இந்தியப் பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் அழைப்பு
140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பு, படைப்பாற்றல் மற்றும் புதுமைகளைக் கொண்டாடும் வகையில், இந்தியப் பொருட்களை வாங்குவதன் மூலம், இந்தப் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடுமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். "இந்தியப் பொருட்களை வாங்கி, அது சுதேசி என்று பெருமையுடன் சொல்வோம்! நீங்கள் வாங்கியதை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் மற்றவர்களும் இதைச் செய்யத் தூண்டுவீர்கள்" என்று திரு. மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;
"140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பு, படைப்பாற்றல் மற்றும் புதுமைகளைக் கொண்டாடும் வகையில் இந்தப் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடுவோம்.
இந்தியப் பொருட்களை வாங்கி, அது சுதேசி என்று பெருமையுடன் சொல்வோம்!
இந்திய பிரதமர் இன்று ஜனாதிபதி மாளிகை சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு-வை சந்தித்தார். அப்போது பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல் துணை ஜனாதிபதி பொன் ராதாகிருஷ்ணனையும் சந்தித்து தீபாவளி வாழ்த்துத் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் இன்று தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் வீரர்கள் மத்தியில் தீபாவளி கொண்டாடினார். வீரர்கள் இனிப்பு வழங்கினார். பின்னர் போர் விமான சாகசங்களை கண்டு களித்தார். இந்த நிலையில்
சமூக ஊடகங்களில் நீங்கள் சதேசியாக வாங்கியதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் மற்றவர்களும் இதைச் செய்யத் தூண்டுவீர்கள்." இதில் பொதுநீதி யாதெனில்:- இறக்குமதி குறைந்தால் மக்கள் தாங்களாகவே சுதேசியாக மாறித்தான் ஆகவேண்டும்.






கருத்துகள்