முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்களைக் கண்டறியும் குழுவின் உறுப்பினராக கோவிலுர் மடதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை

தமிழ்நாட்டில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்களைக் கண்டறியும் குழுவின் உறுப்பினராக கோவிலுர் மடலாயத்தின் ஸ்ரீலஸ்ரீ நாராயண தேசிக சுவாமிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது



ஆகம விதிகள் கொண்ட கோவில்களைக் கண்டறியும் குழுவின் உறுப்பினர் ஜெ.முருகவேலின் நியமனத்தையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஆகம விதி​களைப் பின்​பற்​றும் கோவில்​களில் பூஜைகள் செய்யும் அர்ச்​சகர்​களை நியமிக்​கும்​போது ஆகம விதி​களை கட்​டா​யம் பின்​பற்ற வேண்​டும் எனக்​ கோரி அகில இந்​திய சிவாச்​சா​ரி​யார்​கள் சேவா சங்​கம் உள்​ளிட்​டவை  சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்​ட வழக்​கு​களை ஏற்​கெனவே விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் தமிழ்நாட்டில் ஆகம விதி​களைக் கடைபிடிக்​கும் கோவில்​களை​யும், ஆகமமற்ற கோவில்​களை​யும் கண்​டறிய சென்னை உயர் நீதி​மன்​றம் நியமித்த குழு​வுக்கு மூன்று மாத காலம் அவகாசம் அளித்​தது. அத்​துடன் ஆகமம் அல்​லாத கோவில்​களில் அனைத்து ஜாதி​யினரை​யும் அர்ச்​சகர்​களாக நியமிக்க உத்​தர​விட்​டது.



இந்​த நிலை​யில் ஆகம விதி​களைப் பின்​பற்​றும் மற்​றும் பின்​பற்​றாத கோவில்​களைக் கண்​டறிய அமைக்​கப்​பட்ட குழு​வில் இடம்​பெற்ற ஜெ.முரு​கவேலின் நியமனத்தை ரத்து செய்​யக்​கோரி அகில இந்​திய சிவாச்​சா​ரி​யார்​கள் சேவா சங்​கம் சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட இடை​யீட்டு மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், சதீஷ் சந்​திர சர்மா ஆகியோர் அடங்​கிய அமர்வு விசாரணை முடிவில் பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், ‘‘இந்​தக்​குழு உறுப்​பின​ராக ஜெ. முரு​கவேலின் நியமனத்​துக்கு மனு​தா​ரர் மட்​டுமின்றி குழு​வின் தலை​வரும் ஆட்​சேபம் தெரி​வித்​துள்​ள​தால் அவரது நியமனத்தை நாங்​களும் நிராகரிக்​கிறோம்.  எனவே முரு​கவேலுக்​குப் பதிலாக அக்​குழு​வின் உறுப்​பின​ராக காரைக்​குடி கோவிலூர் மடால​யத்​தின் மடா​திபதி ஸ்ரீலஸ்ரீ நாராயணஞான தேசிக சுவாமிகளை நியமிக்க தமிழ்நாடு அரசுக்​கு பரிந்​துரை செய்கிறோம்’’ என உத்​தரவிட்டுள்ளனர்.               சைவமும் தமிழும் உயர்ந்து விளங்கிய  சிவநெறி வளர்த்த நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில்(சோழநாட்டில் இருந்து பாண்டியநாட்டில் புலம் பெயர்ந்த தமிழ் வழி மகுட வைசியர்) 1818-ஆம் ஆண்டில் வேதாந்தத்தை தமிழில் பயிற்றுவிக்க ஒரு வேதாந்த மடத்தை சீர்வளர்சீர் முக்தி ராமலிங்க ஞானதேசிக சுவாமிகள் பழைய மதுரை ஜில்லா அமராவதி தாலுகாவாக கோவிலூர் இருந்த போது உறுவான மடாலயம் அதன் பின்னர் இராமநாதபுரம் ஜில்லா எழுவன் கோட்டை தாலுகா அதன்பின் திருப்பத்தூர் தாலுகா இப்போது காரைக்குடி தாலுகா கோவிலூரில் உருவாக்கினார்.  ஞானமார்க்கத்தில் ஈடுபட மனப்பக்குவமே தகுதி எனவும், வேதாந்தத்தில் நிறைவு பெற  ஜாதி, மதம், குலம் சம்பிரதாயங்கள் தடையில்லை என்றும்,கூறப்பட்ட போதும் (நகரத்தார் வழி வந்த துரவறம் பெற்றவரே மடாதிபதி)  இருந்த போதும் பக்தியே முக்திக்கு வழி என்றும் உபதேசித்தார். இவர் மூலம் பல அன்பர்கள் வேதாந்தம் கற்றுத் தேர்ந்தனர். இவர் அனைவராலும் ஆண்டவர் என்று அன்புடன் அழைக்கப்பெற்றார். வேதாந்த வடமொழி நூல்களை எல்லோரும் எளிதாகப் படித்துப் பக்குவம் பெறவேண்டும்  என விரும்பினார், எனவே அவரே வடமொழி நூல்களை யெல்லாம் தமிழில் மொழி மாற்றம் செய்து எளிய தமிழில் பாடம் சொல்லும் முறையை ஏற்படுத்தினார்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இது திருவுடையார்பட்டி அல்வது "கழனிவாசல்" என்று அழைக்கப்பட்டது. இங்கே பாண்டிய மன்னர் திருப்பணி செய்து காலம் கடந்து பாழடைந்த நிலையில் இருந்த திருநெல்லை நாயகி உடனாய கொற்றவாளீசுவரர் திருக்கோயிலை1818- ஆம் ஆண்டில் கோவிலூர் ஆண்டவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ முக்தி ராமலிங்க ஞானதேசிக சுவாமிகள் சீர்திருத்தி, புணரமைத்து வேதாந்த மடாலயத்தையும் நிறுவி தமிழில் வேதாந்த நூல்களையும் ஞான வாசிட்டம் முதலியவற்றையும் கற்பிக்கத் தொடங்கினார். கோவிலை மையமாக வைத்து ஊர் உருவானதால் அது முதல் இது கோவிலூர் என அழைக்கப்படுகிறது]கோவிலூர் மடாலயம் 

வேதாந்தத்தை தமிழில் கற்பிப்பதன் மூலம், ஞான மார்க்கத்தில் உள்ள கோவில் அமைந்துள்ள பகுதியில் கல்வி நிலையங்களும் இயங்கி வருகின்றது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...