தமிழ்நாடு ஊழல் லஞ்ச மருந்துத் தரக் கட்டுபாட்டுத் துறையின் தவறால் உயிரிழந்த 24 குழந்தைகள் அமலாக்கத்துறையின் சோதனை
சென்னையில் கோடம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட ஏழு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள குழந்தை விஷ மருந்து தயாரித்து விற்ற ரங்கநாதனின் வீட்டில் சோதனை நடைபெற்றது. கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரித்த ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில் நடந்த சோதனை 24 குழந்தைகள் பலியான கொடூரமான குற்றம் விபரம் பின் வறுமாறு, நாட்டின் பல மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது அதோடு தமிழ்நாட்டிலும் தடை விதித்தனர் .
அண்ணா நகர், காஞ்சிபுரத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலை தொடர்பான விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரித்த ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.
கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் வீடு மற்றும் அண்ணா நகர், காஞ்சிபுரத்திலும் அமலாக்கத்துறை அலுவர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீடு, தமிழ்நாடு மருந்துத் தரக்கட்டுப்பாட்டு நிர்வாக இயக்குநர் தீபா மற்றும் சில உயர் அலுவலர் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. மத்தியப் பிரதேசத்தில் மருந்து உட்கொண்ட குழந்தைகள் மரணமடைய ஆரம்பித்ததையடுத்து, இது தொடர்பாக தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட பிறகு நடவடிக்கையில் இறங்கிய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி மாலையில் அந்த மருந்து நிறுவனத்தைச் சோதனையிட்ட போது மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட பேட்சைச் சேர்ந்த மருந்துகள் (Batch No. SR-13 2025 மே மாதம் தயாரிக்கப்பட்டவை) அணைத்தும் கைப்பற்றப்பட்டன.
அதற்குப் பிறகு அங்கிருந்த கோல்ட்ரிஃப் மருந்து, ரெஸ்போலைட் (Respolite) மருந்துகளின் மூன்று வகைகள், ஹெப்சான்டின் மருந்து ஆகியவை ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. மீதமுள்ள மருந்துகள் முடக்கிவைக்கப்பட்டன.
இந்த மருந்துகளை விநியோகிக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டாம் என மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, இந்த மருந்துகள் ஒடிசா, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது. இந்தச் சோதனைகளின் போது ஸ்ரீ சன் நிறுவனம் மருந்து உற்பத்திக்கான நூற்றுக்கணக்கான விதிகளை மீறியிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை 41 பக்க அறிக்கை ஒன்றை அளித்துள்ளதில் சோதனையின்போது கண்டறியப்பட்ட 364 விதி மீறல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அதில் 39 விதி மீறல்கள் மிகத் தீவிரமானவை. 325 விதிமீறல்கள் பெரிய அளவிலானவை.
முதலாவதாக, ''இருமல் மருந்தைத் தயாரிப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த ப்ரோப்பலீன் க்ளைக்கால், மருந்து உற்பத்திக்கான தரத்தில் இல்லை''
அடுத்ததாக, ''அந்த வேதிப் பொருள் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு வந்த பிறகு அது மருந்துத் தரத்தில் இருக்கிறதா என்பது சோதனைகள் செய்யப்படவுமில்லை.
இந்த மருந்து நிறுவனத்தில் சரியான தரத்திலான பணியாளர்கள் இல்லை. பயன்படுத்தப்படும் தண்ணீர், உற்பத்திக் கருவிகள் போன்றவை அங்கீகரிக்கத்தக்க தரத்திலில்லை. தயாரிக்கப்பட்ட பொருள்கள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன." எனக் குறிப்பிடப்படுள்ளது.
மேலும், "மருந்து உற்பத்தியே சுகாதாரமாக நடக்கவில்லை. பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது போன்ற செயல்பாடுகளும் இல்லை. மருந்துகளைக் கண்காணிக்கும் நடைமுறைகள் இல்லை. தரவுகள் சேகரித்து வைக்கப்படவில்லை. தரத்தை உறுதி செய்யும் பிரிவே இல்லை. வெளியில் இருந்து தான் தண்ணீர் எடுத்துவரப்படுகிறது. அவை சுத்திகரிக்கப்படுவதுமில்லை. கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியில் விடப்பட்டது. மருந்து உற்பத்திக்கான தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது" என விதிமீறல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட மருந்துகள் வேதியியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டதன்படி, இருமல் மருந்துகளில் பயன்படுத்தப்பட்ட ப்ரோப்பலீன் க்ளைகால் (Propylene Glycol) என்ற வேதிப் பொருள் மருந்துப் பொருட்களுக்கான தரத்தில் இல்லை என்பதும் அதில் சிறுநீரகங்களைப் பாதிக்கக்கூடிய நச்சுப் பொருளான டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டதாக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவிக்கிறது.
'மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட மருந்துத் தொகுப்பில், டைஎத்திலீன் க்ளைக்கால் 48.6 சதவீதம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருந்துத் தயாரிப்பை நிறுத்த உத்தரவிடப்பட்டது.
அந்த மருந்து நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது. அக்டோபர் 12- ஆம் தேதிக்குள் அதாவது நேற்று வரை இந்த நோட்டீஸிற்கு பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சிகளும் துவங்கப்பட்டுள்ளதாக மருந்துக்கட்டுப்பாட்டுத் துறை தெரிவிக்கிறது.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தனிப்படைக் காவல்துறையினர் 11 பேர் சென்னையில் முகாமிட்டிருந்தனர்.
அவர்கள் சென்னை நகரக் காவல்துறையினரின் உதவியுடன் ஸ்ரீசன் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை வியாழக்கிழமையன்று காலையில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 73 வயதாகும் ரங்கநாதன் மருந்து உற்பத்தித் துறை வட்டாரங்களில் நன்றாக அறியப்பட்டவர். நீண்ட காலமாக நீர்ம மருந்துகளை நேர்மை நியாயமின்றி தயாரித்துவந்தவர். மத்தியப் பிரதேசத்திற்கும் மத்திய அரசுக்கும் இது தொடர்பாக தகவல் அனுப்பப்பட்டது" என்று தெரிவித்தார்.
மேலும், ''எந்த மருந்தாக இருந்தாலும் அந்தந்த மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆய்வு செய்ய வேண்டும். நாங்கள் ஆய்வு செய்து கலப்படம் இருப்பதாகச் சொன்னோம். அரசியல் நெருக்கடி அதிகரித்தவுடன் இப்படி அறிக்கை விடுகிறார்கள். அதைப் பற்றி அதிகமாக நாங்கள் பேசப்போவதில்லை. நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்கிற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சீனியர் மருந்து ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக இரண்டு மூன்று நாட்களில் முடிவெடுக்கப்படும்" என்றார் இதில் நிறுவனத்தின் உரிமையாளர் தவிர, அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள், ப்ரோப்பலீன் க்ளைக்காலை சப்ளை செய்த நிறுவனம் ஆகியவையும் பொறுப்பேற்க வேண்டுமென்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ப்ரோபலீன் க்ளைக்கால் என்பது பெட்ரோலியத்தைச் சுத்திகரிக்கும்போது கிடைக்கும் ஒரு வேதிப்பொருளாகும். இதில், 0.1 சதவீதத்திற்கு மேல் டைஎத்திலீன் க்ளைக்கால் இருக்கக்கூடாது. கோல்ட்ரீஃப் மருந்தில் 48.6 சதவீதம் அளவுக்கு டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க
"ஒரு முறை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் மருந்தினால் வேறொரு நாட்டில் மரணங்கள் நிகழ்ந்தன. அதையடுத்து மத்திய அரசு ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தது. அதாவது, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் அனைத்தும் மத்திய அரசின் சோதனைச் சாலையில் பரிசோதிக்கப்பட்ட பிறகே ஏற்றுமதிக்கு அனுப்பப்படும். அதே போல, தமிழ்நாடு அரசும் ஒரு விதியை உருவாக்கலாம்" என்கிறார்கள் .
ஆனால், குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய மருந்தை இதுபோன்ற ஒரு தொழிற்சாலையில் தயாரிக்க முடியுமா?
"மிகப் பெரிய மருந்து நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தான் பிரமாண்டமானதாக இருக்கும். மற்றவை இதுபோல சிறிய இடங்களில்தான் இயங்கி வரும். குறிப்பாக Syrup போன்றவை இது போன்ற சிறிய தொழிற்சாலைகளில்தான் தயாராகும். ஆனால், அந்தத் தொழிற்சாலைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும்" என்கிறார்கள் பிரபல மருத்துவ நிபுணர்கள்.
இந்த நிலையில் மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உள்ள இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலை அளிக்க வேண்டுமெனக் கோரியிருக்கிறது.
இந்த நிறுவனங்களில் இணைந்து சோதனைகளை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது. கோல்ட்ரிஃப் மருந்து விவகாரத்திற்குப் பிறகு நடந்த சோதனைகளில் ரெஸ்பிஃப்ரஷ், ரீலைப் ஆகிய மருந்துகளிலும் டைஎத்திலீன் க்ளைக்கால் நச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ஸ்ரீ சன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அமலாக்கத்துறை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்துகிறது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உரிமையாளர் ரங்கநாதனின் வீட்டில் சோதனை நடைபெற்றது.
முறையற்ற தர சோதனைகள் செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் தீபா ஜோசப்பின் வீட்டிலும், அண்ணா நகரில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
கார்த்திகேயன், ரூ.25,000 லஞ்சம் பெற்றதாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனையை எதிர்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


















கருத்துகள்