அஸ்ஸாம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூத்த அலுவலர் லஞ்ச வழக்கில் கைது ரூபாய். 2.62 கோடி பறிமுதல்!
சான்றிதழ் அளிப்பதற்காக ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார்.
அவருக்கு நாடு முழுவதும் உள்ள 9 ஆவணங்களின் படி நிலம் சொத்துகள் மற்றும் 20 அடுக்குமாடிக் குடியிருப்புகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது
அஸ்ஸாமில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் ஆணையத்தின் (NHIDCL) அலுவலரை லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ கைது செய்தது.
மைஸ்னம் ரிட்டன் குமார் சிங் அஸ்ஸாமின் தலைநகர் கௌஹாத்தியிலுள்ள NHIDCL மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்தார்.
அஸ்ஸாமில் டெமோவ் முதல் மோரன் வரை உள்ள புறவழிச் சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-37-ஐ நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒரு தனியார் நிறுவனத்திடம் பணி நீட்டிப்பு மற்றும் பணி நிறைவுச் சான்றிதழ் வழங்குவதற்காக அவர் ரூபாய்.10 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் சிபிஐ சோதனையில் அவரிடமிருந்து ரூபாய். 2.62 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான, நாடு முழுவதும் உள்ள 9 ஆவணங்களில் கண்டுள்ள நிலம் சொத்துகள் மற்றும் 20 அடுக்குமாடிக் குடியிருப்புகள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆடம்பர வாகனங்கள் வாங்கியதற்கான ஆவணங்களையும் சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பிரதிநிதியான மோகன் லால் ஜெயின், பினோத் குமார் ஜெயின் என்பவரையும் சிபிஐ கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கௌஹாத்தியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்




கருத்துகள்