93-வது இந்திய விமானப்படை தினம் இன்று உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, 93-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பார்வையிட்டார். புதுடெல்லி: 93-வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் வான் எல்லைப் பகுதியை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிற இந்திய விமானப்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த நாளை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, வான்வெளியை பாதுகாத்தல் மற்றும் பேரிடர் காலங்களில் உதவுகிற வான்வெளி வீரர்களுக்கு வாழ்த்துகள் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
VQCJ.jpeg)
9KHV.jpeg)


RQ1I.jpeg)

கருத்துகள்