2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது 90 பேருக்கு முதல்வர் மு. க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
நடிகர் விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் அனிருத், பின்னனி பாடகி ஸ்வேதா மோகன் உள்ளிட்ட 90 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
அதன்படி எழுத்தாளர் முருகேச பாண்டியனுக்கு, பாரதியார் விருது; திரைப்பட பாடகர் கே.ஜே.யேசுதாசுக்கு, எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது; நாட்டிய கலைஞர் முத்துகண்ணம்மாளுக்கு, பால சரஸ்வதி விருது வழங்கப்பட்டது. சிறந்த கலை நிறுவனத்திற்கான விருது, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உள்ள, தமிழ் இசை சங்கத்திற்கும், சிறந்த நாடகக் குழுவிற்கான விருது, மதுரை மாவட்டம், பாலமேடு எம்.ஆர்.முத்துசாமி நினைவு நாடக மன்றத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இன்று சென்னை கலைவாணர் அரங்கில் விருது வழங்கும் விழாவில் அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது. முதல்வர் மு. க.ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.













கருத்துகள்