சபரிமலை ஸ்ரீ சுவாமி ஐயப்பன் கோவிலுக்குச் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
சென்ற உலங்கு வானூர்தி இன்று (அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி காலை பத்தனம்திட்டா அருகே உள்ள புதிதாக அமைக்கப்பட்டுள்ள தளத்தில் தரையிறங்கும் போது புதிய கான்க்ரீட் தளத்தில் டயர் சிக்கிக் கொண்ட பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஹெலிகாப்டர் மீட்கப்பட்டது.
பத்தனம்திட்டா அருகே உள்ள பிரதமம் பகுதியில் புதிதாக தயாரிக்கப்பட்ட இறங்குதளத்தில் குடியரசுத் தலைவர் வந்த உலங்கு வானூர்தி காலை 9.05 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஆனால் இறங்கிய சிறிது நேரத்திலேயே அதன் டயர்கள் புதிதாக போடப்பட்ட கான்க்ரீட்டில் சிக்கிக் கொண்டன. இருப்பினும், குடியரசுத் தலைவர் எந்த தாமதமும் இல்லாமல் சாலை வழியாக பம்பைக்கு பயணத்தைத் தொடர்ந்தார்.அதிகாரபூர்வ வட்டாரங்களின்படி, உலங்கு வானூர்தி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே பிரமதம் பகுதியில் உள்ள இறங்குதளத்தில் பணிகள் நிறைவடைந்திருந்தன. இதனால் உலங்கு வானூர்தியின் டயர்கள் காயாத காங்கிரீட்டில் சிக்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
பின்னர், சிக்கிய ஹெலிகாப்டரை அங்கிருந்த காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.தொடர்ந்து, சாலை மார்க்கமாக பம்பை சென்ற குடியரசுத் தலைவர் சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பிறகு, தேவசம் போர்டின் மலையேறும் வாகனம் மூலம் அவர் கோவிலைச் சென்றடைந்தார்.இருமுடி தாங்கி சபரிமலையில் 18 படிகளேறி ஸ்ரீ சுவாமி ஐயப்பனைத் தரிசனம் செய்தார். அவருக்கு தேவசம் போர்டு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தி வைத்தார். பின் சந்தன பிரசாதத்தை வழங்கினார். தொடர்ந்து மாளிகைப் புரத்தம்மன் கோவிலை வழிபட்ட பின்னர் ஜீப் மூலம் பம்பை வந்து நிலக்கல்லில் இருந்து மீண்டும் உலங்கு வானூர்தி மூலம்
திருவனந்தபுரம் சென்ற.குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு இன்று பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தரிசனம் முடித்துச் சென்ற பின் பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாதாந்திர வழிபாடுகள் முடிவடைந்ததால் இன்று இரவு நடை சாத்தப்பட்டு மண்டல பூஜை வழிபாட்டுக்காக நவம்பர் மாதம்.16-ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு அலுவலர்கள் தெரிவித்தனர். சபரிமலை புனிதமான 18 ஆம் படி மற்றும் ஸ்ரீ சுவாமி ஐயப்பன் சன்னிதானத்தில் பெண்கள் புறக்கணிப்பு என திராவிடர் கழகம்,கம்யூனிஸ்டுகள் மற்றும் நாத்தீக கடவுள் மறுப்பு இன்டியக் கூட்டணிக் கட்சியினர் செய்யும் அரசியல் வெறுப்பு மற்றும் அவதூறுப் பிரச்சாரம் இதன் மூலம் முறியடித்தனர்
சபரி மலையின் புனிதம் காக்க இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் ஸ்ரீ சுவாமி ஐயப்பனைத் தரிசனம் செய்தார்.கேரளா திருவனந்தபுரம் சென்றடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் ஆகியோர் வரவேற்றனர்.
தரிசிக்க வரும் பாரதத் திரு நாட்டின் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து மக்கள் கடசி வரவேற்றபதாக தெரிவித்தனர்.












கருத்துகள்