தெலுங்கானா மாநிலம்
ஹைதராபாத்திலிருந்து நேற்றிரவு 10.30 மணிக்கு வி காவேரி எனும் தனியார் படுக்கை வசதி சொகுசு ஆம்னிப் பேருந்து 41 பயணிகளுடன் ஆந்திரப்பிரதேச மாநிலம், கர்னூல் வழியாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, கர்னூல் மாவட்டம், 44-வது தேசிய நெடுஞ்சாலையில் சின்ன டேக்கூரு எனுமிடத்தில், நேற்று அக்டோபர் .25 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்று கொண்டிருந்த குடிபோதை நபரின் மோட்டார் சைக்கிள் மீது சொகுசுப் பேருந்து வேகமாக மோதியதில், மோட்டார் சைக்கிளில் குடி போதையில் வந்தவர் தூக்கி எறியப்பட்டுள்ளார். ஆனால், பேருந்தின் அடியில் அந்த மோட்டார் சைக்கிள் மட்டும் சிக்கிக் கொண்டது. பேருந்தின் ஓட்டுநர் அதைக் கவனிக்காமல் வந்த அதிவேகத்தில் பேருந்தை சுமார் 350 மீட்டர் வரை பிரேக் நிற்காமல் ஓட்டியுள்ளார். அதில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் நிரப்பி வெடித்ததில், பேருந்தில் தீப்பற்றி, மளமளவென பேருந்து முழுவதும் தீ பரவியது.
அதிகாலை தூங்கி கொண்டிருந்த பயணிகளில் கீழ் வரிசையில் உள்ள படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மட்டுமே பேருந்தில் இருந்து இறங்கி உயிர் பிழைத்தனர். மேல் படுக்கையில் படுத்துத் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து கீழே இறங்குவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவியது. தீ மற்றும் புகையினால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் பேருந்தில் இருந்த 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த கர்னூல் காவல் துறையினர் தீயணைப்புத் துறையினர், மற்றும் ஆம்புலன்ஸ் வந்தது. அவர்கள் மீட்புந் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்து சாலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கர்னூல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருக்கையில் இருந்தபடியே பலர் உயிருடன் எரிந்து இறந்துள்ளனர். ஆதலால் எலும்புக் கூடுகளாக இருக்கும் இவர்கள் யார் யார் என்பது குறித்து டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படுகிறது. இறந்தவர்கள் சிலரின் உடல்களுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தி அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டும் வருகிறது. கர்னூல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பேருந்து ஓட்டுனரைக் கைது செய்யத் தேடி வருகின்றனர். எரிந்த பேருந்தில் இருந்த 234 ஸ்மார்ட்போன்களால் தீயின் தீவிரம் அதிகரித்ததா? என்ற கோணத்தில் முதலில் விசாரணை நடந்து வந்த நிலையில் தான் குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த நபர் மூலம் என முடிவானது
சொகுசுப் பேருந்துகளில் பயணிகளை ஏற்றி விழாக்காலத்தில் விமானக் கட்டணம் போலவே வருவாய் ஈட்டுவதிலேயே குறியாக உள்ளனர் ஆம்னி பேருந்து நடத்தும் உரிமையாளர்கள் ஆனால் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதில்லை இதை லஞ்ஞ ஊழலில் மிதக்கும் போக்குவரத்துத் துறையும் கண்டு கொள்வதில்லை. விபத்து ஏற்பட்டால் நான்கு புறமும் அவசர வாயில்கள் தப்பிக்க ஏதுவாக அமைக்கப்பட வேண்டும் கண்ணாடிகளை உடைக்க சுத்தியல்கள் இருக்க வேண்டும் இதையெல்லாம் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் எந்த மாநிலத்திலும் பரிசீலிக்கவில்லை. போக்குவரத்துத் தற்காலிக உரிமம் மற்றும் துறையின் அலட்சியமும் பேருந்து உரிமையாளரின் அலட்சியமும் மதுக்கடை இருக்கும் நிலையில் போதை நபர் சேர்ந்து பல உயிர்களைப் பலி வாங்கியுள்ளது.44 பேருடன் நேற்று சென்று கொண்டிருந்த போது, கர்னூல் நகரருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் பேரூந்தின் கீழே இழுத்து செல்லப்பட்டதில், அதன் எரிபொருள் நிரப்பி மீது மோதியுள்ளதால் அது வெடித்துள்ளது. சம்பவம் நிகழ்ந்த போது, பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். தீ விபத்தின் போது ஏற்பட்ட மின்கசிவால், பேரூந்தில் ரிமோட் கதவுகள் பூட்டி கொண்டு திறக்க முடியாமல் போனதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.விபத்தின்போது, ஜன்னல்களை உடைத்து 20 பயணிகள் உயிர் தப்பினர். எனினும், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஆம்னி பேரூந்து விபத்தில் பலர் பலியான சம்பவத்திற்கான காரணம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 234 ஸ்மார்ட்போன்கள் இருந்துள்ளன ரூபாய் 46 லட்சம் மதிப்பிலான இந்த செல்போன்கள் மங்காநாத் என்ற ஐதராபாத் நகரை சேர்ந்த மார்வாடி தொழிலதிபரால் பார்சலாக அனுப்பப்பட்டுள்ளது.
