முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார்

 "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்....,


மற்றும் "ஏடு தந்தானடி தில்லையிலே...' "அம்பிகையே ஈஸ்வரியே எனை ஆளவந்த .....என பக்தி மனம் கமழும் அற்புத பாடல்களை தந்த பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன், இன்று காலமானார் சென்னையில் முதலில் அவர் வசித்து வந்த எல்டாம்ஸ் சாலை இல்லத்தில் நாம் பலமுறை சந்தித்த நம் பகுதி பாடலாசிரியர் காலமானார். அவருக்கு வயது 90.

சிவகங்கை மாவட்டம், ஆரூர் வட்டகை நாட்டில் மாசாத்தியார் வாழ்ந்த ஒக்கூர் அருகில் கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த இவரின் பெயர் முருகவேல் காந்தி. சேரன் செங்குட்டுவன் என்ற நாடகத்தைப் பார்த்து தனது பெயரை செங்குட்டுவன் என மாற்றிக் கொண்டார். ஊர் பெயரையும் முன்னால் இணைத்து... பூவை செங்குட்டுவன் என்ற பெயர் கொண்டார். 1967 ஆம் ஆண்டு முதல்  பாடல்கள் எழுதி வந்தார். அதில் பெரும்பாலானவை பக்தி பாடல்கள். ஆயிரக்கணக்கான திரைப்படப் பாடல்கள், 4000க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 2 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.சென்னை, பெரம்பூர், ரமணா நகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு பூவை தயா, ரவிச்சந்திரன் என்ற இரு மகன்களும், கலை செல்வி, விஜய லக்ஷிமி என்ற இரு மகள்களும் உள்ளனர். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல்

தெரிவித்து வருகின்றனர். அவர் எழுதிய பாடல்கள் வரிசையில் தாயிற் சிறந்த கோயிலுமில்லை (அகத்தியர்)        ஏடு தந்தானடி தில்லையிலே (ராஜராஜ சோழன்) இறைவன் படைத்த உலகை (வா ராஜா வா) நான் உங்கள் வீட்டுப் பிள்ளை (புதிய பூமி ) ராதையின் நெஞ்சமே (கனிமுத்துப்பாப்பா) - அனைத்துப் பாடல்கள்காலம் நமக்கு தோழன் (பெத்த மனம் பித்து)காலம் எனக்கொரு (பௌர்ணமி), வானம் நமது தந்தை (தாகம்)திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (கந்தன் கருணை)ஆடுகின்றானடி தில்லையிலே (கந்தன் கருணை)திருப்புகழைப் பாட பாட (கௌரி கல்யாணம்)வணங்கிடும் கைகளில் (கற்பூரம்)வணக்கம் சிங்கார (காதல் வாகனம்)திருநெல்வேலி சீமையிலே (திருநெல்வேலி)அவர் பெற்ற விருதுகள்கலைமாமணி விருதுகண்ணதாசன் விருது 2010- கவிஞர்கள் திருநாள் விருது2021- மகாகவி பாரதியார் விருது பெற்ற முக்குலத்தில் பிறந்த பக்குவமும் நிறைந்த எக்குலமும் போற்றும் கவிஞர் பூவை செங்குட்டுவன் பழைய இராமநாதபுரம் ஜில்லா சிவகங்கை தாலுகா கீழ்ப்பூங்குடியில் 

 இராமையாஅம்பலம் - லட்சுமி அம்மாள்  தம்ப திக்கு மகனாகப் பிறந்தவர் முருகவேல் காந்தி.

கீழப்பூங்குடி திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஆரம்பக் கல்வியையும், அதன்பின் ஓராண்டுகள் ரங்கூனில் உள்ள வெள்ளைச்சாமி பள்ளியிலும், நமது பெறிய தாத்தா மேட்டுப்பட்டி அ.நடராஜன் நண்பராக விளங்கினார் 

அதன்பின் சிவகங்கை மன்னர் மேனிலைப் பள்ளியிலும் முருகவேல் காந்தி பயின்றார்.

