தனிக்கை அறிக்கை அடிப்படையில் பத்திரத்தை தாக்கல் செய்தவரிடம், கூடுதல் தொகை வசூலிக்க சார் பதிவாளர்களுக்கு தடை
நீதிமன்ற உத்தரவு காரணமாக தமிழ்நாடு பதிவுத்துறை பதிவாளர்களுக்கு முன் எச்சரிக்கை சுற்றறிக்கை
தமிழ்நாட்டில் சொத்துக்கள் வாங்குவோர், அதற்கான அரசின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் தான் பதிவுக்கு வரும் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும். இந்தப் பத்திரங்களை, தணிக்கை செய்யும் ஸ்டாம்ப் கலால் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் ஆய்வு செய்வதில், அவர்கள் ஏதாவது காரணம் அடிப்படையில், மதிப்பு வேறுபாடு குறித்து தொகையை, 'வருவாய் இழப்பு' என, அறிக்கையில் குறிப்பிடுகின்றனர்.இந்தக் குறிப்பு அடிப்படையில், சம்பந்தப்பட்ட பத்திரத்தை தாக்கல் செய்தவரிடம், கூடுதல் தொகை வசூலிக்க சார் பதிவாளர் நடவடிக்கை எடுக்கிறார். அது தவறு
இது தொடர்பாக கடிதம் அனுப்பியும், சொத்து வாங்கியவர் கூடுதல் தொகையை செலுத்தவில்லை என்றால், அது குறித்த விபரம், அந்த சொத்தின் வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிடப்படும். இத்தொகையை செலுத்தினால் மட்டுமே, அதில் அடுத்த பரிமாற்றத்துக்கு பத்திரப்பதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்படும். பேலும் பதிவுத்துறை சட்டம் 47-A முதல் 47-A 7 வரை முறையாக கால அளவில் முடிக்கப்படுவதில்லை என்பது ஒருபுறம் இருந்த போதிலும் அதற்கு லஞ்சம் மற்றும் லாவண்யம் காரணம்.
இந்த நிலையில், இது தொடர்பான ஒரு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்ததை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 'தணிக்கைக் குறிப்பை மட்டும் ஆதாரமாக வைத்து, வேறுபாட்டுத் தொகையை சொத்து வாங்கியவர்களிடம் இருந்து வசூலிக்க கூடாது' என உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கருத்து தெரிவித்த பதிவுத்துறை அலுவலர் ஒருவரின் கருத்து
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தணிக்கைக் குறிப்பு அடிப்படையில் கூடுதல் தொகை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், சம்பந்தப்பட்ட பத்திரத்தில் மதிப்பு வேறுபாடு குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) விசாரணை மேற்கொண்டு, இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
அப்போதும் உடன்பாடு ஏற்படவில்லை எனில், மதிப்பு வேறுபாடு குறித்து விசாரிக்க, மேல்முறையீட்டு குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
இப்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றினால் தான், சொத்து வாங்கியவர்களிடம் கண்மூடித்தனமாக கூடுதல் தொகை கேட்பது தடுக்கப்படும்.
நீதிமன்றத் தீர்ப்பால், கூடுதல் தொகை கேட்டு, சார் பதிவாளர்கள் பிறப்பித்த உத்தரவுகள் கேள்விக்குறியதாகி உள்ள. அதே சமயம், சொத்து வாங்குவோருக்கு இதனால் லஞ்சம் இல்லாத நிம்மதி ஏற்பட்டுள்ளது.
என்கிறார். ஆனால் இது பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் பதிவுத்துறை சட்டம் 47-A5 படி IGR வசம் தீர்வு வராமல் நிலுவையில் உள்ள ஆவணங்கள் மற்றும் 47-A6 படி உயர் நீதிமன்றத்தில் உத்தரவுக்கு காத்திருக்க வேண்டிய நிலை மாறவேண்டும்"பதிவுச் சட்டம், 1908" ஆவணங்களின் பதிவு தொடர்பான விதிகளை ஒருங்கிணைக்கும் மத்தியச் சட்டம் கூறும் நிலையில்


கருத்துகள்