தடயஅறிவியல் நிபுணர்கள் கூறும்போது, அதிலிருருந்த பேட்டரிகள் வெடித்து, அது தீ பரவுதலில் பெரும் பங்காற்றியிருக்கக் கூடும் எனத் தெரிவித்தனர். அந்த செல்போன்கள் மேலும் ஆய்வுக்கு பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அலட்சியம் மற்றும் அதிவேகம் ஆகியவை ஓட்டுநருக்கு எதிரான முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.நமது பாரதக் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விபத்து குறித்து ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ஏற்பட்ட ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் பலர் உயிரிழந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார். விபத்து குறித்துப் பேசிய தீயணைப்புத் துறை அலுவலர், "தீ விபத்துக்குப் பிறகு கண்ணாடியை உடைக்க சுத்தியல்கள் எதுவும் பேருந்தில் இல்லை. மோட்டார் சைக்கிள் மோதிய பிறகு பேருந்தின் ஓட்டுநர் வண்டியை நிறுத்தவில்லை. பேருந்தின் டீசல் தொட்டி தீப்பிடிக்கவில்லை. ஆனால், பேருந்து முற்றிலும் சேதமடைந்து விட்டது. இது குறித்து நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார். பாரதப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், "ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றம் அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூபாய். 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய். 50,000 வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தேகூரு கிராமத்துக்கு அருகில் ஹைதராபாத் - பெங்களூரு வழித்தடத்தில் நடந்த துயரமான பேருந்து தீ விபத்து குறித்து கவலையும் வேதனையும் அடைந்தேன். இந்த துயர சம்பவத்தில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகி உள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கர்னூல் மாவட்டத்தில் சின்ன தேகூர் கிராமத்துக்கு அருகே நடந்த பேருந்து விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதகி்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள்" என தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, "கர்னூல் மாவட்டத்தில் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்குச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆந்திரப் பிரதேச உயர் அலுவலர்களிடம் பேசி நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி மற்றும் பிற நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஜோகுலாம்பா கட்வால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுமாறு உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை மண்னடி, ஜார்ஜ் டவுன் சௌகார்பேட்டை, பகுதிகளில் பெரும்பாலான வீடுகளுக்குள் சகலவித வசதிகளுமிருக்கும்..
ஆனால் அந்தப் பழங்காலக் கட்டிடங்களுக்கு இடைவெளியே இல்லாதது, தெருக்களாக இல்லாமல் சந்துகளாக மட்டுமே இருப்பது போன்றவற்றால் தீ விபத்து போன்றவை அங்கு ஏற்பட்டால் அவசரத்துக்கு அவர்கள் தப்பிக்கவே முடியாது.
அதே போலத் தான் முற்கால பாண்டிநாட்டு மக்கள் வணிகம் செய்த பாண்டி பஜார் மற்றும் தியாகராயநகர், ரங்கநாதன் தெரு ராமநாதன் தெரு டைப் வணிக வளாகங்கள்.
அவசரக் காலங்களில் மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத பகுதிகள்,
அந்த அடிப்படையில் தான் சொகுசுப் பேருந்துகளும். உள்ளே உட்காரவோ படுக்கவோ சகல வசதிகளுமிருக்கும். ஆனால்
அதற்குள் அமர்வதற்கு முன்பு போதிய இடமின்மையால் அவ்வளவு நெருக்கடிகளைப் பயணிகள் சந்திக்க வேண்டியதிருக்கும்.
பயணிகள் சுலபமாக நடமாடுவதற்கே இடமில்லாத போது தீ பரவல் போன்ற அவசரக் காலங்களில் எப்படி தப்பிப்பது?
அதனால் தான் சொகுசு பேருந்துகளில் விபத்து என்றால் தப்பிப் பிழைப்பது பெரும் கஷ்டம்
1995 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்திரம்- பொடவூர் விபத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கண்டக்டர் கூட தப்பிக்க முடியாமல் அப்படியே கருகிப்போன JJTC எலும்புக்கூடு பேருந்தை, பணிமனைக்கு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு உதவி செய்து இழுத்துச் சென்றதை யாரும் மறந்திருக்க வாய்ப்பேயில்லை.
























கருத்துகள்