ஜப்பான் – இந்தியா இடையே கடற்படை பயிற்சி 2025
ஜப்பான் – இந்தியா இடையே கடற்படை பயிற்சி 2025-ல் இந்திய கடற்படைக் கப்பல் சஹ்யாத்ரி பங்கேற்றது. இந்தப் பயிற்சி 2025 அக்டோபர் 16 முதல் 18 வரை நடைபெற்றது. துறைமுக கட்டத்தின் போது, இந்தியக் கடற்படை ஜப்பானில் உள்ள யோகோசுகா துறைமுகத்திற்கு சென்றது.
யோகோசுகா துறைமுகத்திற்கு செல்வதற்கு முன் ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, ஜப்பானின் கடற்பகுதி தற்காப்புப்படைக் கப்பல்களான அசாஹி, ஊமி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் ஜின்ரியூ ஆகியவை கடற்படை பயிற்சியில் ஈடுபட்டன.
துறைமுகப் பயணத்தின் போது, ஐஎன்எஸ் சஹ்யாத்ரி குழுவினரும் ஜப்பானின் கடல்பகுதி தற்காப்புப் படை பிரிவினரும், பல்வேறு கலாச்சார பரிவர்த்தனை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர். நட்பையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு கப்பல்களுக்கு இடையே பயணம் செய்வது, சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்வது, கூட்டாக யோகா பயிற்சி செய்வது ஆகியவையும் இடம் பெறவுள்ளன.
O5CT.jpeg)
FK7Y.jpeg)
5QY5.jpeg)
கருத்துகள்