தீபாவளிக்கு முன்னதாகவே பத்து மணி நேரம் முன் அயோத்தியில் நடைபெற்ற மஹா தீப உற்சவத்திற்காக சரயு நதிக்கரையில் 2100 பக்தர்கள் ஓரே நேரத்தில் ஆரத்தி எடுத்தனர்
இந்த ஆண்டு அயோத்தி கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தது அயோத்தியாவில் நடைபெற்ற தீபாவளி மஹாதீபோற்சவ விழா இந்த முறை மேலும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில், இராமாயணத்தின் அத்தியாயங்களை மையமாக
26 லட்சம் வண்ணமய விளக்குகளால், ஜெகஜோதியாக ஜொலித்த அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில். உத்திரப்பியதேச மாநிலம் அயோத்தியாவில் நடைபெற்ற தீபாவளி மஹா தீபோற்சவ விழா இந்த முறை மேலும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில், இராமாயணத்தின் அத்தியாயங்களை மையமாகக் கொண்ட பல்வேறு அம்சங்கள் முக்கிய ஈர்ப்பாக இருக்குமெனத் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ இராமரின் வாழ்க்கை, சீதையின் பாத்திரம், ஹனுமான் சேவை போன்ற முக்கிய அத்தியாயங்கள் ஒளி, ஒலி, கலை வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தார்கள்,
அயோத்தியை முழுமையாக ஒளிரச் செய்யும் இந்த மஹா தீபோற்சவ் விழா உத்திரபிரதேசத்தின் அக்டோபர் மாத சிறப்பம்சமாக உள்ளது இந்த நிலையில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு செருப்பு, டர்பன் அணிந்த சூரிய வம்ச சத்திரியர்கள்! உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான நபர்கள் முன்னர் நடந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர் என்பதை அணைவரும் அறிவார்கள்.
22.01.2024 அன்று அயோத்தியில் ஸ்ரீ ராமர் பிறந்த அதே இடத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று வேறொரு முக்கியமான சம்பவம் நடந்தது.
அயோத்தியை சுற்றியுள்ள 15 கிராமங்களில் வசிக்கும் ஒரு லட்சத்து 50ஆயிரம் சூரிய வம்ச சத்திரியர்கள், 500 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக செருப்பு மற்றும் டர்பன் அணிந்தனர்
இஸ்லாமிய மன்னர் பாபர் ஆட்சியில், ராமஜென்ம பூமி ஆலயம் இடிக்கப்பட்ட போது, அதை காப்பாற்ற வீரமாக போரிட்ட இந்த சூரிய குல சத்திரிய வம்ச வீரர்கள், தங்களது வீரத்தை மீறி கோவில்
இடிக்கப்பட்டதால் மிகவும் மனம் வருந்தினர்.
மீண்டும் இதே இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் வரை, நாங்கள் டர்பன், செறுப்பு அணிய மாட்டோம், குடை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து சூரிய வம்ச சத்திரியர்களும் சபதம் செய்தனர்
தங்கள் முன்னோர்கள் போட்ட சபதத்தை மீறாமல், 500 ஆண்டுகளாக அதாவது ஜந்து
நூற்றாண்டுகளாக இந்த சூரிய வம்ச சத்திரியர்கள், கல்யாணக் காலங்களில் கூட
செருப்பு டர்பன் குடை பயன்படுத்தாமல் வாழ்ந்து காட்டினர் இப்போது அனைத்து கிராமங்களிலும்
சூரியவம்சம்சத்திரியர்களுக்கு 22 ஆம் தேதி அணிந்து கொள்வதற்காக புதியதாக டர்பன் தயாரிக்கப்பட்டு கிராமம் கிராமமாக கும்பாபிஷேகம் டந்த போது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாரானது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து அற்புதமான படங்கள் வெளிவந்தன, இது தற்போது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
ராம ஜென்மபூமி 2025 தீபாவளிக்கு தயாரான நிலையில் ஸ்ரீ ராம ஜென்மபூமி மந்திரின் முதல் தளத்திலிருந்து முதன்முதலில் காட்சிகளாக பிரமாண்டமான ஸ்ரீ ராமர் தர்பாரின் காட்சியை வழங்குகிறது. தெய்வீக மரியாதையை ஊக்குவிக்கவும் கட்டிடக்கலை மகத்துவத்தை வெளிப்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த தளம், ஸ்ரீ ராமரின் அரசவையை அழகாக பிரதிபலிக்கிறது.