சிவகங்கை மன்னர் மேனிலைப் பள்ளிக்கு மிகச் சிறந்த வரலாறு உண்டு. 

பேராசிரியர் நா.தர்மராஜன், கவிஞர் முத்துலிங்கம் போன்ற பிற்காலத்தில் பிரபலமடைந்த பலரும் சிவகங்கை மன்னர் மேனிலைப் பள்ளியில் பயின்றவர்கள்தான்.

முருகவேல் காந்தி தமிழ்ப் பற்றினால்,

தனக்கு ஊரின் பெயர் இணைத்து 'பூவை செங்குட்டுவன்' என்ற புனைபெயரைச் சூடிக் கொண்டார்.

திரையுலகில் சாதிப்பதற்காக சென்னைக்கு வந்த கவிஞர் பூவை செங்குட்டுவன், ஆரம்ப காலங்களில் நாடகங்களை எழுதினார். 

இவருடைய நாடகங்களுக்கு அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் மு. கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இயக்குனர் ஏ.பி.நாகராஜன், கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் தலமையேற்று வாழ்த்தினர்.

"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை - இது

             ஊரறிந்த உண்மை

நான் செல்லுகின்ற பாதை

            பேரறிஞர் காட்டும் பாதை"

                                     - படம் : புதிய பூமி

"தாயிற் சிறந்த கோவிலுமில்லை

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

ஆயிரம் உறவில் பெருமைகளில்லை

அன்னை தந்தையே அன்பின்எல்லை"                            - படம் : அகத்தியர்

"இறைவன் படைத்த உலகை எல்லாம்

            மனிதன் ஆளுகின்றான்

மனிதன் வடித்த சிலையில் எல்லாம்

            இறைவன் வாழுகின்றான்"

                               - படம் : வா.ராஜா வா

"திருப்பரங்குன்றத்தில் நீசிரித்தால்                                - முருகா

திருத்தணிமலைமீது எதிரொலிக்கும்

திருச்செந்தூரிலே வேலாடும் - உன்

திருப்புகழ் பாடியே கடலாடும்"

                          - படம் : கந்தன் கருணை

"திருப்புகழைப் பாடப்பாட     

               வாய்மணக்கும்

எதிர்ப்புகளை முருகாஉன்    

                வேல்தடுக்கும்"

                        - படம் : கௌரி கல்யாணம்

"வணங்கிடும் கைகளின்

                               வடிவத்தைப் பார்த்தால்

வேல்போல் இருக்குதடி!"

    - படம் : கற்பூரம்

ஏடு தந்தானடி தில்லையிலே - அதைப்

பாட வந்தேன்அதன் எல்லையிலே"

                      - படம் : இராஜராஜ சோழன்

போன்ற ஆயிரக்கணக்கான அற்புதப்

பாடல்களைத் திரைப் படங்களுக்கும்

இசைத் தட்டுகளுக்கும் எழுதிக் குவித் தவர் கவிஞர் பூவை செங்குட்டுவன்.

தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' விருது,

'மகாகவி பாரதியார் விருது' ஆகிய விருதுகள் கவிஞர் பூவை செங்குட்டுவன் பெற்ற விருதுகளில் குறிப்பிடத் தக்க விருதுகளாகும்.

இன்று 12. ஆம் தேதி பிப்ரவரியில் ஆண்டு தோறும் பிறந்தநாள் கவிஞர் பூவை செங்குட்டவன் அவர்கள் இன்று காலமானாலும் பல தெய்வீகப் பாடல்கள் மூலம் காலத்தால் வாழ்வார் அவரை நாம் மாலைப் செய்தி அலுவலகத்தில் சந்தித்த இறுதி அனுபவம் மூலம் இப்பூவுலகில் இருந்து காலமான இப் பூவை கவிஞருக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் அஞ்சலி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...