பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நடித்த கந்தன் மலை.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிற்காலத்தில் அமைந்த சிக்கந்தர் என்பவரை அடக்கம் செய்த தர்காவை அகற்ற வேண்டும் என ஹிந்து முன்னணி சார்ந்த அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலையல்ல என எச். ராஜா கூறிய நிலையில்
திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து கந்தன் மலை எனும் திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனும் சுவரொட்டியில் எச். ராஜா மீசையுடன் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. மேலும் படத்தின் போஸ்டரில் அவருக்கு 'தர்மப்போராளி' எனும் அடைமொழி வழங்கப்பட்டுள்ளது.
கந்தன் மலை திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை
https://x.com/HRajaBJP/status/1974330379403472960?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1974330379403472960%7Ctwgr%5E20681a9b2205e3e84675d5648ab5520d1f310fd7%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-6005505522567826582.ampproject.net%2F2509031727000%2Fframe.html மூலம் காணலாம் கந்தன்மலை' படத்தை வீர முருகன் என்பவர் இயக்குகிறார். சிவ பிரபாகரன் - சந்திரசேகர் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தின் பர்ஸ்ட் லுக் சுவரொட்டி நேற்று வெளியிடப்பட்டது. எச்.ராஜா பிண்ணனியில் கோவிலின் நுழைவு வாயிலில் இருக்கும் கதவும் தெரிகிறது. அதன் வழியாக எச்.ராஜா கூட்டமாக கோவிலுக்குள் நுழைவது போன்ற காட்சி பர்ஸ்ட் லுக் சுவரொட்டியில் இடம் பெற்றுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் சுவரொட்டி வெளியான பின் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. இரண்டு சுவரொட்டிகள் வெளியாகின. மற்றொரு சுவரொட்டியில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார் பர்ஸ்ட் லுக் சுவரொட்டியை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டார். கிடுகு திரைப்பட இயக்குனர் வீரமுருகன் இயக்கத்தில் நான் நடித்து வெளிவர இருக்கும் கந்தன் மலை திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் MLA திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், தெலங்கானா முன்னாள் ஆளுநர் டாக்டர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் , தமிழக முன்னாள் அமைச்சர் .தளவாய் சுந்தரம், அண்ணாச்சி .M.R. காந்தி MLA, மாநில பொதுச் செயலாளர்கள் பேராசிரியர் ராம.சீனிவாசன், திரு.பொன் V.பாலகணபதி, மாநில துணைத் தலைவர் .கோபால்சாமி Ex. MLA, தேசிய பொதுக்குழு உறுப்பினர் .நீலமுரளி யாதவ் மற்றும் மாநில, மாவட்ட, நிர்வாகிகள், பாஜக சொந்தங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்” என்று குறிப்பிட்டு அவர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.



கருத்துகள்