இன்று நள்ளிரவு முதல் எஸ் ஏ ஆர் பணிகள் காரணமாக வாக்காளர் பட்டியல் முடக்கப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும்.
இன்று நள்ளிரவு முதல் வாக்காளர் சிறப்புத் திருத்தம் பணிகள் நடைபெறும் மாநிலங்களின்
வாக்காளர் பட்டியல் முடக்கப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும். ஆகவே Search by EPIC எனும் ஆப்ஷனைக் கொடுத்தால் உங்களது மாநிலத்தின் EPIC எண் (வாக்காளர் அடையாள அட்டை எண் அளிக்க வேண்டும்.வாக்காளர் பெயர் அதற்கான பட்டியலில் உள்ளதா என்பதை ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
1.இந்தியத் தேர்தல் ஆணையம் https://voters.eci.gov.in/ அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்திற்கு செல்ல வேண்டும். 2. பின் அதன் வலதுபுறத்தில் 'Search in Electoral Roll' பகுதியை திறக்க வேண்டும். 3. இப்படி திறக்கும் போது புதிய டேப் (Tab) ஒன்று வரும். அதில், Search by EPIC, Search bu Detail and Search by Mobile என 3 வகைகள் காட்டும். இதில் உங்களுக்குத் தக்கதை தேர்வு செய்ய வேண்டும். 4.பின் விவரங்களைக் கொடுத்தால் உங்கள் பெயர், ஓட்டுச்சாவடி எண், மையம், தொகுதி உள்ளிட்ட விவரங்களைக் காட்டும் 5. Search by Details என்று இருக்கும் முறையை நீங்கள் கொடுத்தால் உங்களின் பெயர்/தகப்பனார்/கணவர் பெயர், பிறந்த தேதி, இருப்பிடம் போன்ற தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்தத் தகவல்களை உள்ளீடு செய்தால் விவரங்கள் கிடைக்கும்.
மேற்கண்ட நடைமுறைகளில் Search by Mobile என்ற ஆப்ஷன் என்பது எளிதான ஒன்று. இதை தேர்வு செய்தால் வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணைக் கொடுத்தால் OTP வரும். அதை பதிவிட்டால் உரிய விவரங்களை பெற முடியும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை ஒவ்வொரு வாக்காளரும் சரிபார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும். தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பின் படி, வாக்காளர் பட்டியலானது இன்று 28.10.2025 நள்ளிரவு 12 மணியுடன் முடக்கப்படும்.
அதாவது, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் துவங்க உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் கணக்கெடுப்புக்கு முந்தைய நடவடிக்கை தொடங்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் சரியாகக் கூற வேண்டுமானால், இன்று 28/10/2025 நள்ளிரவு முதல் வாக்காளர் சிறப்புத் திருத்தம் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் முடக்கப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும்.
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியலானது ஜனவரி மாதம்.6ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 27 பேர் ஆண்கள். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 ஆகும். மூன்றாம் பாலினத்வர் எண்ணிக்கை 9120. ஆகும்



கருத்துகள்