ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம். 6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி அவரது வீட்டருகே வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை செம்பியம் காவல் நிலையத்தில் நியாயமாக விசாரிக்கவில்லை எனக் கூறி, விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலப் பொது செயலாளரும், கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதில், காவல்துறை நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியே காவல்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், இது அரசியல் கொலை இல்லை என்றும் இந்த வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை அவசர கதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியிடம் மேற்கொண்ட சாட்சி விசாரணையின் அடிப்படையில், சந்தேகம் உள்ள காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் தவறிவிட்டதாகவும் வாதிட்டார்.
பின்னர், கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை என காவல்துறை தரப்புக்கு கடும் அதிருப்தியை தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் செய்து நீதிபதி உத்தரவை பிறப்பித்ததில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுகின்றேன். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை சி.பி.ஐ. வசம் உடனே ஒப்படைக்க வேண்டும். அது கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து 6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார். 6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி அவரது வீட்டருகே வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை செம்பியம் காவல் நிலையத்தில் நியாயமாக விசாரிக்கவில்லை எனக் கூறி, விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலப் பொது செயலாளரும், கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதில், காவல்துறை நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியே காவல்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், இது அரசியல் கொலை இல்லை என்றும் இந்த வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை அவசர கதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியிடம் மேற்கொண்ட சாட்சி விசாரணையின் அடிப்படையில், சந்தேகம் உள்ள காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் தவறிவிட்டதாகவும் வாதிட்டார்.
பின்னர், கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை என காவல்துறை தரப்புக்கு கடும் அதிருப்தியை தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் செய்து நீதிபதி உத்தரவை பிறப்பித்ததில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுகின்றேன். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை சி.பி.ஐ. வசம் உடனே ஒப்படைக்க வேண்டும். அது கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து 6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரே நேரடியாக களத்தில் இறங்கிறார் போல. ஏற்கனவே அவர் மீது 72 வழக்குகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில்.
கொல்லப்பட்டவர் கொலை குற்றவாளிகள் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால்மொத்தமாக
வழக்கை இழுத்து மூடப் பார்த்துள்ளார்கள் உயர்நீதிமன்றம் சிபிஐக்கு வழக்கை மாற்றி உள்ளது இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதால், பெருந்தகையை நாளை நமதே காப்பாற்ற பெருமகனார் எடுத்த முயற்சி அம்பலமாகியிருக்கிது
என்கிறார் அதிமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ம.தனபால்

கருத்துகள்