முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேச விடுதலை வரலாற்றில் தியாக வேங்கை முடிசூடா மன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு தினம்

தேச விடுதலை வரலாற்றில் தியாக வேங்கை முடிசூடா மன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு தினம்


சிவகங்கை  சமஸ்தானத்தில் 20 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரம் வைத்திருந்து தமிழ்நாடு முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தை ஙில காலம்  ஓ. பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்து திரும்பவும் வழங்கிய நிலை போல

மன்னராட்சியில் வீர மங்கை தென்னகத்தின் ஜான்சி ராணியான வேலு நாச்சியார் ஆட்சியின் தளவாய் பிரதானியாகவும் பின் முடிசூடா  மன்னராகவும் விளங்கி



மீண்டும் சிவகங்கை ஜமீனில் வேலுநாச்சியார் அரியணை அமர்த்திய நிலையில் நட்பை காக்க உயிர் நீத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தியத்திற்கு எதிராக சுதந்திர தியாகிகள் மன்னர் பூலித்தேவுக்கு சற்றே பின் போராடிய  வீரர்கள் மருது பாண்டியர் சகோதர்களின்  தூக்கிலிடப்பட்ட மதுரை ஜில்லா அமராவதி தாலுகா திருப்பத்தூர் கோட்டை கொத்தளத்தில் வாதமரத்தில் தூக்கிலிடப்பட்ட 224-வது நினைவு தினம் இன்று. சிவகங்கை சீமையை மீட்டு வீரவேலுநாச்சியாரை அரியணையில் அமர்த்தி அழகுபார்த்த சிங்கங்கள்.நாட்டிற்காகவும் காளையர் கோவில் கோபுரம் காக்கவும், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை நட்பை பாதுகாக்க இன்னுயிர் நீர்த்த மன்னர் மருதுபாண்டிய சகோதர்களை பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பாக வணங்கி அஞ்சலி செலுத்தும் முகத்தான்..மாவீரர்களின் புகழ் நிடித்து நிலைக்கட்டும்! 






பிரிட்டிஷ் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி ஆதரவாளர் ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கும்பெனிப் படை 1772 ஆம் ஆண்டில் சேதுபதி சமஸ்தானம் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்தது. இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பாராத சிவகங்கை மேதகு மன்னர் முத்து வடுகநாதர் தனது இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் காளையார் கோவிலில் ஆங்கிலேயர் குண்டு வீச்சுப் போரில் பலியானதால் அவரது முதல் மனைவி பட்டத்தரசி வேலுநாச்சியார், சிறு குழந்தையான மகள் வெள்ளச்சி நாச்சியார், அமைச்சர் பியதாணி முல்லையூர் தளவாய் தாண்டவராய பிள்ளை, மன்னர் மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே பாளையக்காரர் கோபால நாயக்கர் உதவியால் விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.




1772 ஆம் ஆண்டிற்கு பின் பிறகு காட்டில் மறைந்து படை திரட்டி வாழ்ந்த மருது பாண்டியர் சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779  ஆம் ஆண்டில்ல் துடங்கி ஆற்காட்டு நவாப், புதுக்கோட்டை தொண்டைமான், பிரிட்டிஷ் கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கண்டு 1780  ஆம் ஆண்டில்  சிவகங்கைச் ஜமீன் சமஸ்தானத்தை  மீட்டு  மேதகு இராணி வேலு நாச்சியாரை மீண்டும் ஆட்சி அரியணையில் அமர்த்தினர்.






இந்தப் போர் சோழவந்தானில் துடங்கி சிலைமான், மணலூர், திருப்புவனம், முத்தனேந்தல் என நடைபெற்று கடைசியாக மானாமதுரையில் போர் பயிற்சியே பெறாத சுதந்திர தாகமிக்க மக்களின் உதவியோடு வெற்றி பெற்றது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த மைசூர் மன்னர் திப்பு சுல்தான் தளபதி ஹைதர் அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. இராணி வேலு நாச்சியாரை மீண்டும் ஆட்சியில் வேங்கை வீர மருதுபாண்டியர் சகோதரர்கள் அமர வைத்தனர்.மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபால நாயக்கர், தேளி யாதுலர், பழசி கேரளா வர்மா, மறைந்த திப்பு சுல்தானின் தளபதி தூந்தாகி வாக் ஆகியோருடன் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கும்பேனி ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய ஜமீன்கள் கூட்டமைப்பை உருவாக்கினர்.






