டாகடர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பண்டிட் தீனதயாள் உபத்யாய் இருக்கை சார்பில் தேசியக் கருத்தரங்கில் ஆளுநர்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் பண்டிட் தீனதயாள் உபத்யாய் இருக்கை சார்பில், தேசிய அளவிலான, கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடக்கிறது. அதில் வளர்ச்சியடைந்த பாரதம் 2047, ஒருங்கிணைத்த மனித நேயம் வழியாக சிறந்த நிர்வாகத்தை வழங்குவது எப்படி என்பதற்கான கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். நிகழ்ச்சியில் துணை வேந்தர் ரவி வரவேற்கிறார்.தேசிய பண்பாட்டு மைய அகில இந்திய தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே, திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிறுவன துணைவேந்தர் பஞ்சநாதம் பேசினர்.
பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அ.செந்தில் ராஜன், பேராசிரியர் தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி மலர்கொத்துடன் வரவேற்றார்.உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், தேவகோட்டை உதவி ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் பேரா. இரவி ஆகியோர் உடனிருந்தனர்ஆளுநர் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில், நடந்த "வளர்ச்சியடைந்த பாரதம் 2047: நல்லாட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஒரு கட்டமைப்பாக ஒருங்கிணைந்த மனிதநேயம்" என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய மாநாட்டை தொடங்கி வைத்ததில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த மனிதநேயத்தை வழிகாட்டும் கொள்கையாகக் கொண்டு, ஆளுகை மற்றும் மேம்பாட்டிற்கான மாற்றத்தைக் கொண்டு வரும் அணுகுமுறைகளை மையமாகக் கொண்ட பல்வேறு களங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற பேச்சாளர்களின் கருப்பொருள் விவாதங்கள் இந்த மாநாட்டில் நடைபெறுகின்றன.
ஆளுநரது உரையில், பண்டிட் தீனதயாள் உபாத்யாய அவர்களால் வெளிப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் தத்துவம், பாரத நாகரிகத்தின் அடிப்படை மதிப்புகளை எவ்வாறு உள்ளடக்கியது, நமது பன்முகத்தன்மை கொண்ட நெறிமுறைகளுடன் இணக்கமாக தனிநபர் கண்ணியம், சமூக உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை நிலைநிறுத்தும் பாரதத்தின் முழுமையான மாற்றத்தை ஊக்குவிக்கிறது என எடுத்துரைத்தார்.
பிரதமரின் தலைமையில், செயல்பாட்டிலூள்ள ஒருங்கிணைந்த மனிதநேயம், மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் நலத்திட்டங்களும் கடைசி மனிதன் வரை சென்றடைவதை உறுதி செய்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே அவநம்பிக்கையை உருவாக்கி, தேசிய விடுதலை இயக்க தியாகிகளின் கனவுகளை நிறைவேற்றுவதைத் தடுத்த கட்டமைப்புகள் மற்றும் நிர்வாக அமைப்புகளில் தொடர்ந்த காலனித்துவ மரபிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இந்த அடிப்படைத் திருத்தம், நான்கு கோடிக்கும் மேற்பட்ட வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்கிய பிரதமரின் வீட்டுவசதித் திட்டம்; ஒவ்வொரு வீட்டிற்கும் சமையல் எரிவாயுவை உறுதிப்படுத்தி வரும் உஜ்வாலா திட்டம்; உலகளாவிய சுகாதார காப்பீட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் மற்றும் மருந்துகளை மலிவு விலையில் வழங்கும் மக்கள் மருந்தக நிலையங்கள் போன்ற பல முன்முயற்சிகளுக்கு வழி வகுத்துள்ளது. தூய்மை இந்தியா இயக்கம், சுகாதார சேவை முறையை மாற்றியுள்ளது, குறிப்பாக, பெண்களுக்கு கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களையும் (பிவிடிஜிக்கள்) ஜன் தன் – ஆதார் – கைப்பேசி ஆகிய மூன்று சேவைகள் மூலம் நிதி உள்ளடக்கத்தை செயல்படுத்துவதும் நிர்வாகத்தில் நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை மீட்டெடுத்துள்ளது, அத்துடன் குடிமக்களுக்கு கண்ணியத்தை உறுதி செய்துள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் தொழில்முனைவோரில் குறிப்பாக கிராமப்புற மகளிர் மற்றும் இளைஞர்கள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆம் ஆண்டின் கீழ் மறுவரையறை செய்யப்பட்ட கல்வி ஆகியவை ஒருங்கிணைந்த மனிதநேய வெளிப்பாட்டை உறுதியான முன்னேற்றமாக மேலும் எடுத்துக்காட்டுகின்றன.
இன்று, பாரதம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறத் தயாராக உள்ளது - இரக்கம் மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தில் வேரூன்றிய சமத்துவமான, உள்ளடக்கிய வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. இந்த மறுமலர்ச்சி பொருளாதாரத்திற்கு அப்பால் அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் காசி-தமிழ் சங்கமம் போன்ற கலாசார மறு இணைப்புகளாக விரிவடைந்து நிற்கிறது.
"ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற குறிக்கோளில் பொதிந்துள்ள இந்தியாவின் உலகளாவிய பார்வை, உலகளாவிய சகோதரத்துவத்தையும் பகிரப்பட்ட எதிர்காலத்தையும் ஊக்குவிக்கும் ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் கொள்கைகளை மேலும் பிரதிபலிக்கிறது. இந்த மறுமலர்ச்சி பாரதம், ஆன்மிக செழுமையுடன் பொருள் மற்றும் அறிவுசார் வளத்தைக் கலந்து, 2047 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக வளர்ந்த, சுயசார்பு மற்றும் இரக்கமுள்ள பாரதத்தை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேறுகிறது எனத் தெரிவித்தார்.






கருத்துகள்