அறியாமை மற்றும் மேலோட்டமான கற்பனையா என்பதை அளவிட முடியாது என்று மேற்கோள் காட்டினார்.
"ஆனால், ஒரு நீதிமன்றம் தங்கள் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் ஆண்களின் உண்மையான நோக்கத்தைக் கண்டறிய முடியும், மேலும் ஒரு வழக்கின் சூழ்நிலையிலிருந்து ஒரு போலி மதமாற்றம் உண்மையில் மேலும் சில நோக்கங்களுக்கான வழிமுறையாக இருந்ததா என்பதைக் கண்டறிய முடியும்" என நீதிபதி மகாதேவன் தீர்ப்பில் எழுதினார்.2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் உற்பத்தி ஆன சீக்கிய , பௌத்தம், சமணம், வைகுந்தர் வழி, மெய் வழிச்சாலை வழி உள்ளிட்டவை அல்லாத பிற மதங்களுக்கு மாறிய வர்களுக்கு பட்டியல் ஜாதிகள் கொண்ட (SC) அந்தஸ்தை நீட்டிக்க முடியுமா என்பதை ஆராய, முன்னாள் இந்திய தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் டாக்டர். ரவீந்திர குமார் ஜெயின் மற்றும் யுஜிசி உறுப்பினர் பேராசிரியர். சுஷ்மா யாதவ் ஆகியோர் அடங்கிய இந்த ஆணையம், இரண்டு ஆண்டுகளுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் பணியை மேற்கொண்டது.
மத மாற்றத்திற்குப் பிறகு பட்டியல் ஜாதிகள் சந்திக்கும் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு ஆகியவற்றை ஆய்வு செய்வது ஆணையத்தின் பணிகளில் அடங்கும். இந்த மாற்றங்கள் அவர்களை SC பிரிவில் சேர்ப்பதை நியாயப்படுத்துகின்றனவா என்பதையும் இது ஆராயும். கூடுதலாக, மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தொடர்புடைய பிற பிரச்சினைகளையும் ஆணையம் ஆராயலாம். தற்போது, அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை, 1950, ஹிந்து, சீக்கிய மற்றும் பௌத்த சமயங்களுக்கு மட்டுமே SC அந்தஸ்தை வழங்குகிறது. ஆரம்பத்தில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட இந்த உத்தரவு, 1956 ஆம் ஆண்டில் சீக்கியர்களையும், 1990 ஆம் ஆண்டில் பௌத்தர்களையும் சேர்க்கத் திருத்தப்பட்டது.
பட்டியல் ஜாதி முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை எஸ்சி பிரிவில் சேர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 1996 ஆம் ஆண்டில், ஒரு அரசாங்க மசோதா வரைவு செய்யப்பட்டது, ஆனால் மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக ஒருபோதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. பட்டியல் பிரிவு கிறிஸ்தவர்கள் பட்டியல் சாதி (SC) பிரிவிலிருந்து விலக்கப்படுவது வரலாற்று மற்றும் சட்ட விளக்கங்களிலிருந்து உருவாகிறது. இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தின் (RGI) படி, பாரம்பரியமாக ஹிந்து மற்றும் சீக்கிய சமூகங்களுடன் தொடர்புடைய தீண்டாமை நடைமுறையால் சமூக குறைபாடுகளை எதிர்கொள்ளும் ஜாதிகளுக்கு SC அந்தஸ்து குறிப்பாக வழங்கப்படுகிறது. தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு SC அந்தஸ்தை விரிவுபடுத்துவது நாடு முழுவதும் SC மக்கள்தொகையை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று RGI எச்சரித்துள்ளது.
2001 ஆம் ஆண்டில், RGI 1978 ஆம் ஆண்டு ஒரு குறிப்பை மேற்கோள் காட்டியது, அதில் பட்டியல் பௌத்தர்களைப் போலவே இஸ்லாமியம் அல்லது கிறிஸ்தவத்திற்கு மாறிய பட்டியல் ஜாதிகளும் ஒற்றை, ஒருங்கிணைந்த ஜாதியை விட பல்வேறு ஜாதிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பன்முகத்தன்மை, அவர்களை "ஒற்றை இனக்குழு" என்று வகைப்படுத்துவதைத் தடுக்கிறது என்று RGI வாதிட்டது, இது அரசியலமைப்பின் பிரிவு 341 ன் பிரிவு (2) இன் கீழ் SC பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான ஒரு தேவையா எனவும்
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட போதிலும், இந்த சட்ட மற்றும் நிர்வாக நிலைப்பாடு, பட்டியல் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் எஸ்சி அந்தஸ்திலிருந்து விலக்கப்படுவதை நிலைநிறுத்தியுள்ளது.மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அதற்கான நடவடிக்கைகளை அணைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் துவங்க வேண்டும் இதில் பொது நீதி யாதெனில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு மனு தாக்கல் ஆனால் தீர்ப்பு இன்னும் சட்டரீதியாக அமையும்.

















கருத்துகள்