டார்ஜிலிங் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல்
கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் டார்ஜிலிங்கில் இன்று ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் குடியரசு துணைத்தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன், "கனமழை மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஏற்பட்ட துயரமான உயிரிழப்புகளால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். துயருற்ற குடும்பங்களுக்கு இதயபூர்வமான இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.




கருத்துகள்