1801 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி சின்ன மருது திருச்சிராப்பள்ளி ஸ்ரீ ரங்கத்தில் வெளியிட்ட  “ஜம்போத் தீவுப் பிரகடனம்” பாரத தேசத்தில் முதல் சுதந்திரப் பிரகடனம் என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.




1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்திற்கு அரை நூற்றாண்டிற்கு முன்பு நடந்த இந்த தென்னிந்திய புரட்சியே முதல் ஒருங்கிணைந்த விடுதலைப் போராட்டமாகும். பல வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. பாஞ்சாலங்குறிச்சி ஜமீன் வீரபாண்டிய கெட்டி பொம்முலு என்ற கட்டபொம்மனின் தம்பி ஊமத்துரைக்கு அடைக்கலம் தந்ததாகக் காரணம் கூறி 1801 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதியில் பிரிட்டிஷ் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது.




காளையார்கோவில் காடுகளில் கொரில்லா முறையில் நடந்த போர். புதுக்கோட்டை விஜய ரகுநாதத் தொண்டைமான், தஞ்சாவூர் ஆண்ட மராத்தி சரபோஜி, எட்டையபுரம் எட்டப்பன், மற்றும் கௌரி வல்லபன் ஆகியோர் ஆங்கிலேயருக்கு படை அனுப்பி உதவி செய்து அவர்களைப் பிடிக்கவும் உதவினார்கள். 

இதுபாஞ்சாலங்குறிச்சி மன்னர் கட்டபொம்மன்


மருது சகோதரர்கள் மற்றும் பிற விடுதலை வீரர்களைப் பிடித்துக் கொடுப்போர்க்கு வெகுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. காளையார்கோவில் காட்டினை அழிப்பவர்க்கு, அளிக்கப்படும் கொடை நிலம் 20 வருடத்திற்கு இலவசக் குத்தகையாக வழங்கப்படும் என ஆங்கிலேயக் கலெக்டர் அக்னியூ அறிவித்தார்.

ஒக்கூர் காட்டில் பதுங்கியிருந்த போது, தன் உதவியாளன் கருத்தானால் சின்ன மருது சுடப்பட்டார். இதற்காக கருத்தானுக்கு ஆங்கிலேயர் வெகுமதியளித்தனர்.


காளையார்கோவிலில் தேடிய களோனல் அக்னியூ அரண்மனை சிறுவயல் காட்டில் மருது சகோதரர்களை கைது செய்தார். கௌரிவல்லப பெரியஉடையனத் தேவரை சிவகங்கையின் இஸ்திமிராக நியமித்தார். சிவகங்கையின் சுதந்திர ஆட்சி முடிவுக்கு வந்தது. சிவகங்கை அரசர் வெங்கை பெரிய உடையனத்தேவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். பாகனேரி நாட்டு அப்பலகாரர் வாளுக்கு வேலி மருது சகோதரர்களை மீட்க செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அவரும் படைகளும் திருப்புத்தூர் வரும் வழியில் தந்திரம் செய்து கொல்லப்பட்டனர்.

மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801 அன்று வாதமரத்தில் தூக்கில் போடப்பட்டு அவர்களுடன்  ஜாலியன் வாலாபாக் படுகொலை போல 500 க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர். மருது மன்னர்கள் தூக்கில் வீர மரணம் நாட்கள் கடந்து அடக்கம் செய்யப் பட்டனர். பெரிய மருதுக்கு ஐந்து மனைவிகள் சின்ன மருதுக்கு மூன்று மனைவிகள் சின்ன மருது ஆண் வாரிசு சிறுவன் "துரைச்சாமி" பினாங்கு தீவுக்கு பலருடன் கப்பலில் நாடு கடத்தப்பட்டார் 500க்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள் முறையான விசாரணையின்றி திருபபுத்தூர் முழுவதும் தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் கடைசி விருப்பப்படி அவர்களது சமாதி காளையார் கோவில் முன்பு புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் கூகுள் பார்க் எனும் ஆங்கிலேயருக்கு மன்னர் வழங்கிய சுவிடிஸ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் மூன்று நாட்களுக்கு முன் நரிக்குடி பகுதியில் இருந்து வந்த உறவினர் கள் நல்லடக்கம் செய்தனர் என்பதும் ஆனால் அதன் பின்னர் காளையார்கோவில் எதிரில் அஸ்தி கலசம் அடக்கம்  செய்து அருளாசி வழங்கி வரும் மன்னர்களை போற்றி அரசு சார்பாக ஆண்டு தோறும் காலை எட்டு மணிக்கு மாவட்ட ஆட்சியர்  தேசிய கொடி ஏற்றி அஞ்சலி செலுத்தியதும் பல அரசியல் கட்சி மற்றும் பலரும் அஞ்சலி செலுத்தும் நிலையில் வாரிசுதாரர்கள் சார்பாக பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது.





வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மலேசியா(பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.   மருது மன்னர்கள்  ஜாதி மதம் கடந்த ஒரு திருப்பணியாளர்கள் நரிக்குடி பள்ளி வாசல் திருப்பத்தூர் பள்ளிவாசல் சமஸ்கான் தர்ஹா,  கிருஸ்தவ தேவாலயங்கள் மற்றும் குன்றக்குடி  மயில்  மண்டபம் போல பல திருப்பணிகளை வரலாறு பதிவு  செய்துள்ளது  இது வரலாறு காலகாலமாக பேசப்படும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அரசு மதுக் கடைகள், கிளப்புகள் மூட ஆட்சியர் அறிவிப்பு





மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் அரசு விழா நினைவு தினம் நடைபெற உறுதி செய்யும் வகையில், மேற்கண்ட கடைகள் மற்றும் கிளப்புகள் குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் முழுமையாக மூடப்பட வேண்டும் என ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறும் மருது சகோதரர்கள் தூக்கிலகடப்பட்ட 224வது நினைவு தினத்தை முன்னிட்டு, அமைதியைப் பேணும் வகையில், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் (FL2) கிளப்புகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி அறிவித்துள்ளார்.

மூடும் நாட்கள் மற்றும் நேரம்:

2025 அக்டோபர் 23ஆம் தேதி நேற்று பிற்பகல் முதல்,

2025 அக்டோபர் 24ஆம் தேதி முழுவதும்

இந்தக் கடைகள் மற்றும் கிளப்புகள் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மூடப்படும் முக்கியப் பகுதிகளின் விவரம்:

1. திருப்பத்தூர் பகுதி:

FL2 கிளப்: கேசினோ ராயல் ரெக்கிரியேஷன் கிளப்.

டாஸ்மாக் மதுக்கடைகள்: 7571 (காரைக்குடி ரோடு), 7740 (மின்நகர் – சிவகங்கை ரோடு). 2. சிவகங்கை பகுதி:

FL2 கிளப்: 7 ஸ்டார் ரெக்கிரியேஷன் கிளப், கிங்ஸ் ரெக்கிரியேஷன் கிளப்.

டாஸ்மாக் மதுக்கடைகள்: 7552 (திருவள்ளுவர் தெரு), 7556 (பிள்ளைவயல் காளியம்மன் தெரு), 7414 (இரயில்வே ஸ்டேஷன்), 7577 (ராகினிபட்டி), 7514 (அஜீஸ் தெரு).                                                                         3. மானாமதுரை பகுதி:


FL2 கிளப்: ரோஜா ரெக்கிரியேஷன் கிளப்.

டாஸ்மாக் கடைகள்: 7541 (             மானாமதுரை நகர்), 7544 (மானாமதுரை இரயில்வே ஸ்டேஷன்), 7663 (கீழமேல்குடி), 7706 (வளநாடு விலக்கு – இராமேஸ்வரம் நெடுஞ்சாலை) உட்பட 6 கடைகள்.                      4. திருப்புவனம் பகுதி:

FL2 கிளப்: வைகை ஸ்போர்ட்ஸ் கிளப், ஸ்டால் ரெக்கிரியேஷன் கிளப்.

டாஸ்மாக் மதுக் கடைகள்: 7685 (நெல்முடிகரை), 7682 (புலியூர்), 7547 (வன்னிக்கோட்டை கிராமம்), 7675 (கலியாந்தூர்) உட்பட 4 கடைகள்.இது தவிர, திருக்கோஷ்டியூர் (2 கடைகள்), மதகுபட்டி (2 கடைகள்), திருப்பாச்சேத்தி (1 கடை), பூவந்தி (1 கடை) ஆகிய பகுதிகளிலும் உள்ள குறிப்பிடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.



மாவட்டம் முழுவதும் மருது சகோதரர்கள் நினைவு தினம் அமைதியான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...