தற்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிந்துரை ஏற்கப்பட்டு சூரியகாந்த் தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டால்
2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி வரை 14 மாதங்கள் இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகிப்பார். உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் பெயர் பரிந்துரை !
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், ஓய்வு முன் நடைமுறைக்கேற்ப, அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்யா காந்தை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளார்.
நியமன நடைமுறைப்படி மத்திய சட்ட அமைச்சகம், தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன்பாக புதிய தலைமை நீதிபதியை பரிந்துரைக்கக் கோரி கடிதம் அனுப்பும். அதற்கமைய, பணியில் உள்ள தலைமை நீதிபதி தன் பணிக்காலத்திற்குப் பிறகு மூத்த நீதிபதியை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைப்பார்.
தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி, 2025 அன்று ஓய்வு பெறுகிறார்.
அதே நாளிலிருந்து நீதிபதி சூர்யா காந்த் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் வாய்ப்பு உள்ளது.
நீதிபதி சூர்யா காந்த் குறித்து முக்கிய விவரங்கள்:
தற்போது உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி.
முன்னதாக ஹரியானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர்.
தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் நாள்: 24 நவம்பர் 2025
ஓய்வு பெறும் நாள்: 9 பிப்ரவரி 2027 மொத்தப் பணிக்காலம்: சுமார் 1 வருடம் 2 மாதங்கள்
அரசியலமைப்பு சட்டம் Article 124(2): “இந்திய தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள் குடியரசுத் தலைவர் மூலம் நியமிக்கப்படுவர். ஆனால் தலைமை நீதிபதியின் நியமனத்துக்கு முன், தற்போதைய தலைமை நீதிபதியின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் பெற்றிருக்க வேண்டும்.
இதனால், தலைமை நீதிபதி பரிந்துரை என்பது ஒரு அரசியலமைப்புச் சீர்திருத்த நடைமுறை ஆகும்.
இந்தியாவின் நீண்டகாலம் பணியாற்றிய தலைமை நீதிபதி யேஷ்வந்த் விஷ்ணு சந்த்ரசுத் (Y.V. Chandrachud) —
பதவிக்காலம்: 22 பிப்ரவரி 1978 – 11 ஜூலை 1985 மொத்தம்: 7 ஆண்டு 4 மாதங்கள் — இது இதுவரை தலைமை நீதிபதி பணியாற்றியவர்களில் மிக நீண்ட காலம். என்பது குறிப்பிடத்தக்கது






கருத்துகள்