முதல் தளத்தில் அழகாக வடிவமைக்கப்பட்ட ஐந்து அரங்குகள் உள்ளன: நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் இதில் உள்ளது. மையத்தில், ஸ்ரீ ராமர், மாதா சீதா, ஹனுமான் மற்றும் ராமரின் சகோதரர்களான பரதன், லட்சுமணன் மற்றும் சத்ருகன் ஆகியோரின் பளிங்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ ராமரும் சீதையும் தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள், ஹனுமானும் பரதனும் அவர்களின் காலடியில் இருக்கிறார்கள், லட்சுமணனும் சத்ருகனும் அவர்களுக்குப் பின்னால் மரியாதையுடன் நிற்கிறார்கள். இந்த காட்சிகள் பக்தர்ளை மெய்சிலிர்க்க வைத்ததுடன், கட்டிடக்கலை அழகை எடுத்துக்காட்டுகின்றன. இந்தாண்டு தீபாவளி சிறப்பு வழிபாடு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும், தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இன்று முக்கிய மஹா தீப உற்சவம் நடைபெற்றது அயோத்தி மாநகரம் 28 லட்சம் தீபங்களால் ஒளிரச் செய்யப்பட்டது .29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றத் திட்டமிடப்பட்டதன் முலம் 2024 ஆம் ஆண்டு (26 லட்சம் அகல் விளக்குகள்) என்ற சாதனை முறியடிக்கப்பட்டது. இவ்விளக்குகள் சரயு நதியின் 56 கரைகள், ராம் கீ பேடி, நகரின் இதரக் கோயில்கள் மற்றும் குடியிருப்புகளில் ஒளிர உள்ளன. தீபாவளிக்கு தமிழ்நாட்டில் நரகாசுர வதம் காரணமானதைப் போல், உத்திரப்பிரதேசில் ஸ்ரீ ராமர் போருக்குப் பின் அயோத்தி திரும்பியதன்
நினைவாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் தற்போது 1,100 டிரோன்கள் வானில் தீபாவளிக்காக பறக்கவிடப்பட்டன. இவற்றில் இராமாயணத்தின் காட்சிகள் ஒளிப்படங்களாக சித்தரிக்கப்பட்டன. இதுகுறித்து மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் கூறிய போது, “அயோத்தியின் வெறும் தீபாவளித் திருநாள் விழாவாக அன்றி ஆன்மிகம், நம்பிக்கை, கலாச்சாரம் உள்ளிட்டவற்றின் மெகா விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடமும் தீபாவளிக்கு வரும் வெளிநாட்டவர்கள் இடையே இது சர்வதேச அளவில் இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும். இதைக் காண வரும் லட்சக்கணக்காக பொதுமக்களுக்காக அயோத்தியில் சிறப்பு போக்குவரத்துடன் பாதுகாப்புகளும் பலப்படுத்த உள்ளன” என்றார்.அயோத்தியின் தீபாவளி நிகழ்ச்சிக்காக அரசு வழக்கம் போல், தன்னார்வலர்கள் உதவியைப் பெற முடிவு செய்துள்ளது. இப்பணிக்கு வர விரும்புபவர்கள் மாநில அரசின் இணையதளத்தில் சுயவிவரங்களைப் பதிவு செய்யலாம். இதில் தமிழ்நாட்டிலிருந்தும் பலர் தன்னார்வலர்களாகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்து பதிவு செய்து சென்றுள்ளனர்.














கருத்துகள்