அமெரிக்கா எங்களின் எதிரி ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் போர் நடவடிக்கை என ரஷ்யா தெரிவித்தது.
உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் நான்காவது ஆண்டை எட்டுவதற்கு சில மாதங்களே உள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முயற்சிக்கிறார். தற்போது ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு எதிராகத் தடைகளை டிரம்ப் அறிவிப்பது இதுவே முதல் முறை.
ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்காஅது தொடர்பாக, ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யா எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் போர் நடவடிக்கை. ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான மோதலுக்கான மூல காரணங்களைத் தீர்க்க வேண்டும் அமெரிக்கா எங்களின் எதிரி. சமாதானத்தை உருவாக்குபவர் டொனால்ட் டிரம்ப். இப்போது ரஷ்யாவுடனான போர்ப் பாதையில் முழுமையாக இறங்கிவிட்டார்.
அமெரிக்கா ஏமாற்றப்பட்ட ஐரோப்பாவுடன் தன்னை கூட்டாளியாக இணைத்துக் கொண்டுள்ளது. உக்ரைனில் போரை நிறுத்த, ரஷ்யாவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் எதிர்மறையானவை. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






கருத்துகள்