இந்திய ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக சிரீஷ்சந்திர முா்மு மூன்றாண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டாா்.
தற்போது ரிசா்வ் வங்கியில் நான்கு துணை ஆளுநர்களில் எம்.ராஜேஸ்வர ராவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம்.8-ஆம் தேதியுடன் முடியும் நிலையில் அவருக்கு பதிலாக சிரீஷ்சந்சிர முா்வை நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்ததாக மத்திய அரசு தகவல் தெரிவித்தன.
அவா் தற்போது ரிசா்வ் வங்கியின் நிா்வாக இயக்குநராக உள்ள நிலையில் அக்டோபர் மாதம்.9-ஆம் தேதி அல்லது அதற்கு பின்னர் ரிசா்வ் வங்கியில் துணை ஆளுநராக பொறுப்பேற்பாா் எனத் தகவல்.
இந்திய ரிசா்வ் வங்கி சட்டம், 1934-ன்படி நான்கு துணை ஆளுநா்கள் இருக்க வேண்டும். எம்.ராஜேஸ்வர ராவ் தவிர டி.ரபி சங்கா், சுவாமிநாதன் ஜே மற்றும் பூனம் குப்தா ஆகிய 3 துணைநிலை ஆளுநா்கள் உள்ளனா்.
எம்.ராஜேஸ்வர ராவ் 2020, ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் மூன்றாண்டுகளுக்குத் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டாா். அதன் பிறகு 2023- ஆம் ஆண்டில் அவரது பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. 2024- ஆம் ஆண்டில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டதில் அக்டோபர் மாதம்.8-ஆம் தேதியுடன் அவா் 5 ஆண்டு காலத்தின் பதவிக்காலத்தை நிறைவுசெய்யவுள்ளாா்


கருத்துகள்